PulseNews
தொழில்நுட்பம்

Tata Sierra 7 Seater: சியாராவின் 7 சீட்டர் எடிஷன் - என்ன எதிர்பார்க்கலாம்? அப்க்ரேட்கள் வருமா? நீளம் மட்டுமா? எப்போது?

Tata Sierra 7 Seater: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 5 சீட்டராக வெற்றி பெற்ற சியாராவில் அப்க்ரேட் செய்து, 7 சீட்டர் எடிஷனை களமிறக்க டாடா நிறுவனம் தீவிர காட்டி வருகிறது.

டாடா சியாரா 7 சீட்டர் எடிஷன்..!

டாடா நிறுவனம் தனது விண்டேஜ் கார் மாடலான சியாராவை நவீன காலத்திற்கேற்ப மேம்படுத்தி, பலதரப்பட்ட பவர்ட்ரெயின் ஆப்ஷன்களில் இந்தியாவில் களமிறக்கி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த 5 சீட்டரின் லாஞ்சின் போதே டாடா நிறுவனம் இதன் 7 சீட்டர் எடிஷனை தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாக தொடங்கின. இந்த தகவல் உண்மையாகும்பட்சத்தில் அந்த காரில் என்ன எதிர்பார்க்கலாம் என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சியாராவின் புதிய 7 சீட்டர் பற்றி தெரிந்தது என்ன?

சியாரா 7-சீட்டர் காரின் ப்ளாட்ஃபார்மின் பெரும்பகுதி, ஆர்கோஸ் ப்ளாட்ஃபார்முடன் ஒத்துப்போகிறது. காரணம் 5 சீட்டரின் அறிமுக விழாவில், ஆர்கோஸ் ப்ளாட்ஃபார்மிலும் ஒரு 7-சீட்டர் எஸ்யுவியை பொருத்த முடியும் என்று டாடா நிறுவனம் தெரிவித்து இருந்தது. இது பெரும் வரவேற்பைப் பெற்றதால், சியராவின் ஏழு இருக்கைகள் கொண்ட மாடல் பரிசீலனையில் இருக்கும் என பயனர்கள் நம்பத் தொடங்கினர். இருப்பினும், டாடா நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. தற்போது, ​​டாடா நிறுவனத்திடம் ஏற்கனவே அதன் முதன்மையான 7 சீட்டர் எஸ்யுவியாக சஃபாரி உள்ளது. இந்த நிலையில் ஒருவேளை சியரா 7 சீட்டர் சந்தைக்கு வந்தால், அது சஃபாரிக்குக் கீழே நிலைநிறுத்தப்பட்டு, பயனர்களுகான மலிவு விலை ஆப்ஷனாக அமையக்கூடும். மூன்று வரிசை இருக்கைகளுக்கு இடமளிக்கும் வகையில், இது நிச்சயமாக 5 சீட்டர் எடிஷனை விட பெரிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.

சியாராவின் 7 சீட்டர் எப்படி இருக்கும்?

டாடா நிறுவனம் ஏழு இருக்கைகள் கொண்ட சியராவை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டால், அதன் வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்பது நிச்சயம். 90-களின் அசல் மாடலுக்கு மரியாதை செலுத்தும் தற்போதைய சியராவின் வடிவமைப்பைப் பின்பற்றி, இந்த ஏழு இருக்கைகள் கொண்ட காரும் அதைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படலாம் – எனவே, காரின் பின்புறத்தில் சுற்றிலும் வளைந்த கண்ணாடி அமைப்பு உற்பத்திக்கு வரக்கூடும். இருப்பினும், நீளமான வடிவமைப்பு மற்றும் மாறுபட்ட அடையாளம் காரணமாக, டாடா நிறுவனம் எல்இடி விளக்குகள், பம்பர்கள் மற்றும் பின்புறப் பகுதியை மாற்றியமைத்து திருத்தியமைக்கக்கூடும்.

சியாராவின் 7 சீட்டர் - எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

​​சியரா 7 சீட்டரில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம் என்று யூகிப்பது மிகவும் கடினம். இது வழக்கமான ஐந்து இருக்கைகள் கொண்ட மாடலுக்கான அம்சத் தொகுப்பை அப்படியே தக்கவைக்கக் கூடும். இதில் மூன்று ஸ்க்ரீன் அமைப்பு, ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, 360-டிகிரி கேமரா, ADAS லெவல் 2+, 6 ஏர்பேக்குகள், வயர்லெஸ் கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் சார்ஜிங் பேட் மற்றும் பவர்டு டெயில்கேட் போன்றவை அடங்கும்.

இதையும் படியுங்கள்: Upcoming Budget Cars: அடுத்தடுத்து 4 புது கார்கள்..! ரூ.6 லட்சம் தான் பட்ஜெட்டே, உங்களுக்கான சாய்ஸ் எது? வசதி, அம்சங்கள்

சியாராவின் 7 சீட்டர் - எதிர்பார்க்கப்படும் பவர்ட்ரெயின்

சிறப்பம்சங்களைப் போலவே, பவர்ட்ரெயின் ஆப்ஷன்களும் ஐந்து இருக்கைகள் கொண்ட சியராவில் உள்ள அதே விருப்பங்களுடன் தொடரக்கூடும். அதன்படி சியரா 1.5-லிட்டர் மூவர் கூட்டணியான நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல், டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுடன் தொடரலாம். ஐந்து இருக்கைகள் கொண்ட சியராவில் ஒரு எலெக்ட்ரிக் மாடல் இருப்பது போலவே, 7 சீட்டரிலும் வரலாம். சுவாரஸ்யமான தகவலாக ஆர்கோஸ் காரில் ஆல்-வீல் டிரைவ் (AWD) வசதி இருப்பதாகக் கூறப்படுகிறது. டாடா நிறுவனம் அதன் அசல் சியரா காருக்கு உண்மையான மரியாதை செலுத்தத் திட்டமிட்டால், இந்த ஏழு இருக்கைகள் கொண்ட மாடலில் ஆல்-வீல் டிரைவ் வசதியை நாம் எதிர்பார்க்கலாம்.

சியாராவின் 7 சீட்டர் - எப்போது வெளியீடு? விலை?

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், சியராவின் 7 சீட்டர் 2027-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சஃபாரி EV மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் அவின்யா மாடலைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. எனவே, அதே ஆண்டின் தொடக்கத்தில் சியாரா 7 சீட்டரை சந்தைப்படுத்துவது மோசமான முடிவாக இருக்கக் கூடும்/ விலையைப் பற்றி விவாதித்தால், சியராவின் ஏழு இருக்கைகள் கொண்ட மாடலின் விலை ரூ. 18 லட்சம் முதல் ரூ. 27 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Tata Sierra 7 Seater: சியாராவின் 7 சீட்டர் எடிஷன் - என்ன எதிர்பார்க்கலாம்? அப்க்ரேட்கள் வருமா? நீளம் மட்டுமா? எப்போது?
PulseNews சுருக்கம்

இந்திய வாகன சந்தையில் 5 சீட்டர் மாடலாக பெரும் வரவேற்பைப் பெற்ற டாடா சியாரா காரின், அடுத்தகட்டமாக 7 சீட்டர் பதிப்பை அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. நவீன காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட சியாராவை பல்வேறு பவர்ட்ரெயின் தேர்வுகளில் டாடா நிறுவனம் ஏற்கனவே வெற்றிகரமாக விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

தற்போது 5 சீட்டர் காரின் அறிமுகத்தின் போதே, அதன் 7 சீட்டர் பதிப்பைத் தயாரிப்பதற்கான பணிகளில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. வரவிருக்கும் இந்த புதிய மாடலில் என்னென்ன மாற்றங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் இடம்பெறவுள்ளன என்பது குறித்த எதிர்பார்ப்புகள் வாகன ஆர்வலர்களிடையே எழுந்துள்ளன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology