ஃபிக்ஸ்டு பேட்டரி..ஹோண்டா இ.வி. ஸ்கூட்டருக்கு இந்தியாவில் காப்புரிமை: அசத்தல் ரேஞ்ச், அம்சங்கள்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது புதிய மாடலான Honda UC3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான காப்புரிமையை இந்தியாவில் பதிவு செய்துள்ளது. எனினும், இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தாய்லாந்து மற்றும் வியட்நாமில் இந்த மாடல் ஏற்கனவே அறிமுகமாகிவிட்டது. தாய்லாந்தில் மானியத்திற்கு முந்தைய இதன் விலை THB 142,600 அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹4.1 லட்சம் ஆகும். மானியத்திற்குப் பின் THB 132,600 (சுமார் ₹3.82 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமானால் இதன் விலை மாறுபடலாம்.

வடிவமைப்பு

மாடர்ன் மற்றும் விண்டேஜ் ஸ்டைல் கலந்த கலவையாக இதன் வடிவமைப்பு உள்ளது. இதன் முன்புறம் மேக்ஸி-ஸ்கூட்டர் போலவும், பக்கவாட்டு, சீட் மற்றும் பின்புறம் நியோ-ரெட்ரோ தோற்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் இண்டிகேட்டராகவும் செயல்படும் 3-பகுதி LED DRL, தனித்துவமான மெல்லிய LED ஹெட்லைட், சார்ஜிங் ஃபிளாப்புடன் கூடிய விண்ட்ஷீல்டு மற்றும் பின்புற LED டெயில்லைட் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பேட்டரி மற்றும் ரேஞ்ச்

ஹோண்டா ஸ்கூட்டர்களில் முதல்முறையாக, கழற்ற முடியாத வகையிலான 3.2 kWh திறன் கொண்ட ஃபிக்ஸட் LFP பேட்டரி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1,500-க்கும் மேற்பட்ட சார்ஜிங் சைக்கிள்களுக்கு இது சிறப்பாக செயல்படும் என நிறுவனம் கூறுகிறது. WMTC சோதனையின்படி ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 122 கி.மீ ரேஞ்ச் வழங்கும்.

செயல்திறன்

6.0 kW திறன் கொண்ட முன்பக்க வீல் மோட்டார் மூலம், அதிகபட்சமாக மணிக்கு 80 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். 160cc பெட்ரோல் ஸ்கூட்டருக்கு இணையான செயல்திறனை இது வழங்கும். இதில் ECON, STANDARD, SPORT ஆகிய 3 ரைடிங் மோடுகளும், பார்க்கிங் செய்ய உதவும் ரிவர்ஸ் மோடும் உள்ளன.

என்னென்ன வசதிகள்?

Honda RoadSync இணைப்புடன் கூடிய 5 இன்ச் TFT இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர்.

டிராக்ஷன் கண்ட்ரோல், கீலெஸ் கோ, ஸ்மார்ட் கீ, டைப்-சி சார்ஜிங் போர்ட்.

26 லிட்டர் சீட் அண்டர் ஸ்டோரேஜ் மற்றும் அடாப்டிவ் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம்.

12 இன்ச் வீல்கள், ABS-க்கு பதிலாக CBS பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் 1,200W சார்ஜிங் திறன்.

பேர்ல் சஃபையர் ஒயிட் மற்றும் கிராஃபைட் பிளாக் நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்கூட்டர், தினசரி நகர்ப்புற பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்டுள்ளதால், இது வருங்காலத்தில் இங்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், ஹோண்டா நிறுவனம் தனது புதிய Honda UC3 மின்சார ஸ்கூட்டருக்கான காப்புரிமையைப் பெற்றுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஏற்கனவே தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.
இந்த புதிய மாடல், நிலையான பேட்டரி வசதி மற்றும் நவீன சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹோண்டா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.