PulseNews
தொழில்நுட்பம்

ஏ.ஐ மூலம் உருவாக்கிய உலகின் முதல் வைரஸ்: மருத்துவப் புரட்சியா? மனிதகுல அழிவின் தொடக்கமா?

இயற்கையில் இதுவரை இல்லாத புதிய வகை வைரஸ்களை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் முதன்முறையாக உருவாக்கியுள்ளனர். மருத்துவத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த இத்தொழில்நுட்பம் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பினாலும், இது ஆபத்தான உயிரி ஆயுதங்களை (Biological Weapons) உருவாக்க வழிவகுக்குமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோவிட்-19 வைரஸே ஆய்வகத்திலிருந்து கசிந்ததாகப் பல தகவல்கள் வெளியாக்கப்பட்ட நிலையில், ஏ.ஐ மூலம் வைரஸ்களை உருவாக்குவது மனித குலத்திற்கே ஆபத்தாக முடியும் என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த வைரஸ்கள் 'பாக்டீரியோஃபேஜ்கள்' (Bacteriophages) என்று அழைக்கப்படுகின்றன. இவை பாக்டீரியா மட்டுமே தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. இயற்கை பாக்டீரியோஃபேஜ்களால் அழிக்க முடியாத ஆபத்தான 'ஈ.கோலை' பாக்டீரியாக்கள், ஏ.ஐ மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய வைரஸ்கள் வெற்றிகரமாக அழித்துள்ளதாக 'சயின்ஸ்' (Science) ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் டாக்டர் பிரையன் ஹை (Dr. Brian Hie), மரபணு மொழி மாதிரிகளைப் (Genome language models) பயன்படுத்தி இந்த பாக்டீரியோஃபேஜ் மரபணுக்களை வடிவமைத்தார். குறிப்பிட்ட பாக்டீரியாக்களை அழிக்கும் வகையில் மரபணுக்களை வடிவமைக்கும் இத்தொழில்நுட்பம், மருந்துகளுக்குக் கட்டுப்படாத ஆபத்தான பாக்டீரியா தொற்றுகளைக் குணப்படுத்தவும், 'ஃபேஜ் தெரபி' (Phage therapy) சிகிச்சையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இத்தொழில்நுட்பம் மிகவும் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது உயிரியல் பாதுகாப்பு (Biosafety) மற்றும் உயிரி அச்சுறுத்தல் (Biosecurity) சார்ந்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் மிகவும் சிக்கலான உயிரினங்களையோ அல்லது ஆபத்தான உயிரி ஆயுதங்களையோ உருவாக்க முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாம் இங்கிள்ஸ்பி மற்றும் டாக்டர் மோரிட்ஸ் ஹான்கே ஆகியோர் கூறுகையில், ஜெனரேட்டிவ் ஏ.ஐ மூலம் வைரஸ் மரபணுக்களை உருவாக்கும் திறன் இப்போது வந்துவிட்டது. ஆனால், அதைச் பாதுகாப்பாக வழிநடத்துவதற்கான முறையான கட்டுப்பாடுகளோ, சட்டங்களோ இன்னும் உருவாக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனர். ஆய்வகத்தில் வைரஸ் உருவாக்கப்பட்டது எப்படி? ஆராய்ச்சிக்குழு 'Evo1' மற்றும் 'Evo2' என்ற AI மாதிரிகளைப் பயன்படுத்தியது. 20 லட்சம் பாக்டீரியோஃபேஜ்களின் மரபணுத் தரவுகளைக் கொண்டு இந்த ஏ.ஐ-க்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள், தாவரங்கள் அல்லது விலங்குகளைத் தாக்கும் வைரஸ்களின் மரபணு குறியீடுகள் இதில் சேர்க்கப்படவில்லை என்பதால், ஆபத்தான வைரஸ்கள் உருவாகும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. ஏ.ஐ உருவாக்கிய ஆயிரக்கணக்கான மரபணு மாதிரிகளில் இருந்து 300 மாதிரிகளைத் தேர்ந்தெடுத்து, ஆய்வகத்தில் பூஜ்ஜியத்திலிருந்து (Scratch) புதிய வைரஸ்களாக உருவாக்கினர். இதில் 16 வைரஸ்கள் மட்டுமே உயிர் பிழைத்தாலும், அவைகளின் கலவை மருந்துகளுக்குக் கட்டுப்படாத ஈ.கோலை பாக்டீரியாக்களை நொடியில் அழித்துக் காட்டியது. உலகை அழிக்கும் ஆற்றல் கொண்ட ஒன்றை மனிதர்களே சொந்தமாக உருவாக்குவதை இணையவாசிகள் (Netizens) கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அபோகாலிப்டிக் (Apocalyptic) கேம்களில் பாழடைந்த ஆய்வகங்களில் கேட்கும் ஆடியோ பதிவு போல இது இருக்கிறது என்றும், இப்படித்தான் தொடங்கும்... கடைசியில் மனிதகுலத்தையே அழிக்கும் சோம்பி வைரஸை (Zombie Virus) உருவாக்கி முடிப்பார்கள் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். விஞ்ஞானிகளின் இந்த மிதமிஞ்சிய தன்னம்பிக்கை ஒருநாள் மனித குலத்தையே அழித்துவிடும். மனிதன் கண்டுபிடித்த அனைத்துத் தொழில்நுட்பங்களும் இறுதியில் ஆயுதமாக மாற்றப்பட்டதுதான் வரலாறு என்றும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்களது அச்சத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஏ.ஐ மூலம் உருவாக்கிய உலகின் முதல் வைரஸ்: மருத்துவப் புரட்சியா? மனிதகுல அழிவின் தொடக்கமா?
PulseNews சுருக்கம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் முதன்முறையாகப் புதிய வகை வைரஸ்களை ஆய்வகத்தில் உருவாக்கியுள்ளனர். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிரையன் ஹை, 'Evo1' மற்றும் 'Evo2' ஆகிய ஏ.ஐ மாதிரிகள் மூலம் பாக்டீரியாவை மட்டுமே அழிக்கும் திறன் கொண்ட 'பாக்டீரியோஃபேஜ்' வைரஸ்களின் மரபணுக்களை வடிவமைத்தார். இப்புதிய வைரஸ்கள், மருந்துகளுக்குக் கட்டுப்படாத அபாயகரமான 'ஈ.கோலை' பாக்டீரியாக்களை வெற்றிகரமாக அழித்துள்ளதாக 'சயின்ஸ்' ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது 'ஃபேஜ் தெரபி' சிகிச்சைக்குப் பெரும் உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும், இத்தொழில்நுட்பம் உயிரி ஆயுதங்களை உருவாக்க வழிவகுக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஜெனரேட்டிவ் ஏ.ஐ மூலம் வைரஸ்களை உருவாக்கும் திறன் வந்தாலும், அதனை முறைப்படுத்த போதிய சட்டங்களோ கட்டுப்பாடுகளோ இல்லை எனப் பேராசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மனிதகுலத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய வைரஸ்கள் உருவாவதைத் தடுக்க கடுமையான உயிரியல் பாதுகாப்பு விதிகள் தேவை என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இத்தகைய சோதனைகள் எதிர்காலத்தில் மனிதகுலத்தையே அழிக்கும் அபாயத்தை உருவாக்கும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கடும் கண்டனங்களையும் அச்சத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology