PulseNews
தொழில்நுட்பம்

100 கோடி ஆண்டுகள் 'லாக்' ஆன பூமி சுழற்சி: விஞ்ஞானிகள் அவிழ்த்த புதிரின் பின்னணி என்ன?

இன்று நாம் ஒரு நாளை 24 மணிநேரம் என்று கணக்கிடுகிறோம். ஆனால், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமி இவ்வளவு நிதானமாகச் சுற்றவில்லை. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சுமார் 100 கோடி ஆண்டுகாலமாக பூமியின் ஒரு நாள் என்பது 19 மணி நேரமாகவே உறைந்து போயிருந்தது என்பதைப் புதிய ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. வழக்கமாக, நிலவின் ஈர்ப்பு விசையினால் கடலில் ஏற்படும் அலைகள் 'வேகத்தடை' போலச் செயல்பட்டு பூமியின் சுழற்சியை மெதுவாக்கும். இதனால் ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு நாளின் நீளம் சுமார் 0.002 வினாடிகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். ஆனால், 200 கோடி முதல் 100 கோடி ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விசித்திரமான சமநிலை ஏற்பட்டது. சந்திரனின் இழுவிசை கடலின் மூலம் பூமியை மெதுவாக்க முயன்றது. சூரியனின் வெப்பம் வளிமண்டலத்தை சூடாக்கி 'காற்றலைகளை' உருவாக்கியது. இது பூமியின் சுழற்சியை வேகப்படுத்த முயன்றது. இந்த இரு எதிர் விசைகளும் ஒரு புள்ளியில் சமமடைந்தன. இதன் விளைவாக, பூமியின் சுழற்சி வேகம் குறையாமல், ஒரு நாள் என்பது சரியாக 19 மணி நேரம் என்ற அளவில் அப்படியே 'லாக்' ஆனது. இந்த 19 மணிநேர 'ஸ்டேண்டிங்' நிலை நமது உயிர் பரிணாமத்தில் முக்கிய தடையாக இருந்தது. அக்காலத்தில் கடலடியில் வாழ்ந்த நுண்ணுயிரிகள் (Cyanobacterial mats) சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஆக்ஸிஜனை வெளியிட்டன. ஒரு நாளின் நீளம் 16 மணிநேரத்திற்கும் குறைவாக இருந்தால், இந்த உயிரினங்களால் போதுமான ஆக்ஸிஜனை வளிமண்டலத்தில் சேர்க்க முடியாது. ஒரு பில்லியன் ஆண்டுகளாக நாள் 19 மணிநேரமாகவே இருந்ததால், பூமியில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்காமல் ஒரே சீராக (Modest levels) இருந்தது. எப்போது பூமி இந்த 19 மணிநேர சுழற்சியிலிருந்து விடுபட்டு, மெதுவாக 24 மணிநேரத்தை நோக்கி நகரத் தொடங்கியதோ, அப்போதுதான் பகல் பொழுது நீண்டது. இதனால் நுண்ணுயிரிகள் அதிக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடிந்தது. இதுவே சிக்கலான பல உயிரினங்கள் உருவாக அடித்தளமாக அமைந்தது. இந்த நீண்ட கால வரலாறு ஒருபுறமிருக்க, இன்றும் கூட பூமியின் சுழற்சி மனிதர்களுக்குத் தெரியாமல் மாறிக்கொண்டே இருக்கிறது. அணு கடிகாரங்கள் (Atomic clocks) மூலம் ஆராய்ந்ததில், பூமியின் உருகிய நிலையில் உள்ள மையப்பகுதியில் (Core) ஏற்படும் மாற்றங்களால் சுழற்சி வேகம் மில்லி வினாடி அளவில் மாறுபடுகிறது. குறிப்பாக, பூமியின் காந்தப்புலத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் (Geomagnetic jerks), பூமியின் சுழற்சியில் சிறு மாற்றங்களை உண்டாக்குகின்றன. நமது பூமி ஒரு காலத்தில் 19 மணிநேர பகலில் உறைந்து கிடந்தது. அந்த நீண்ட கால உறக்கமே வளிமண்டலத்தின் ஆக்ஸிஜன் அளவைத் தீர்மானித்தது. இன்று நமது காலடியில் ஓடிக்கொண்டிருக்கும் உருகிய குழம்பின் அசைவுகள், பூமியின் ஒவ்வொரு வினாடியையும் தீர்மானித்து கொண்டிருக்கின்றன.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
100 கோடி ஆண்டுகள் 'லாக்' ஆன பூமி சுழற்சி: விஞ்ஞானிகள் அவிழ்த்த புதிரின் பின்னணி என்ன?
PulseNews சுருக்கம்

தற்போது ஒரு நாள் என்பது 24 மணி நேரமாகக் கணக்கிடப்பட்டாலும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி இவ்வளவு மெதுவாகச் சுழலவில்லை என்று புதிய ஆராய்ச்சி கூறுகிறது. சுமார் 100 கோடி ஆண்டுகளாக பூமியின் ஒரு நாள் என்பது 19 மணி நேரமாக மட்டுமே நீடித்திருந்தது என்ற ஆச்சரியமான தகவல் இதன் மூலம் தெரியவந்துள்ளது.

சாதாரணமாக நிலவின் ஈர்ப்பு விசையால் கடல் அலைகள் உருவாகி, அவை வேகத்தடை போலச் செயல்பட்டு பூமியின் சுழற்சியைக் குறைக்கின்றன. இதன் காரணமாகவே ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒரு நாளின் நீளம் சுமார் 0.002 வினாடிகள் அதிகரித்து வருகிறது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology