PulseNews
தொழில்நுட்பம்

விண்வெளியில் ருத்ரதாண்டவம்: சூரியனின் சவுண்ட் எப்படி இருக்கும்? நாசா பகிர்ந்த ஆச்சரியமூட்டும் காட்சிகள்!

நமது சூரிய குடும்பத்தின் மையப்புள்ளியான சூரியன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ருத்ரதாண்டவத்தை அரங்கேற்றியது. தற்போது அந்த நிகழ்வை நாசா அரிய கோணத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது. அது வெறும் காட்சி மட்டுமல்ல, சூரியனின் 'குரலையும்' உள்ளடக்கிய ஒரு மிரட்டலான அனுபவம். Side view of Yesterday's Massive Solar Flare with real NASA-Recorded Solar Audio pic.twitter.com/MGmrQp4oFh — Black Hole (@konstructivizm) December 20, 2025 பொதுவாக சூரிய வெடிப்புகளை நாம் மேலிருந்து தான் பார்த்திருப்போம். ஆனால், இந்த வீடியோவில் சூரியனின் விளிம்புப் பகுதியில் (Limb View) இருந்து அந்த வெடிப்பு படம்பிடிக்கப்பட்டுள்ளது. சூரியனின் மேற்பரப்பிலிருந்து பல லட்சம் கிலோமீட்டர் உயரத்திற்கு நெருப்பு குழம்புகள் ஒரு பிரம்மாண்டமான வில் வளைவு போல எகிறிப் பாய்கின்றன. பூமியையே ஒரு சிறிய துகள் போல மாற்றக்கூடிய அளவு பிரம்மாண்டமான இந்த நெருப்பு வளைவுகள், மீண்டும் சூரியனை நோக்கியே விழும் காட்சி ஒரு 'நெருப்பு லூப்' போல காட்சியளிக்கிறது. விண்வெளி என்பது காற்றில்லாத வெற்றிடம் என்பதால் அங்கு சத்தம் கேட்காது என்பது நமக்குத் தெரியும். ஆனால், நாசா விஞ்ஞானிகள் சூரியனின் காந்தப்புல அதிர்வுகளையும், ரேடியோ அலைகளையும் திரட்டி, அவற்றை நாம் கேட்கக்கூடிய ஒலியாக மாற்றியுள்ளனர். இந்த வீடியோவை ஹெட்செட் அணிந்து கேட்டால், ஏதோ ஒரு காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரியும் சத்தமும், அவ்வப்போது இடி முழங்குவது போன்ற 'டப்-டப்' ஒலிகளும் (Pops and Hisses) கேட்கின்றன. இது ஒரு விண்வெளி இசைக்கச்சேரியைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது. சூரியனில் உள்ள காந்தப்புலங்கள் சிக்கலாகப் பின்னிப் பிணையும்போது ஏற்படும் அழுத்தத்தால் இத்தகைய வெடிப்புகள் (Solar Flares) நிகழ்கின்றன. பில்லியன் கணக்கான அணு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடிப்பதற்குச் சமமான ஆற்றலை வெளியிடுகிறது. நல்லவேளையாக, இந்த வெடிப்பின் பெரும்பகுதி ஆற்றல் பூமியைத் தாக்காமல் விண்வெளியை நோக்கிச் சென்றது. இல்லையெனில், நமது மின்சாரக் கட்டமைப்புகள் மற்றும் செயற்கைக்கோள்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும். சூரியன் தனது 11 ஆண்டுகால சுழற்சியின் உச்சகட்டத்தில் (Solar Maximum) இருப்பதால், வரும் நாட்களில் இது போன்ற பல சீற்றங்களை நாம் எதிர்பார்க்கலாம். நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி போன்ற விண்கலங்கள் 24 மணிநேரமும் சூரியனை இமைக்காமல் கண்காணித்து வருகின்றன. இந்தக் காட்சிகள் சூரியனின் அபாரமான ஆற்றலையும், அழகையும் நமக்கு நினைவூட்டுகின்றன. சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோ விஞ்ஞானம் என்பது வெறும் எண்கள் மட்டுமல்ல, அது ஒரு கலை என்பதை நிரூபித்துள்ளது.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
விண்வெளியில் ருத்ரதாண்டவம்: சூரியனின் சவுண்ட் எப்படி இருக்கும்? நாசா பகிர்ந்த ஆச்சரியமூட்டும் காட்சிகள்!
PulseNews சுருக்கம்

சூரிய குடும்பத்தின் மையமான சூரியனில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த பிரம்மாண்டமான வெடிப்பு குறித்த வீடியோ காட்சிகளை நாசா வெளியிட்டுள்ளது. வழக்கமாக சூரிய வெடிப்புகளை மேலிருந்து மட்டுமே பார்த்திருக்கும் நிலையில், இந்த முறை அதன் பக்கவாட்டு கோணத்தில் எடுக்கப்பட்ட அரிய காட்சிகளை நாசா பகிர்ந்துள்ளது.

இந்த வீடியோ வெறும் காட்சி அனுபவத்தை மட்டும் தராமல், சூரியனின் 'குரலையும்' உள்ளடக்கிய மிரட்டலான ஒலியை பதிவு செய்துள்ளது. விண்வெளியில் நிகழ்ந்த இந்த ருத்ரதாண்டவத்தை ஒலியுடன் கேட்பது பார்வையாளர்களுக்கு ஒரு வியக்கத்தக்க அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology