PulseNews
தொழில்நுட்பம்

பார்ட்டி பிரியர்களுக்கு செம ட்ரீட்: ஒரே நேரத்தில் 8 புதிய ஸ்பீக்கர்களை களமிறக்கிய போட்; ரூ. 9,499 முதல் விலை ஆரம்பம்!

இந்தியாவின் பிரபல ஆடியோ தயாரிப்பு நிறுவனமான போட் (boAt), தனது புதிய ‘பார்ட்டிபால்’ சீரிஸ் வரிசையில் 8 அதிரடியான பார்ட்டி ஸ்பீக்கர்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பார்ட்டிபால் 650, பார்ட்டிபால் 600 பிளஸ், பார்ட்டிபால் 500, பார்ட்டிபால் 390 பிளஸ், பார்ட்டிபால் 230, பார்ட்டிபால் பூம், பார்ட்டிபால் அல்ட்ரா, பார்ட்டிபால் ரம்பிள் ஆகிய மாடல்கள் அடங்கும். இந்த ஸ்பீக்கர்கள் மாடல்களுக்கு ஏற்ப போட் சிக்னேச்சர் சவுண்ட் (boAt Signature Sound), கரோக்கி கருவிகள், ஆர்ஜிபி லைட்டிங் (RGB Lighting), புளூடூத் இணைப்பு மற்றும் மைக்ரோஃபோன் ஆதரவு போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளன. கரோக்கி அமர்வுகள், வீட்டு விசேஷங்கள், பார்ட்டிகள் மற்றும் பெரிய கூட்டங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கர்களின் ஆரம்ப விலை ரூ. 9,499 ஆகும். விலை & விற்பனை விவரங்கள் பார்ட்டிபால் 650: ரூ. 23,999 பார்ட்டிபால் 600 பிளஸ்: ரூ. 21,999 பார்ட்டிபால் 500: ரூ. 18,999 பார்ட்டிபால் 390 பிளஸ்: ரூ. 13,449 பார்ட்டிபால் 230: ரூ. 9,499 (மிகவும் குறைந்த விலை மாடல்) இதில் பார்ட்டிபால் பூம், பார்ட்டிபால் அல்ட்ரா மற்றும் பார்ட்டிபால் ரம்பிள் ஆகிய 3 மாடல்களும் ஆஃப்லைன் கடைகளில் மட்டுமே விற்பனை செய்யப்படும் மாடல்கள் என நிறுவனப் பிரதிநிதி உறுதிப்படுத்தியுள்ளார். இந்த ஸ்பீக்கர்கள் போட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளம், அமேசான் இந்தியா, ஃபிளிப்கார்ட் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனைக்குக் கிடைக்கின்றன. முக்கிய மாடல்களின் சிறப்பம்சங்கள் 1. பார்ட்டிபால் 650 (PartyPal 650): இரு 8-இன்ச் ஸ்பீக்கர் டிரைவர்கள் மற்றும் இரண்டு 2-இன்ச் ட்வீட்டர்களுடன் இணைந்து 300W RMS சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது. போட் சிக்னேச்சர் சவுண்ட், கரோக்கி ப்ரோடியூனர் (Karaoke ProTuner), இன்பில்ட் DJ டிராக்குகள், பாஸ் டிராப் பேட் மற்றும் டைனமிக் RGB லைட்டிங் வசதிகள் உள்ளன. போட் ஹியரபிள்ஸ் செயலி (boAt Hearables App) மூலம் இவற்றை இயக்க முடியும். புளூடூத் 5.3, USB, TF கார்டு, AUX, கிட்டார் இன்புட், வயர்டு மைக் இன்புட் மற்றும் TWS வசதியுடன் 10 மீட்டர் வரை இணைப்புத் திறன் கொண்டது. 2 வயர்லெஸ் UHF மைக்குகள் மற்றும் எளிதாக நகர்த்த உதவும் சக்கரங்கள் (Wheels) இதில் பொருத்தப்பட்டுள்ளன; 5 மணி நேரம் வரை பேட்டரி நீடிக்கும். 2. பார்ட்டிபால் 600 பிளஸ் (PartyPal 600 Plus): இரு 10-இன்ச் வூஃபர்கள், 2.5-இன்ச் மிட்-ரேஞ்ச் ஸ்பீக்கர் மற்றும் 2-இன்ச் ட்வீட்டருடன் 220W RMS அவுட்புட் வழங்குகிறது. போட் சிக்னேச்சர் சவுண்ட், டைனமிக் லைட்டிங், TWS, ரெக்கார்டிங் மற்றும் போட் ஹியரபிள்ஸ் செயலி ஆதரவு உள்ளது. புளூடூத் 5.3, USB, TF கார்டு, AUX, கிட்டார் கனெக்டிவிட்டி வசதிகளைக் கொண்டுள்ளது. 7,500mAh பேட்டரி வசதி கொண்டது; இதன் பாக்ஸில் வயர்லெஸ் மைக்ரோஃபோன், பவர் கேபிள் மற்றும் AUX கேபிள் ஆகியவை வழங்கப்படுகின்றன. 3. பார்ட்டிபால் 500 (PartyPal 500): 200W RMS சவுண்ட் அவுட்புட் வழங்கும் இந்த ஸ்பீக்கர், போட் சிக்னேச்சர் சவுண்ட் மற்றும் கரோக்கி ஆட்டோ-டியூனர் வசதிகளைக் கொண்டுள்ளது. UHF மைக்ரோஃபோன் இணைப்பு, RGB லைட்டிங், TWS மற்றும் FM ரேடியோ ஆதரவு உள்ளது. வால்யூம், பாஸ், ட்ரெபிள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள் மற்றும் ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் ஆகியவற்றுடன் இணைக்கும் வசதி கொண்டது. 4. பார்ட்டிபால் 390 பிளஸ் (PartyPal 390 Plus): இரு 8-இன்ச் டிரைவர்கள் மற்றும் 2-இன்ச் ட்வீட்டருடன் 45Hz முதல் 20kHz வரையிலான அதிர்வெண் திறனைக் கொண்டுள்ளது. போட் சிக்னேச்சர் சவுண்ட், வயர்டு மைக்ரோஃபோன் ஆதரவு, கிட்டார் இன்புட், ரெக்கார்டிங், FM ரேடியோ மற்றும் TWS பேரிங் வசதிகளைக் கொண்டுள்ளது. புளூடூத் 5.3, USB, TF கார்டு மற்றும் AUX போர்ட்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பார்ட்டி பிரியர்களுக்கு செம ட்ரீட்: ஒரே நேரத்தில் 8 புதிய ஸ்பீக்கர்களை களமிறக்கிய போட்; ரூ. 9,499 முதல் விலை ஆரம்பம்!
PulseNews சுருக்கம்

இந்தியாவின் முன்னணி ஆடியோ தயாரிப்பு நிறுவனமான போட் (boAt), தனது புதிய 'பார்ட்டிபால்' வரிசையில் 8 அதிநவீன ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பார்ட்டிபால் 650, 600 பிளஸ், 500, 390 பிளஸ், 230, பூம், அல்ட்ரா மற்றும் ரம்பிள் ஆகிய மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய ஸ்பீக்கர்கள் போட் சிக்னேச்சர் சவுண்ட், கரோக்கி வசதி மற்றும் ஆர்ஜிபி லைட்டிங் உள்ளிட்ட சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன. இந்த ஸ்பீக்கர் தொடரின் ஆரம்ப விலை ரூ. 9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology