பிரபஞ்சத்தில் ஒரு பேரழகு மர@ணம்- ஒரு நட்சத்திரத்தின் இறுதி நிமிடங்கள்
விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் மைல்கல்லாக, மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு நட்சத்திரத்தின் இறுதித் தருணங்களை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மிகத் துல்லியமாகப் படம் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் பேரழகையும், ஒரு நட்சத்திரத்தின் இறுதி மூச்சையும் ஒரே நேர்கோட்டில் காட்டும் இந்த பிரமிக்க வைக்கும் புகைப்படம், தற்போது உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பூமியிலிருந்து பல்லாயிரக்கணக்கான ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள லையன் நெபுலா எனப்படும் விண்வெளிப் பகுதியில் இந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. பொதுவாக விண்வெளியில் அதிக நிறை மற்றும் ஆற்றல் கொண்ட ராட்சத நட்சத்திரங்கள் தங்கள் வாழ்நாளின் இறுதியில் மிகப்பெரிய ‘சூப்பர் நோவா’ வெடிப்பின் மூலம் தங்களை அழித்துக் கொள்ளும். ஆனால், இந்த லையன் நெபுலாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நட்சத்திரங்கள், அதற்கு நேர்மாறாக மிகவும் அமைதியான முறையில் தங்கள் இறுதிப் பயணத்தை முடிக்கின்றன. அவ்வாறு வயதாகித் தன் இறுதி நிலையை எட்டிய ஒரு குறிப்பிட்ட நட்சத்திரம், தனது வெளிப்புற அடுக்குகள் மற்றும் வளிமண்டலத்தைப் படிப்படியாக விண்வெளிப் பெருவெளியில் உதிர்த்து வெளியேற்றத் தொடங்கியுள்ளது. இந்த நட்சத்திரத்தின் மையப்பகுதியில் எஞ்சியிருக்கும் வெள்ளை குள்ளன் என்று அழைக்கப்படும் சூடான நட்சத்திர மையத்திலிருந்து வெளியாகும் கடுமையான கதிர்வீச்சு, அதைச் சுற்றியுள்ள வாயு மேகங்களை ஊடுருவி ஒளிரச் செய்கிறது. இதனால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அகச்சிவப்பு கேமராக்களில் இது இளஞ்சிவப்பு, ஊதா மற்றும் நீல நிறங்கள் கலந்த ஒரு சிங்கம் போன்ற பேரொளித் தோற்றமாகப் பதிவாகியுள்ளது. இது குறித்து அறிவியல் இதழான 'சயின்ஸ் டெய்லி' வெளியிட்டுள்ள செய்தியில், இந்த லையன் நெபுலாவின் உள்பகுதியில் சிங்கத்தின் பிடரி முடி போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அடர்த்தியான தூசிக்கூட்டங்கள், நட்சத்திர மையத்தின் கடுமையான கதிர்வீச்சைத் தாங்கி எதிர்த்து நிற்பதால் விண்கல் போன்ற வால் வடிவ அமைப்பை உருவாக்கியுள்ளன என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, விண்வெளியில் அரங்கேறும் இந்த மாயாஜாலக் காட்சி நிரந்தரமானது அல்ல. தற்போது நட்சத்திர மையத்திலிருந்து உதிர்ந்து விரிவடைந்து வரும் இந்தத் தூசி மற்றும் வாயு மேகங்கள், அடுத்த 10,000 ஆண்டுகளில் விண்வெளியின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று ஒட்டுமொத்தமாகக் கலைந்து மறைந்துவிடும். அதன் பின்னர் இந்த நட்சத்திரத்தின் சுவடுகளே பிரபஞ்சத்தில் இருக்காது. இந்த நட்சத்திரத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்த நாசா, இதனை ‘நட்சத்திர வாழ்க்கையின் சுழற்சி என்று வர்ணித்துள்ளது. மேலும், விஞ்ஞானிகள் நம் சூரியனும் இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளில் இதேபோன்ற ஒரு நிலையைத்தான் எட்டும் என்றும், ஒரு நட்சத்திரத்தின் மரணம் என்பது மற்றொரு புதிய விண்மீன் அமைப்பு உருவாவதற்கான விதை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மரணமடையும் நிலையில் உள்ள ஒரு நட்சத்திரத்தின் இறுதித் தருணங்களை நாசாவின் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மிகத் துல்லியமாகப் படம் பிடித்துள்ளது. பூமியில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள லையன் பகுதியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
நட்சத்திரத்தின் கடைசி நிமிடங்களை விவரிக்கும் இந்தப் புகைப்படம், பிரபஞ்சத்தின் அழகையும் அதன் இறுதிக்கட்டத்தையும் ஒரே நேர்க்கோட்டில் பிரதிபலிக்கிறது. இந்த பிரமிக்கத்தக்க காட்சி உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.