PulseNews
தொழில்நுட்பம்

Indias Cheapest Car: அது எனக்கு தான்..! நாட்டின் மலிவான காரை மீண்டும் களமிறக்கும் டாடா - மின்சார எடிஷன், ரேஞ்ச்

Indias Cheapest Car: நாட்டின் மலிவான கார் மாடலை மின்சார எடிஷனில் களமிறக்கும் டாடாவின் திட்டம் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நாட்டின் மலிவான கார் மாடல்:

முதல்முறையாக கார் வாங்குபவர்களில் பெரும்பாலானோர், மலிவு விலை மாடலையே தேர்வு செய்வார்கள். முந்தையை காலத்தில் 10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் மிகவும் சொற்பமான ஆப்ஷன்களே உள்ளூரில் இருந்தன. ஆனால், தற்போது வாடிக்கையாளர்களின் பலதரபட்ட தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான மாடல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்நிலையில், நாட்டின் முக்கிய கார் உற்பத்தியாளரான டாடா, ஒருகாலத்தில் நாட்டின் மிகவும் மலிவு விலை காராக இருந்த மாடலை மீண்டும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக டாடா உள்ளிட்ட பல்வேறு தரப்பிடமிருந்து இதுவரை கிடைத்த தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டாடா நானோ மீண்டும் வருகிறதா?

வெறும் ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் நாட்டின் மிகவும் மலிவான கார் மாடலாக அறிமுகமான, டாடா நானோவின் விற்பனை மற்றும் உற்பத்தி பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டது. ஆனாலும் வாகன ஆர்வலர்கள் இடைஎயே இந்த மாடல் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் பேசப்படுகிறது. இந்நிலையில் தான் நானோ மீண்டும் வரக்கூடும் என்பதை உணர்த்தும் வகையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பல படங்கள் இணையத்தில் அவ்வப்போது பரவுவதை நாம் காண்கிறோம். இருப்பினும், டாடா மோட்டார்ஸ் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. ஆனால், அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் டாடா மோட்டார்ஸின் இந்திய வடிவமைப்புத் தலைவரான அஜய் ஜெயினிடம், நானோ மீண்டும் சந்தைக்கு வருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “முயற்சி செய்து பார்ப்போம். நானோ இந்தியாவை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்த ஒரு நம்பமுடியாத புதுமையான கார். நானோவை மீண்டும் அந்த வரைபடத்தில் இடம்பெறச் செய்வது மகிழ்ச்சி அளிக்கும். நானோ மீண்டும் சந்தைக்கு வந்தால், அது அந்த ஹேட்ச்பேக்கின் மின்சார எடிஷனாக இருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார். இது தனது தனிப்பட்ட விருப்பம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டாடா நானோ கவனத்தை ஈர்க்குமா?

அக்காலத்தில் 'நாட்டின் மலிவான கார்' என்று அழைக்கப்பட்டது தான் நானோ எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலாக இருந்தது. அது நான்கு சக்கர வாகன உரிமையை எளிதாக்கிய போதிலும், பல வாங்குபவர்கள் நானோவிற்குப் பதிலாக பெரிய ஹேட்ச்பேக் கார்களைத் தேர்ந்தெடுத்ததால், டாடாவால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. இருப்பினும், தற்போது எம்ஜி கோமட் போன்ற சில சிறிய/மைக்ரோ கார்கள் சந்தையில் உள்ளன. மேலும் வின்ஃபாஸ்ட் விஎஃப்3-ம் மாடலும் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. நானோ என்ற பெயரை மீண்டும் கொண்டு வருவது, இந்த சர்வதேச வாகன உற்பத்தியாளர்களுக்கு டாடா அளிக்கும் பதிலாக இருக்கலாம். இது சாத்தியமா? என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

நானோ என்ற பெயர் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டால், அது மீண்டும் உலகின் மலிவான காராக இருக்காது என்பதை முதலில் உணர வேண்டும். பெட்ரோல் இன்ஜினில் இயங்குவதற்குப் பதிலாக, பல நவீன அம்சங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுடன் கூடிய ஒரு மின்சாரக் காராக சந்தைப்படுத்தப்படலாம். ஒருவேளை நானோ EV வெளிவந்தால், அது ஜெயம் நியோவின் 17 kWh பேட்டரி பேக்குடன் சுமார் 200 கி.மீ. தூரம் பயணிக்கும் திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Nissan SUV: இனி பேச்சே இல்லை..! 36KM மைலேஜ் வழங்கும் ஜப்பான் எஸ்யுவி - 1980KM ரேஞ்ச், இந்தியாவில் எப்படி?

டாடா நிறுவனம் டியாகோ EV-யின் அதே அணுகுமுறையை நானோவிலும் கையாளக்கூடும். அதாவது, மிகவும் அத்தியாவசியமான அம்சங்களை மட்டுமே கொண்ட ஒரு நேர்த்தியான உட்புறத்தை அது வழங்கும். இதனால் நானோ EV ஆனது எம்ஜி கோமட் போன்ற கார்களுக்குப் போட்டியாக இருப்பதுடன், நாட்டில் கிடைக்கும் மிகவும் மலிவு விலை மின்சார கார்களில் ஒன்றாக விலையை நிர்ணயம் பெறலாம்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Indias Cheapest Car: அது எனக்கு தான்..! நாட்டின் மலிவான காரை மீண்டும் களமிறக்கும் டாடா - மின்சார எடிஷன், ரேஞ்ச்
PulseNews சுருக்கம்

இந்தியாவின் மலிவான கார் மாடலை மின்சார வாகனமாக மாற்றும் முயற்சியில் டாடா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. புதிய வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, மலிவு விலை பிரிவில் மின்சார காரை களமிறக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முன்பு 10 லட்ச ரூபாய்க்கும் குறைவான பட்ஜெட்டில் மிகக்குறைந்த கார் விருப்பங்களே இருந்தன. தற்போது வாடிக்கையாளர்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், டாடா நிறுவனம் தனது மலிவான காரின் மின்சார எடிஷனை அறிமுகப்படுத்த உள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology