PulseNews
தொழில்நுட்பம்

Mahindra BaaS: XEV 9S, XEV 9e SUV-க்களின் விலையை லட்சங்களில் குறைத்த மஹிந்த்ரா - என்ன மாற்றம்? காரணம் என்ன?

Mahindra BaaS To XEV 9S XEV 9e: மஹிந்த்ரா நிறுவனத்தின் வாடகை பேட்டரி ஆப்ஷன் மூலம் அதன் மின்சார காரின் தொடக்க விலை ரூ.11.45 லட்சமாக குறைந்துள்ளது.

மஹிந்த்ராவின் வாடகை பேட்டரி ஆப்ஷன்:

மஹிந்த்ராவின் அனைத்து போர்ன் எலெக்ட்ரிக் மின்சார கார்களுக்கும், பேட்டரியை வாடகை முறையில் பயன்படுத்திக் கொள்ளும் BaaS சேவை தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அண்மையில் தான் BE 6 ஸ்போர்டெக் மாடலுக்கு இந்த சேவை முதல்முறையாக வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது 7 சீட்டரான XEV 9S மற்றும் XEV 9e ஆகிய மாடல்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று மின்சார எஸ்யுவிக்களின் அனைத்து வேரியண்ட்களுக்கும் இந்த சேவை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மிகப்பெரிய தொகையை செலுத்தி மின்சார எஸ்யுவியை சொந்தமாக்குவதில் உள்ள சிக்கலை குறைத்து, காரை இரண்டு பாகங்களாக பிரித்து குறைந்த முதலீட்டிலேயே பயனர்களின் எளிய அணுகலுக்கான வாய்ப்பை மஹிந்த்ரா ஏற்படுத்தியுள்ளது.

மஹிந்த்ராவின் BaaS ஆப்ஷன் - விலை விவரங்கள்

ஒரே நேரத்தில் வாகனம் மற்றும் பேட்டரி என இரண்டிற்குமான தொகையை செலுத்தி காரை வாங்குவது என்பது சிரமமாக இருக்கக் கூடும். அதேநேரம் வாகனத்திற்கான விலையை மட்டும் கொடுத்து அதனை சொந்தமாக்கிக் கொண்டு பயன்பாட்டிற்கு ஏற்ப வாடகை அடிப்படையில் பேட்டரியை பயன்படுத்திக் கொள்வது மிகப்பெரிய அளவில் முன்பண சுமையை குறைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தத் திட்டத்தின் கீழ், BE 6 Sporteq மாடலின் ஆரம்ப விலை ரூ. 11.45 லட்சம் ஆகும். அதன் பேட்டரி சேவையை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ. 3.75 என்ற கட்டணத்தில் பெறலாம்.

மிகவும் பிரபலமான மஹிந்திரா XEV 9S மாடலானது ரூ. 3.75 என்ற பேட்டரி திட்டத்தின் கீழ், ரூ. 12.65 லட்சம் என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது.இதன் உடன்பிறப்பான XEV 9e, அதே நிபந்தனைகளின் கீழ் ரூ. 13.90 லட்சம் என்ற தொடக்க விலையை கொண்டுள்ளது. மஹிந்திரா இந்த மூன்று மாடல்களிலும் கிலோமீட்டருக்கான கட்டணத்தை ஒரே மாதிரியாக வைத்திருப்பதால், அவற்றுக்கிடையேயான விலை வித்தியாசம் பேட்டரியைச் சார்ந்தது அல்ல, மாறாக வாகனத்தின் தரத்தை மட்டுமே சார்ந்துள்ளது என்பது உறுதிபட விளக்கியுள்ளது.

விலை வித்தியாசம் எவ்வளவு?

மஹிந்த்ரா நிறுவனத்தின் BE 6 Sporteq கார் மாடலின் வழக்கமான விலையானது ரூ.19.45 லட்சத்தில் தொடங்கி ரூ.26.95 லட்சம் வரை நீள்கிறது. ஆனால், வாடகை பேட்டரி ஆப்ஷனில் இந்த காரின் தொடக்க விலை சுமார் ரூ.8 லட்சம் வரை குறைந்து தொடக்க விலை ரூ.11.45 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. XEV 9S மாடலின் வழக்கமான விலை வரம்பானது ரூ.20.65 லட்சத்தில் தொடங்கி ரூ.30.90 லட்சம் வரை நீள்கிறது. வாடகை பேட்டரி ஆப்ஷனில் இந்த காரின் தொடக்க விலை சுமார் ரூ.8 லட்சம் வரை குறைந்து தொடக்க விலை ரூ.12.65 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. XEV 9e கார் மாடலின் வழக்கமான விலை வரம்பானது ரூ.21.90 லட்சத்தில் தொடங்கி ரூ.31.25 லட்சம் வரை நீள்கிறது. வாடகை பேட்டரி ஆப்ஷனில் இந்த காரின் தொடக்க விலை சுமார் ரூ.8 லட்சம் வரை குறைந்து தொடக்க விலை ரூ.13.90 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: Maruti SUV: ரூ.10 லட்சம் பட்ஜெட்டில், 30KM மைலேஜ் எஸ்யுவி ஆன் தி வே - இன்விக்டோவில் விட்டதை பிடிக்க மாருதி தீவிரம்

மஹிந்த்ராவின் திட்ட விரிவாக்க ஏன்?

மஹிந்த்ராவின் போர்ன் எலெக்ட்ரிக் காரின் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யாமல், மின்சார வாகனத்தை சொந்தமாக வைத்திருப்பதற்கான ஆரம்பகட்ட செலவைக் குறைக்கும் வாய்ப்பாக, BE 6 Sporteq மூலம் BaaS சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பு வலுவாக இருந்ததால், INGLO எனப்படும் பிரத்யேக ஸ்கேட்போர்டு எலெக்ட்ரிக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட தங்களது மற்ற மாடல்களுக்கும் வாடகை பேட்டரி ஆப்ஷன் திட்டத்தை மஹிந்த்ரா நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Mahindra BaaS: XEV 9S, XEV 9e SUV-க்களின் விலையை லட்சங்களில் குறைத்த மஹிந்த்ரா - என்ன மாற்றம்? காரணம் என்ன?
PulseNews சுருக்கம்

மஹிந்த்ரா நிறுவனம் தனது மின்சார வாகனங்களுக்கான பேட்டரியை வாடகைக்கு பெறும் 'பாஸ்' (BaaS) சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் எக்ஸ்இவி 9எஸ் (XEV 9S) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) ஆகிய மின்சார எஸ்யூவி கார்களின் ஆரம்ப விலை ரூ. 11.45 லட்சமாகக் குறைந்துள்ளது.

ஏற்கனவே பிஇ 6 (BE 6) ஸ்போர்டெக் மாடலுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பேட்டரி வாடகை வசதி, தற்போது பிற மின்சார வாகனங்களுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறைவான விலையில் மஹிந்த்ராவின் மின்சார கார்களைப் பெற முடியும்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology