டகால்டி காட்டாத Ducati பைக்.. இருக்கதுலே இதுதான் விலை கம்மி - எவ்ளோ? என்ன வண்டி?

உலகின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று Ducati. மிகவும் விலை உயர்ந்த இந்த பைக்குகள் சாலையில் சென்றாலே அனைவரும் திரும்பி பார்ப்பார்கள்.

Ducati Scrambler Icon:

அந்த Ducati நிறுவனத்தின் இரு சக்கர வாகனத்திலே விலை குறைந்த Ducati Scrambler Icon பைக் பற்றி கீழே காணலாம். விலை குறைவு என்றால் பட்ஜெட் விலை என்று கருதக்கூடாது. ஒரு வீடு கட்டும் அளவிற்கு இதன் விலை உள்ளது.

விலை எவ்ளோ?

இதில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது.

1. Scrambler Icon Dark - ரூபாய் 12 லட்சத்து 75 ஆயிரத்து 073

2. Scrambler Icon Base - ரூபாய் 13 லட்சத்து 93 ஆயிரத்து 633

3. Scrambler Icon 10 Anniversario Rizoma Edition - ரூபாய் 19 லட்சத்து 96 ஆயிரத்து 186

எஞ்ஜின் வசதி:

இதில் 803 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 19 கிலோமீட்டர் வரை மட்டுமே மைலேஜ் அளிக்கும். 6 கியர்கள் உள்ளது. 13.5 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. 795 மி.மீட்டர் இருக்கை உயரம் ஆகும். கருப்பு, சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை கருப்பு நிறத்தில் உள்ளது.

299 கி.மீட்டர் வேகம்:

அதிகபட்சமாக 299 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 65.2 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 71.87 பிஎச்பி குதிரைத்திறன் கொண்டது. 1 கியர் கீழேவும், மற்ற 5 கியர்கள் மேலேவும் பொருத்தப்பட்டுள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி உள்ளது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 257 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கும்.

ரோட் மற்றும் ஸ்போர்ட் மோட்களில் உள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் உள்ளது. அலாய் சக்கரங்கள் உள்ளது. 18 இன்ச் சக்கரம் முன்பக்கமும்,பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

அப்சைட் டவுன் கயாபா 41 மி.மீட்டர் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் கயாபா ரியர் ஷாக் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 176 மி.மீட்டர் ஆகும். 4 லிட்டர் ரிசர்வ் டேங்கர் வசதி உள்ளது. 4.3 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி வசதி உள்ளது. வாய்ஸ் அசிஸ்ட் வசதியும் உள்ளது. 2 ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம் , கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட், லோ பேட்டரி இண்டிகேட்டர்,லோ ப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ ஆயில் இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. எஞ்ஜின் மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால், எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது.

எல்இடி முகப்பு விளக்குகள், பகலிலும் எரியும் விளக்குகளாக பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக், டெயில் விளக்குகள் எல்இடி ஆகும்.

உலகின் புகழ்பெற்ற இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டூக்காட்டி, தனது விலையுயர்ந்த பைக்குகளுக்காக அறியப்படுகிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகவும் குறைவான விலை கொண்ட மாடலாக 'டூக்காட்டி ஸ்க்ராம்ப்லர் ஐகான்' (Ducati Scrambler Icon) பைக் உள்ளது.
இந்த பைக்கின் விலை குறைவு என்று கூறினாலும், ஒரு வீடு கட்டும் அளவிற்கு இதன் மதிப்பு அதிகமாகும். மொத்தம் மூன்று வேரியண்ட்களில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கிறது.