PulseNews
தொழில்நுட்பம்

ரூ.47 ஆயிரம் வரை தள்ளுபடி; யாருக்கெல்லாம்? எந்தெந்த கார்களுக்கு? டாடா டக்கர் அறிவிப்பு!

Tata cars: பண்டிகைக் காலத்தில் புதிய கார் வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தியை டாடா கூறி உள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபல எஸ்யூவி மாடல்களான டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி ஆகியவற்றுக்குச் சிறப்புச் சலுகைகளைத் தற்போது அறிவித்துள்ளது. இதன்படி, இந்த இரண்டு கார்களுக்கும் ₹47,000 வரையிலான சிறப்புப் பலன்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஆகஸ்ட் மாதம் முழுவதும்

ஆகஸ்ட் 16 முதல் 26ஆம் தேதி வரை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டாலும், நிறுவனத்தின் இந்த அதிரடிச் சலுகை ஆகஸ்ட் மாதம் முழுவதும் கேரளாவில் மட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கும்.

மற்ற மாநில வாடிக்கையாளர்களுக்குப் பண்டிகைக் காலத்தில் வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்படலாம். எனவே சலுகை விதிகள் மற்றும் இறுதி ஆன் ரோடு விலை குறித்து அருகிலுள்ள டீலர்களிடம் அறிந்துகொள்ளலாம்.

12 வாரங்கள் காத்திருப்பு காலம்

இந்த எஸ்யூவி கார்களுக்குக் குறைந்தபட்சம் 12 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளதால், இப்போது முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் டெலிவரி காலக்கெடு மற்றும் வாகன இருப்பு நிலவரத்தை டீலர்களிடம் கேட்டு உறுதி செய்துகொள்வது அவசியம்.

இதற்கிடையே, 2026 ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களின் புதிய ஸ்டெல்த் எடிஷனை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வெளிப்புற வடிவமைப்பு முழுக்க முழுக்க ஸ்டெல்த் பிளாக் நிறத்திலும், 19 இன்ச் அலாய் வீல்கள் மேட் ஸ்டெல்த் பிளாக் ஃபினிஷிலும், முன்புற ஃபெண்டர்களில் பிரத்யேக ஸ்டெல்த் பேட்ஜுடனும் ஸ்டாண்டர்ட் மாடலிலிருந்து முற்றிலும் மாறுபட்டுக் காட்சியளிக்கிறது.

டிசைன் எப்படி?

உட்புற கேபின் முழுமையான கருப்பு நிற தீம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கார்பன் நொயர் லெதரெட் இருக்கைகள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சென்டர் ஆர்ம்ரெஸ்டுடன் கூடிய பவர்டு மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் உள்ளன.

இன்ஜின் எப்படி?

இதன் இன்ஜின் அமைப்பைப் பொறுத்தவரை, எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 170 hp பவர் மற்றும் 280 Nm டார்க் திறனை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், அதேபோல் 170 hp பவர், 350 Nm டார்க் திறனைத் தரும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் என இரண்டு வலிமையான தேர்வுகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ரூ.47 ஆயிரம் வரை தள்ளுபடி; யாருக்கெல்லாம்? எந்தெந்த கார்களுக்கு? டாடா டக்கர் அறிவிப்பு!
PulseNews சுருக்கம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு புதிய கார் வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகையைச் சிறப்பிக்கும் வகையில், தனது பிரபலமான எஸ்யூவி மாடல்களான டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி கார்களுக்கு நிறுவனம் சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்த இரண்டு கார் மாடல்களுக்கும் வாடிக்கையாளர்கள் ₹47,000 வரையிலான சலுகைகளைப் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புச் சலுகைகள் ஆகஸ்ட் 16 முதல் 26ஆம் தேதி வரையிலான காலத்திற்குப் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology