PulseNews
தொழில்நுட்பம்

Japanese Luxury Car: 25KM மைலேஜில் களமிறங்கிய ஜப்பானின் சொகுசு ஹைப்ரிட் கார் - விலை, அம்சங்கள், வசதிகள் எப்படி?

Lexus ES 350h: ஜப்பானைச் சேர்ந்த லெக்சஸ் நிறுவனத்தின் சொகுசு மிட்-சைஸ் செடானான ES கார் மாடல், லிட்டருக்கு 25.22 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லெக்சஸ் ES சொகுசு மிட்சைஸ் செடான்..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சொகுசு மிட்-சைஸ் செடான் பிரிவில், அமைதியான அதேநேரம் வலுவான போட்டியாளராக லெக்சஸ் ES மாடல் விளங்குகிறது. இதன் முழுமையான மின்சார எடிஷனான ES 500e கடந்த மார்ச் மாதம் உள்ளூரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஏற்கனவே நன்கு அறியப்பட்ட செல்ஃப்-சார்ஜிங் ஹைப்ரிட் எடிஷன், முற்றிலும் புதிய எட்டாவது தலைமுறை ES 350h மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த கார், ஆடி A6, மெர்சிடிஸ் E-கிளாஸ் மற்றும் BMW 5 சீரிஸ் ஆகியவற்றுக்குப் போட்டியாக களமிறங்குகிறது. இந்த கார் என்னென்ன அம்சங்களை வழங்குகிறது மற்றும் அதன் விலை என்ன என்பதை இங்கே அறியலாம்.

லெக்சஸ் ES 350h - டிசைன் விவரங்கள்

புதிய லெக்ஸஸ் ES 350h முன்பை விட மிகவும் ஸ்போர்ட்டியான வடிவமைப்பைப் பெற்றுள்ளது. முன்புற மற்றும் பின்புறத் தோற்றங்கள், சகோதரர் மாடலான டொயோட்டா கேம்ரியின் தற்போதைய எடிஷனை ஓரளவு ஒத்திருந்தாலும், கணிசமான அளவு வித்தியாசப்படுத்தப்பட்டுள்ளன. கேம்ரி மிகவும் நேர்த்தியாக தோற்றமளிக்கும் நிலையில், புதிய ES மிகவும் ஸ்போர்ட்டியாகவும், ஆற்றல் மிகுந்ததாகவும் காட்சியளிக்கிறது.

முந்தைய எடிஷனை விட நீளமான வீல்பேஸ், கூடுதலான அகலம் மற்றும் உயரத்தை கொண்டுள்ளது. புதிய இரட்டை L சிக்னேச்சர் ஹெட்லேம்ப்கள், உள்நோக்கிய பகல்நேரங்களில் ஒளிரும் விளக்குகளையும் வெளிநோக்கிய டர்ன் இண்டிகேட்டர்களையும் இணைக்கின்றன. பின்புறம் ஒரு புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளதுடன், வெளிப்புறப் பகுதிகளில் ஒளியூட்டும் செயல்பாடுகளை வைக்கும் வகையில், பின்புற L சிக்னேச்சர் விளக்கும் இடம்பெற்றுள்ளது. கதவுகளின் குறுக்கே செல்லும் வலுவான கேரக்டர் லைன்கள் மற்றும் புதிய 19-இன்ச் அலாய் வீல்கள் பக்கவாட்டுத் தோற்றத்தை மெருகூட்டியுள்ளன.

லெக்சஸ் ES 350h - வண்ண விருப்பங்கள்

புதிய ES, எக்ஸ்குவிசிட் மற்றும் லக்ஸரி என இரண்டு ட்ரிம்களில் கிடைக்கிறது. முதலாவது ஒயிட் நோவா, சோனிக் டைட்டானியம், சோனிக் குரோம் (இந்த டிரிமிற்கு மட்டும் பிரத்யேகமானது), மற்றும் சோனிக் காப்பர் (புதியது) ஆகிய நான்கு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. டாப் ஸ்பெக் லக்ஸரி ட்ரிம், ஒயிட் நோவா, சோனிக் டைட்டானியம், கிராஃபைட் பிளாக் (இந்த டிரிமிற்கு மட்டும் பிரத்யேகமானது), SOU (புதியது மற்றும் இந்த டிரிமிற்கு மட்டும் பிரத்யேகமானது) மற்றும் சோனிக் காப்பர் (புதியது) ஆகிய ஐந்து வண்ண ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

லெக்சஸ் ES 350h - உட்புற அம்சங்கள், வசதிகள்

காரின் உட்புறம் முற்றிலுமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. முக்கியக் கட்டுப்பாடுகளையும் தகவல்களையும் ஓட்டுநர் எளிதில் அணுகவும் பார்க்கவும் வசதியாக 'டசூனா' காக்பிட் கான்செப்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. டேஷ்போர்ட் அமைப்பு மற்றும் ஸ்டீயரிங் வீலும் மாற்றப்பட்டுள்ளன. சமீபத்திய லெக்ஸஸ் UI உடன் கூடிய புதிய 14.0 இன்ச் உயர்-வரையறை டச்ஸ்க்ரீன் மற்றும் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவை உட்புற மாற்றங்களின் முக்கிய அம்சங்களாகும். வாடிக்கையாளர்கள் வெள்ளை மற்றும் பழுப்பு நிற லெதர் இருக்கை உறைகளைத் தேர்வு செய்யலாம்.

இதையும் படியுங்கள்: Car Loan: கார் லோன் வாங்குறீங்களா? பல ஆயிரங்களை சேமிப்பதற்கான டிப்ஸ் - யாருக்கு எவ்வளவு லோன் கிடைக்கும்?

புதிய ES மாடலில் பலவிதமான ட்ரைவ் மோட்கள், முன்பக்க வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஹெட்-அப் டிஸ்ப்ளே, டூ-ஸோன் ஆட்டோ க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் 3D மானிட்டர், ஆம்பியன்ட் லைட்டிங், 17-ஸ்பீக்கர் மார்க் லெவின்சன் ஆடியோ சிஸ்டம் (லக்சரி ட்ரிம்), கனெக்டட் கார் அம்சங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்காக அடிப்படை அம்சமாகவே இதில் எட்டு ஏர்பேக்குகள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ப்ரீ-கொலிஷன் சிஸ்டம், மற்றும் ட்ரைவர் மானிட்டர் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய லெக்ஸஸின் பாதுகாப்புத் தொகுப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன.

லெக்சஸ் ES 350h - பவர்ட்ரெயின் விவரங்கள்

ES 350h ஆனது மேம்படுத்தப்பட்ட ப்ளாட்ஃபார்ம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஹைப்ரிட் அமைப்பையும் கொண்டுள்ளது. அதன்படி, 2.5-லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் eCVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் இயக்கப்படுகிறது. திருத்தப்பட்ட ஹைப்ரிட் அமைப்பானது, ட்ரான்ஸ்ஆக்சிலில் ஒருங்கிணைக்கப்பட்ட பவர் கன்ட்ரோல் யூனிட் உடன் கூடிய புதிய eAxle மற்றும் ஒரு லித்தியம்-அயன் பேட்டரியைக் கொண்டுள்ளது.

இந்த பவர்டிரெய்ன் 186 bhp (இன்ஜின் வெளியீடு) மற்றும் 237 Nm டார்க்கை உருவாக்குகிறது. எலெக்ட்ரிக் மோட்டார் கூடுதலாக 160 bhp சக்தியை வழங்குகிறது. ஹைப்ரிட் சிஸ்டத்தின் மேம்படுத்தலால், புதிய ES 350h மாடல் லிட்டருக்கு 25.22 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக லெக்சஸ் நிறுவனம் அறிவித்துள்ளது, இது சொகுசு மிட்-சைஸ் செடான் வகை கார்களில் இதுவரை கேள்விப்படாத ஒன்றாகும்.

லெக்சஸ் ES 350h - விலை, போட்டியாளர்கள்

புதிய ES 350h காரின் ஆன் ரோட் விலை சென்னையில் சுமார் ரூ. 69.17 லட்சம் முதல் ரூ. 75.12 லட்சம் வரை நீள்கிறது. இந்த விலையில், ES 350h காரானது ஆடி A6, மெர்சிடிஸ்-பென்ஸ் E-கிளாஸ் மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஆகிய கார்களுடன் உள்ளூரில் போட்டியிடுகிறது.

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Japanese Luxury Car: 25KM மைலேஜில் களமிறங்கிய ஜப்பானின் சொகுசு ஹைப்ரிட் கார் - விலை, அம்சங்கள், வசதிகள் எப்படி?
PulseNews சுருக்கம்

ஜப்பானைச் சேர்ந்த லெக்சஸ் நிறுவனம் தனது ES சொகுசு மிட்-சைஸ் செடான் கார் லிட்டருக்கு 25.22 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வலுவான போட்டியாளராகக் கருதப்படும் இந்த மாடலின், மின்சார வசதி கொண்ட ES 500e எடிஷன் கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology