ரூ.10,000 பட்ஜெட்டில் 6,500 எம்.ஏ.எச் பேட்டரி, 50 எம்.பி ஏ.ஐ கேமரா: ஆண்ட்ராய்டு 16 உடன் லாவாவின் மிரட்டலான புதிய 5ஜி போன்
லாவா நிறுவனம் தனது புதிய 'லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி' ஸ்மார்ட்போனை ஆக.24-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், இதன் முக்கிய விவரக்குறிப்புகள் இணையத்தில் கசிந்துள்ளன. 6.75-இன்ச் எச்டி பிளஸ் (HD+) எல்சிடி டிஸ்பிளே இதில் வழங்கப்பட்டுள்ளது. 1600x720 பிக்சல்ஸ் தெளிவுத்திறன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) மற்றும் சிறந்த டிஸ்பிளே பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. தூசி மற்றும் நீர் தெளிப்பிலிருந்து பாதுகாக்கும் ஐபி-54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (IP54 dust and splash resistance) வசதியுடன் நேர்த்தியான வடிவமைப்பில் உருவாகியுள்ளது. சக்திவாய்ந்த யுனிசாக் டி8200 (Unisoc T8200) சிப்செட் உடன் இந்த போன் வெளிவருகிறது. சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்க மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு உள்ளது. 8ஜிபி வரை ரேம், 128ஜிபி வரை இன்டெர்னல் மெமரி வசதியுடன் அறிமுகமாகும். கூடுதலாக மெமரி நீட்டிப்பு செய்ய மைக்ரோ எஸ்டி (microSD) கார்டு ஸ்லாட் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. உயர்தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க 50எம்பி AI டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் எல்இடி ஃபிளாஷ் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபிகள், வீடியோ அழைப்புகளுக்காக 8எம்பி அல்லது 16எம்பி கேமரா வழங்கப்படலாம். போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் (Side-mounted Fingerprint Sensor) பாதுகாப்பு வசதி உள்ளது. புத்தம் புதிய ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் அறிமுகமாகிறது. இதற்கான ஆண்ட்ராய்டு, செக்யூரிட்டி அப்டேட்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. பேட்டரி துல்லியமான அளவு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்ல என்றாலும், இது 6000mAh, 6500mAh பேட்டரி திறன் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) ஆதரவுடன் வர வாய்ப்புள்ளது. 5ஜி, 4ஜி, வைஃபை 5, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் (GPS), என்.எப்.சி (NFC), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட அனைத்து நவீன கனெக்டிவிட்டி அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அனைத்து நவீன அம்சங்களையும் கொண்டுள்ள இந்த 'லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி' ஸ்மார்ட்போன் குறைந்த பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாவா நிறுவனம் தனது புதிய 'லாவா விராட் வி1 ப்ரோ 5ஜி' ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் 24-ம் தேதி சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், இதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியாகவுள்ள இந்த போன், 6,500 எம்.ஏ.எச் பேட்டரி மற்றும் 50 எம்.பி ஏ.ஐ கேமரா வசதியுடன் ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. இது 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி திரை, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஐபி-54 தரத்திலான பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது.