வாகன இறக்குமதி மீதான 50% கூடுதல் கட்டணம்! வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட சுங்க இறக்குமதி வரியின் மீதான தற்காலிக 50% கூடுதல் கட்டணத்தை 2026 டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிறப்பித்துள்ள உத்தரவுக்கு அமைய, இந்த நீட்டிப்பு ஓகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, தொடர்புடைய அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு, பொது...

குறிப்பிட்ட சில வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத கூடுதல் சுங்க வரி கட்டணத்தை 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரி நீட்டிப்பானது கடந்த ஓகஸ்ட் 15 முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதற்கமைய, சம்பந்தப்பட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வாகன இறக்குமதிகளுக்கு இந்த கூடுதல் கட்டணம் தொடர்ந்து அறவிடப்படும்.