ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 722 கி.மீட்டர் மைலேஜ்.. Bajaj Pulsar N160 4V விலை, தரம் என்ன?

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனம் பஜாஜ். இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது. குறிப்பாக, இவர்களின் பல்சர் பைக்குகளுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு உள்ளது.

Bajaj Pulsar N160 4V:

பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்திய இரு சக்கர வாகனம் இந்த Bajaj Pulsar N160 4V. இந்த பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்த பைக்கில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது.

1. Pulsar N160 4V S - ரூபாய் 1 லட்சத்து 65 ஆயிரத்து 170

2. Pulsar N160 4V SS - ரூபாய் 1 லட்சத்து 75 ஆயிரத்து 535

எஞ்ஜின் திறன்:

இந்த பைக்கில் 164.5 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 கியர்கள் உள்ளது. இந்த பைக் 151 கிலோ எடை கொண்டது. இதன் இருக்கை 795 மி.மீட்டர் உயரம் கொண்டது. கருப்பு, வெள்ளை மற்றும் நீலம் நிறம் கொண்டது.

722 கி.மீட்டர் மைலேஜ்:

இந்த பைக்கில் 14 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. ஒரு கியர் கீழேவும், மற்ற 4 கியர் மேலேவும் இயக்க வேண்டும். அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் ஆகும். இந்த பைக் 51.6 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. ஒரு முறை டேங்கரை நிரப்பினால் 722 கி.மீட்டர் வரை மைலேஜ் அளிக்கும்.

ரைடிங் மோட் உள்ளது. இருக்கை உயரம் 795 மி.மீட்டர் ஆகும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 17 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

யுஎஸ்டி ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் மோனோஷாக் வித் நைட்ராக்ஸ் சஸ்பென்சன் உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மி.மீட்டர் ஆகும். ரிசர்வ் டேங்கர் வசதி 2.8 லிட்டர் ஆகும்.

75 ஆயிரம் கி.மீட்டர் அல்லது 5 வருட வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே வசதி உள்ளது. ப்ளூடூத், ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. மைலேஜ் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டலில் உள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர்ஸ், டிஜிட்டலில் உள்ளது. டேகோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது.

வசதிகள்:

ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர், லோ ப்யூல் இண்டிகேட்டர், லோ ஆயில் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. நேரம் பார்க்கும் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/ மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது.

சைலன்ஸ் கவர் வசதி, கில் சுவிட்ச் வசதி உள்ளது. எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. பகலிலும் எரியும் விளக்குகள் வசதி உள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் விளக்குகள் வசதி உள்ளது. டர்ன் சிக்னல் விளக்குகள் ஹாலோஜன் விளக்குகள் வசதியாக உள்ளது.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ், தனது புகழ்பெற்ற பல்சர் வரிசையில் புதிய Bajaj Pulsar N160 4V பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பைக் ஒரே முறை எரிபொருள் டேங்கரை நிரப்பினால் 722 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டது.
இந்த புதிய மாடலில் மொத்தம் இரண்டு வேரியண்டுகள் உள்ளன. பஜாஜ் பைக்குகளுக்கென இந்தியாவில் தனி வரவேற்பு உள்ள நிலையில், இந்த புதிய பல்சர் மாடலின் விலை மற்றும் தர அம்சங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.