PulseNews
தொழில்நுட்பம்

120 இன்ச் ஸ்கிரீன், கூகுள் டிவி 5.0 வசதி: வீட்டில் மினி தியேட்டர் அனுபவம்தான்; போட் ப்ரொஜெக்டர் ட்ரை பண்ணுங்க!

அமேசான் தளத்தில் பிரபல ‘போட் சினிஹெட் எப்1’ ப்ரொஜெக்டர் மாடல் தற்போது சிறப்புச் சலுகை விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ள இந்த ப்ரொஜெக்டரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன? அமேசானில் இந்த மாடலுக்கு 20% நேரடி தள்ளுபடி வழங்கப்பட்டு, தற்போது ரூ.23,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும்போது கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடியும் கிடைக்கிறது. இதனால் இந்த போட் ப்ரொஜெக்டரை மிகக் குறைந்த விலையில் வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். 1080p ஃபுல் எச்டி (Full HD) நேட்டிவ் ரெசல்யூஷன் மற்றும் 4K அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ஆதரவைக் கொண்டுள்ளது. 300 ANSI லுமன்ஸ் பிரைட்னஸ் மற்றும் 1000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ வசதியுடன் வருவதால் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களைக் காண முடியும். அதிகபட்சமாக 120 இன்ச் வரை புரொஜெக்ஷன் செய்யும் வசதி உள்ளதால், வீட்டில் பெரிய ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டிய அவசியமின்றி மினி தியேட்டர் அனுபவத்தை பெறலாம். இந்த சாதனம் கூகுள் டிவி 5.0 இயங்குதளத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் கூகுள் ப்ளே ஸ்டோர், குரோம் காஸ்ட் (Chromecast) மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சங்களைப் பயன்படுத்த முடியும். நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஓடிடி செயலிகளையும் இதில் பயன்படுத்தலாம். வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் ஆதரவும் உள்ளது. ஆட்டோ போகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) மற்றும் இன்டெலிஜென்ட் அப்ஸ்டகிள் அவாய்டன்ஸ் (Intelligent Obstacle Avoidance) வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. தரமான மீடியாடெக் பிராசஸருடன், 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒலி அனுபவத்தை வழங்க டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 6W ஸ்பீக்கர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் வசதிகள் உள்ளன. இந்த ப்ரொஜெக்டர் அட்ஜஸ்டபிள் ஸ்டாண்ட் ஆதரவுடன் வருகிறது. மேலும், கூடுதல் பாதுகாப்பிற்காக இதில் 'ஷீல்டு என்ஜின்' தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
120 இன்ச் ஸ்கிரீன், கூகுள் டிவி 5.0 வசதி: வீட்டில் மினி தியேட்டர் அனுபவம்தான்; போட் ப்ரொஜெக்டர் ட்ரை பண்ணுங்க!
PulseNews சுருக்கம்

அமேசான் தளத்தில் பிரபல ‘போட் சினிஹெட் எப்1’ (boAt CineHead F1) ப்ரொஜெக்டர் மாடல் தற்போது சிறப்புச் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நவீன வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ள இந்த ப்ரொஜெக்டரில் 120 இன்ச் ஸ்கிரீன் மற்றும் கூகுள் டிவி 5.0 வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ப்ரொஜெக்டர் மாடலுக்கு அமேசானில் 20% நேரடி தள்ளுபடி வழங்கப்பட்டு, தற்போது ரூ.23,999 விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது. மேலும், தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக ரூ.3,000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology