Upcoming Cars: "மஹிந்திரா முதல் ஸ்கோடா வரை.." ரெண்டே மாசத்துல இந்தியாவுக்குள் வரப்போகும் 6 கார்கள்!

இந்தியாவில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த சூழலில் செப்டம்பர் மாதம் அறிமுகமாக உள்ள புதிய கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Mahindra BE 6 Sporteq:

மஹிந்திரா நிறுவனத்தின் கார்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. அவர்கள் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள கார்தான் இந்த Mahindra BE 6 Sporteq. இந்த கார் இன்று இந்தியாவில் அறிமுகமாகிறது. மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ ஆகிய கார்களில் காணப்படும் 3 ஸ்கிரீன் டிஸ்ப்ளே இதிலும் இடம்பெற உள்ளது.

2. New Skoda Slavia:

இந்தியாவின் புகழ்பெற்ற கார் நிறுவனம் ஸ்கோடா. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்திய சந்தையில் இவர்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார் New Skoda Slavia. இந்த காரில் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. ஏர் கண்டிஷனிங், முன்பக்க பார்க்கிங் சென்சார்ஸ் வசதிகள் உள்ளது. 8 ஸ்பீட் ஆட்டோமெட்டிக் கியர் உள்ளது.

3.MG Hector Tomahawk:

புகழ்பெற்ற MG நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த MG Hector Tomahawk. இந்த கார் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி அறிமுகமாக உள்ளது. 3 இருக்கைகள் கொண்ட காராக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இ்ந்த கார் இந்திய சந்தையில் அறிமுகமானால் மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் காருக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

4. Kia Sorento Hybrid:

கியா நிறுவனத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் கார் இந்த Kia Sorento Hybrid. இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்திய சந்தையில் உள்ளது. இந்த கார் வரும் செப்டம்பர் 4ம் தேதி அறிமுகமாகிறது. இந்த கார் அறிமுகமானால் ஸ்கோடா கோடியாக், வோல்க்ஸ்வேகனின் டைரோன் ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக அமையும் என்று கருதப்படுகிறது.

5.New Maruti Baleno:

மாருதி சுசுகி நிறுவனத்தின் பட்ஜெட் விலை கார் Maruti Baleno. இந்த காரின் அப்டேட் வெர்சனாக இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது இந்த New Maruti Baleno. கேபின் வசதி, பம்பர் வசதி, காரின் உட்கட்டமைப்பு என பலவற்றிலும் ஏராளமான மாற்றங்கள் செய்து இந்த கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. 35 கிலோமீட்டர் மைலேஜ் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் இந்த கார் அறிமுகமாக உள்ளது.

6. Next-gen Hyundai Bayon:

ஹுண்டாய் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த Next-gen Hyundai Bayon. இந்த கார் கிரெட்டா காரின் மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது. இந்த காரை சிஎன்ஜி வேரியண்டிலும் அறிமுகப்படுத்த ஹுண்டாய் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் கார் உற்பத்தி நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், அடுத்த இரண்டு மாதங்களில் மஹிந்திரா மற்றும் ஸ்கோடா உள்ளிட்ட நிறுவனங்கள் மொத்தம் 6 புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளன.
செப்டம்பர் மாதத்தில் வெளியாகவிருக்கும் புதிய கார்களில் மஹிந்திரா நிறுவனத்தின் 'BE 6 Sporteq' மாடலும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் மஹிந்திரா கார்களுக்கு இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு, இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்படவுள்ளது.