அப்டேட்டாகி வந்த அந்நியன்.. அறிமுகமாகியது ராயல் என்ஃபீல்டின் Continental GT 650 பைக்

இந்தியாவின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனமாக திகழ்வது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

அப்டேட் RE Continental GT 650:

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் புதியதாக அப்டேட் செய்யப்பட்ட RE Continental GT 650 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், இன்று இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எல்இடி சிக்னல் விளக்குகள், யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் போர்ட் வசதி என பல்வேறு வசதிகள் கொண்டதாக இந்த இரு சக்கர வாகனம் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கின் விலை ரூபாய் ரூபாய் 3 லட்சத்து 58 ஆயிரத்து 427 ( எக்ஸ் ஷோரூம்) ஆகும்.

648 சிசி எஞ்ஜின்:

இந்த புதிய RE Continental GT 650 பைக்கில் 648 சிசி பாரல்லல் ட்வின் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஏர்/ ஆயில் கூல்ட் யூனிட் வசதி உள்ளது. 47 எச்பி குதிரைத்திறன் கொண்டது. 7 ஆயிரத்து 150 ஆர்பிஎம் கொண்டது. 52.3 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.

இந்த பைக்கில் 6 கியர்கள் கொண்டது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ட்வின் ரியர் ஷாக் அப்சார்பர்ஸ் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. முகப்பு விளக்கு எல்இடி விளக்காக பொருத்தப்பட்டுள்ளது. டைப் சி சார்ஜிங் வசதி உள்ளது.

சிறப்புகள்:

இதில் 3 வேரியண்ட் உள்ளது. அலாய் சக்கரங்கள், ஸ்போக் சக்கரங்கள் வேரியண்டாக உள்ளது. இது 25 கிலோமீட்டர் வரை மைலேஜ் அறிவிக்கப்பட்டுள்ளது. 211 கிலோ எடையை இந்த பைக் கொண்டுள்ளது. இதில் 12.5 லிட்டர் பெட்ரோல் டேங்கர் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சாக 169 கிலோமீட்டர் வேகத்தில் இந்த பைக்கில் செல்லலாம். 1 கியர் கீழேவும், மற்ற 5 கியர் மேலேவும் இயக்கப்பட வேண்டும்.

ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 312.5 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். டூயல் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. 18 இன்ச் சக்கரம் முன்பக்கம், 18 இன்ச் சக்கரம் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. 40 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருடம் வாகன வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.

லோ பேட்டரி இண்டிகேட்டர், லோ ப்யூல் இண்டிகேட்டர், லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹை பீம் இண்டிகேட்டர், மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ராயல் என்ஃபீல்ட், தனது பிரபலமான காண்டினென்டல் ஜிடி 650 பைக்கின் புதிய அப்டேட் செய்யப்பட்ட பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. அந்நிறுவனத்தின் வாகனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இந்த புதிய மாடல் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சந்தைக்கு வந்துள்ளது.
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த மேம்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்ட் காண்டினென்டல் ஜிடி 650 பைக் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த பைக்கின் வருகை தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.