PulseNews
தொழில்நுட்பம்

''புராஜெக்ட் கருடா'' புதுசா, பெருசா, ஃப்ரெஷ்ஷா... முழுசா வேறு டிசைனில் டாடா நெக்ஸான் SUV கார்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் பிரபலமான காம்பேக்ட் எஸ்யூவியான டாடா நெக்ஸான், புதிய அவதாரத்தில் வெளியாக உள்ளது.

முதன்முதலாக 2017-ஆம் ஆண்டில் அறிமுகமான இந்த கார், 2020 மற்றும் 2023-ல் முக்கிய அப்டேட்டுகளைப் பெற்றது. தற்போது புராஜெக்ட் கருடா (Project Garuda) என்ற ரகசிய குறியீட்டுப் பெயரில் இதன் புதிய தலைமுறை மாடலை டாடா உருவாக்கி வருகிறது. இது 2027-ல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வெறும் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக இல்லாமல், வடிவமைப்பு, கேபின் மற்றும் இன்ஜின் என பல தளங்களில் மிகப்பெரிய மாற்றங்களைப் பெற உள்ளது.

புதிய வடிவமைப்பு

தற்போதைய நெக்ஸானில் உள்ள கூபே வடிவமைப்புக்கு பதிலாக, புதிய மாடலின் பின்புறம் பாக்ஸியாகவும் நேராகவும் வடிவமைக்கப்பட உள்ளது. சோதனை ஓட்ட மாடல்களில் ஏ பில்லர், சி பில்லர் மற்றும் பின்பக்க கண்ணாடிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

டாடாவின் புதிய தலைமுறை எஸ்யூவிகளைத் தழுவி உருவாக்கப்படும் இந்த டிசைனால், பயணிகளுக்கு சிறந்த ஹெட்ரூம் மற்றும் கூடுதல் கேபின் ஸ்பேஸ் கிடைக்கும். தற்போதைய X1 பிளாட்ஃபார்மில் பெரிய கட்டமைப்பு மாற்றங்களுடனோ அல்லது அதன் மேம்படுத்தப்பட்ட புதிய ATLAS கட்டமைப்பிலோ இது உருவாக்கப்படலாம்.

இன்டீரியர் மற்றும் வசதிகள்

புதிய டேஷ்போர்டு டிசைன், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் மேம்பட்ட கனெக்டட் கார் தொழில்நுட்பம் ஆகியவை உட்புறத்தில் இடம்பெறும். நேராக உள்ள பின்பக்க வடிவமைப்பால், தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் வசதியான மற்றும் அதிக இடவசதி கொண்ட காராக இது மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்

தற்போதைய மாடலில் உள்ள 120hp பவர் மற்றும் 170Nm டார்க் திறனைத் தரும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும், 100hp மற்றும் 170Nm டார்க் திறனைத் தரும் டர்போ சிஎன்ஜி (CNG) ஆப்ஷனும் புதிய மாடலிலும் தொடரும். தற்போதைய மேனுவல், AMT மற்றும் DCT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வெவ்வேறு விதங்களில் வழங்கப்படும். வெறும் அதிக பவரை வழங்குவதை விட, சாஃப்ட் டிரைவிங், சிறந்த மைலேஜ் மற்றும் மேம்பட்ட டிரைவிங் அனுபவத்திற்கே நிறுவனம் முன்னுரிமை அளிக்கும்.

நெக்ஸான் EV மாடலிலும் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல பெட்ரோல், சிஎன்ஜி மாடல்களும், எலெக்ட்ரிக் மாடலும் ஒரே நேரத்தில் அறிமுகமாகாமல் வெவ்வேறு காலகட்டங்களில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நெக்ஸான் கார் மாடலின் விலை, ரேஞ்ச் ஆகிய விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
''புராஜெக்ட் கருடா'' புதுசா, பெருசா, ஃப்ரெஷ்ஷா... முழுசா வேறு டிசைனில் டாடா நெக்ஸான் SUV கார்
PulseNews சுருக்கம்

இந்தியாவின் புகழ்பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி ரக காரான டாடா நெக்ஸான், புதிய அவதாரத்தில் அறிமுகமாக உள்ளது. 'புராஜெக்ட் கருடா' என்ற ரகசிய குறியீட்டுப் பெயரில், முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பில் இந்த புதிய தலைமுறை காரை டாடா நிறுவனம் உருவாக்கி வருகிறது.

2017-ல் அறிமுகமான நெக்ஸான் கார், ஏற்கனவே 2020 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் முக்கிய மாற்றங்களைப் பெற்றிருந்தது. தற்போது உருவாக்கப்பட்டு வரும் இந்த புதிய மாடல் கார், 2027-ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology