PulseNews
தொழில்நுட்பம்

Long Trip Cars: ரோட் ட்ரிப் போக விரும்புபவரா? நீங்க தேர்வு செய்ய வேண்டிய டாப் 5 SUV மாடல்கள் - ஏன்? எதற்கு?

SUV For Long Trip: இந்தியாவில் அடிக்கடி சாலை பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் தேர்வு செய்ய வேண்டிய, டாப் 5 கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நீண்ட தூர பயணங்களுக்கான கார் மாடல்கள்:

இந்தியாவைச் சேர்ந்த கார் பிரியர்களிடையே எஸ்யுவி மாடலை தேர்வு செய்வது என்பது பிரபலமான வாடிக்கையாக உருவெடுத்துள்ளது. உள்ளூரில் எத்தனையோ வகையிலான பிரிவில் பலதரப்பட்ட மாடல்கள் இருந்தாலும், எஸ்யுவி பாடி டைப் பொதுவாகவே அதிகம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. வசதியான பயணம், அதிகப்படியான க்ரவுண்ட் க்ளியரன்ஸ் மற்றும் பலதரப்பட்ட அம்சங்கள் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. உள்ளூரில் இந்த பிரிவில் பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய ஏராளமான ஆப்ஷன்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்நிலையில் அடிக்கடி ரோட் ட்ரிப் செல்லவும், ஒரு மாதம் வரையிலான நீண்ட பயணங்களுக்காகவும் ஒரு காரை தேடினால், உங்களுக்கான டாப் 5 ஆப்ஷன்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

லாங் ட்ரிப்புக்கான டாப் 5 எஸ்யுவிக்கள்:

1. டொயோட்டா ஃபார்ட்சுனர்

டொயோட்டா ஃபார்ட்சுனர் எனும் மாடலே ஒருவிதமான சுய அறிவிப்பு தான். உள்நாட்டில் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான எஸ்யுவி மாடல்களில் ஒன்றாக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கொடிகட்டி திகழ்கிறது. இந்த காரானது சுமார் 164 bhp மற்றும் 245 Nm டார்க்கை உருவாக்கும் 2.7L டர்போசார்ஜ்ட் பெட்ரோல் மற்றும் சுமார் 201 bhp மற்றும் 500 Nm டார்க்கை உருவாக்கும் மிகவும் பிரபலமான 2.8L டர்போசார்ஜ்டு டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டொயோட்டா ஃபார்ட்சுனர் 4x2 மற்றும் 4x4 வீல் ட்ரைவ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. மிகவும் கரடுமுரடான சாலைகளை கூட அநாயசமாக கடக்கும் திறன் கொண்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை கொண்டு, அதிகபட்சமாக டீசல் எடிஷன் லிட்டருக்கு சுமார் 14 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.34.76 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

2. Isuzu MU-X

இந்திய கார் சந்தையில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டிருந்தாலும், இசுசு MU-X ஒரு மிகவும் நம்பகமான SUV ஆகும். சுமார் 161 bhp ஆற்றலையும் 360 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் 1.9L டர்போசார்ஜ்ட் டீசல் இன்ஜினானது, 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷனை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, இசுசு MU-X-ல் 4x2 மற்றும் 4x4 ட்ரைவ் ஆப்ஷன்களும் உள்ளன. உரிமையாளர்கள் இந்தியாவின் தொலைதூர இடங்களுக்குக் கூட கவலையின்றி ஓட்டிச் செல்ல இது உறுதியளிகிகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.34.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ள இந்த காரானது, சுமார் 13 முதல் 16 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3. மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா:

மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா, இந்தியாவில் அந்நிறுவனத்தின் மிகவும் பிரபலமான SUV மாடல்களில் ஒன்றாக உள்ளது. இது 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் நான்கு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் மூன்று சிலிண்டர் TNGA அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என இரண்டு வகையான இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை இரண்டும் ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு இன்ஜின்களும் முறையே 101 bhp மற்றும் 136.8 Nm டார்க், மற்றும் 114 bhp மற்றும் 122 Nm டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன. இதன் தொடக்க விலை ரூ.10.77 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ள இந்த காரானது, சிஎன்ஜி எடிஷனானது கிலோவிற்கு சுமார் 26.6 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி

4. ஸ்கோடா கோடியாக்

ஸ்கோடா கோடியாக் என்பது செக் நாட்டு வாகன உற்பத்தியாளரின் ஃப்ளாக்‌ஷீப் எஸ்யுவி ஆகும். மிகவும் நம்பகமான எஸ்யுவிகளில் இதுவும் ஒன்றாகும். ஆல்-வீல் டிரைவ் (AWD) வசதியைக் கொண்டிருப்பதால், இந்த காரை தொலைதூர பயணங்களில் பயன்படுத்த சரியான தேர்வாக உள்ளது. இது 201 bhp சக்தியையும் 320 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் 2.0L TSI நான்கு-சிலிண்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. 7 ஸ்பீட் DSG டூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.36.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். லிட்டருக்கு 14.86 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் இந்த கார் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

5. ஹோண்டா எலிவேட்

ஹோண்டா நிறுவனம் இந்தியாவிற்கு வந்ததிலிருந்தே, அதன் கார்கள் நம்பகமானவையாகவும், நம்பிக்கைக்குரியவையாகவும் அறியப்படுகின்றன. அந்த வகையில் எலிவேட், 119 bhp ஆற்றலையும் 145 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் 1.5L நான்கு-சிலிண்டர் i-VTEC இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 6 ஸ்பீட் மேனுவல் அல்லது 7 ஸ்பீட் CVT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹோண்டா எலிவேட்டின் ஆரம்ப விலை ரூ.11.80 லட்சம் ( எக்ஸ்-ஷோரூம் ) ஆகும். சர்வதேச அளவில் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத இந்த கார் லிட்டருக்கு 15 முதல் 17 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Long Trip Cars: ரோட் ட்ரிப் போக விரும்புபவரா? நீங்க தேர்வு செய்ய வேண்டிய டாப் 5 SUV மாடல்கள் - ஏன்? எதற்கு?
PulseNews சுருக்கம்

இந்தியாவில் நீண்ட தூர சாலைப் பயணங்களை மேற்கொள்வதற்கு ஏற்ற சிறந்த 5 எஸ்யுவி (SUV) கார் மாடல்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கார் பிரியர்களிடையே தற்போது எஸ்யுவி ரக கார்களைத் தேர்வு செய்யும் பழக்கம் அதிகரித்து வருவதால், இந்தத் தெரிவு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய சந்தையில் பல்வேறு வகை கார்கள் இருந்தாலும், வசதிக்காக எஸ்யுவி ரக கார்களையே பெரும்பாலானோர் விரும்பித் தேர்வு செய்கின்றனர். பயணங்களின்போது கூடுதல் சௌகரியத்தை வழங்கும் காரணத்தினால், இந்த வகை வாகனங்கள் நீண்ட தூரப் பயணங்களுக்குப் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology