Mahindra EV: சூடுபறக்க தயாராகும் மஹிந்த்ராவின் புதிய, பெரிய மின்சார SUV - ட்ரிபிள் ஸ்க்ரீன், ரேஞ்ச் & பல விவரங்கள்

Mahindras New Bigger EV BE 07: மஹிந்த்ராவின் புதிய பெரிய மின்சார காராக தயாராகி வரும் BE 07 கார் மாடல், உள்ளூர் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்த்ராவின் புதிய பெரிய மின்சார கார்:

மஹிந்த்ராவின் இங்க்லோ ப்ளாட்ஃபார்ம் அடிப்படையிலான மின்சார எஸ்யுவிக்களான, XEV 9E, XEV 9S மற்றும் BE 6 ஆகிய மாடல்கள் ப்ரீமியம் மின்சார கார்களுக்கு உள்ளூர் சந்தையி நல்ல வரவேற்பு இருப்பதை உணர்த்தியுள்ளன. தனது மின்சார கார்களின் விற்பனை நிலையை மேலும் ஊக்குவிக்க, உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனமானது புதிய BE 07 மாடலை வரும் 2027ம் ஆண்டில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த மின்சார எஸ்யுவி ஆனது தற்போது தீவிரமாக சாலை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன.

மஹிந்த்ரா BE 07 - உட்புற அம்சங்கள், வசதிகள்

சாலை சோதனையின் போது முதல்முறையாக எடுக்கப்பட்ட புகைப்படங்களானது, உட்புறம் தொடர்பான சில விவரங்களை வழங்கியுள்ளன. அதன்படி XEV 9E மாடலில் இருப்பதை போன்று இதில் மூன்று ஸ்க்ரீன் செட்-அப் இடம்பெற்றுள்ளது. அவை சென்ட்ரல் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஓட்டுநருக்கான டிஸ்ப்ளே மற்றும் முன் பயணிக்கான டிஸ்ப்ளே உட்பட மூன்று 12.3 இன்ச் டிஸ்ப்ளேக்கள் ஆகும். மஹிந்திரா BE 07-இல் விண்டோஸ்கிரீனில் தெரியும் டேஷ்கேம் டிஸ்ப்ளே, மஹிந்திராவின் பிரத்யேக லோகோவுடன் கூடிய டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் ஆம்பியன்ட் லைட்டிங் ஆகியவையும் உள்ளன. எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களில் டூயல் ஜோன் ஆட்டோமேடிக் காலநிலை கட்டுப்பாடு, ஹெட்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, பெரிய பனோரமிக் சன்ரூஃப், டால்பி அட்மாஸுடன் கூடிய 16-ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், லெவல் 2 ADAS உள்ளிட்ட ஏராளமான அம்சங்களும் அடங்கும்.

மஹிந்த்ரா BE 07 - வெளிப்புற வடிவமைப்பு

இந்த காரின் கான்செப்ட்டைப் போலவே, உற்பத்திக்குத் தயாரான மஹிந்த்ரா BE 07 மாடலானது 4565 மில்லி மீட்டர் நீளம், 1900 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 1660 மில்லி மீட்டர் உயரம் ஆகியவற்றுடன் 2775 மில்லி மீட்டர் நீளமுள்ள வீல்பேஸ் ஆகியவற்றை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மூடப்பட்ட க்ரில், C-வடிவ LED பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகளுடன் கூடிய நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், LED ஃபாக் லேம்ப்கள் மற்றும் முன்பக்கத்தில் நேர்த்தியான காற்றுத் துளைகளுடன் கூடிய ஸ்போர்ட்டியான பம்பர் ஆகியவை இடம்பெறும். மற்ற வடிவமைப்பு சிறப்பம்சங்களில், ஏரோடைனமிக்ஸ் ரீதியாக மேம்படுத்தப்பட்ட அலாய் வீல்கள், கதவுகளுடன் சமமாகப் பொருந்தும் கைப்பிடிகள், குட்டையான பின்புற விண்ட்ஷீல்டு, பெரிய டெயில்கேட் மற்றும் செங்குத்தாகப் பொருத்தப்பட்ட LED டெயில்லேம்ப்கள் ஆகியவை அடங்கும்.

மஹிந்த்ரா BE 07 - பேட்டரி ஆப்ஷன்கள்

தற்போது 59kWh மற்றும் 79kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கும் BE6 மாடலுடன், மஹிந்திரா BE 07 தனது பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை பகிர்ந்துகொள்ளும் என கூறப்படுகிறது. அதேநேரம், BE6 உடன் ஒப்பிடும்போது, அதன் பெரிய அளவுகள் மற்றும் அதிக எடை காரணமாக BE 07-இன் ரேஞ்ச் சற்றுக் குறைவாக இருக்கலாம். மேற்குறிப்பிடப்பட்ட பேட்டரிகள் மூலம் 556 முதல் 683 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: Nissan SUV: இனி பேச்சே இல்லை..! 36KM மைலேஜ் வழங்கும் ஜப்பான் எஸ்யுவி - 1980KM ரேஞ்ச், இந்தியாவில் எப்படி?

புதிய மஹிந்திரா எலெக்ட்ரிக் எஸ்யுவி அறிமுகப்படுத்தப்பட்டவுடன் உள்நாட்டு சந்தையில் டாடா ஹேரியர், பிஒய்டி அட்டோ 3 மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப்7 ஆகியவற்றுடன் போட்டியிடும். உள்ளூர் சந்தையில் இதன் தொடக்க விலை 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை நிர்ணயிக்கப்படுகிறது.

மஹிந்த்ரா நிறுவனம் தனது புதிய மற்றும் பெரிய மின்சார எஸ்யுவி மாடலான BE 07-ஐ உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, இது உள்நாட்டு வாகன சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிறுவனத்தின் இங்க்லோ (Inglo) பிளாட்ஃபார்மில் தயாராகும் XEV 9E, XEV 9S மற்றும் BE 6 போன்ற மின்சார வாகனங்கள் ஏற்கனவே ப்ரீமியம் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக, ட்ரிபிள் ஸ்க்ரீன் மற்றும் கூடுதல் ரேஞ்ச் வசதிகளுடன் புதிய எஸ்யுவியை அறிமுகப்படுத்த மஹிந்த்ரா தயாராகி வருகிறது.