7,000 எம்.ஏ.எச் பேட்டரி, 50 எம்.பி சோனி கேமரா: மோட்டோரோலாவின் புதிய 5ஜி போன் சிறப்பம்சங்கள் என்ன?
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி மேக்ஸ் (moto g max) ஸ்மார்ட்போனை வரும் ஆக.14-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், ஆன்லைனில் வெளியாகியுள்ள இதன் அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை விரிவாகப் பார்க்கலாம். 6.72-இன்ச் 1.5K அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 1272 x 2772 பிக்சல்ஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேம்பட்ட ஜிபியு, சிபியு வேகத்தை வழங்கும் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 சிப்செட் மூலம் இயங்குகிறது. இதனால் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும், ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் இப்போனுக்கு ஆண்ட்ராய்டு மற்றும் பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும். 50எம்பி Sony LYT-600 மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா அடங்கிய டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் எல்இடி பிளாஷ் வசதி உள்ளது. செல்பிகளுக்கும் வீடியோ கால்களுக்கும் 32எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் வருகிறது. கூடுதலாக மெமரியை நீட்டித்துகொள்ள மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது. 7000எம்ஏஎச் திறன் கொண்ட சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் இதனை வேகமாக சார்ஜ் செய்ய டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் (TurboPower Fast Charging) வசதி உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), தூசி மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்கும் IP64 ரேட்டிங் (Dust & Water Resistance), MIL-STD-810H ராணுவ தர சான்றிதழ் கொண்ட உறுதியான கட்டமைப்பு, அஸுல் கார்லோ, கிராஃபைட் ஆகிய 2 கவர்ச்சிகரமான நிறங்கள். 5ஜி, ப்ளூடூத் 5.4, வைஃபை, ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப்-சி போர்ட் கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன. ஆன்லைனில் வெளியாகி உள்ள கசிவுகளின்படி, புதிய மோட்டோ ஜி மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.30,000-க்கு கீழ் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி மேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ள இந்த போன், 6.72-இன்ச் 1.5K அமோலெட் டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 சிப்செட் வசதியுடன் வெளிவருகிறது.
இதில் 7000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி சோனி மெயின் கேமரா மற்றும் 32எம்பி செல்பி கேமரா இடம்பெற்றுள்ளன. ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம், 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, IP64 தரம் மற்றும் MIL-STD-810H சான்றிதழ் கொண்ட இந்த போன், ரூ.30,000-க்கு கீழ் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.