8 மணி நேரம் டைம்... 7 மணி 15 நிமிடத்தில் முடிஞ்ச வேலை! இணையத்தை கலக்கும் ரயில்வே வீடியோ!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள வஸ்திராபூர் ரயில் நிலையம் எப்போதும் அதிக அளவிலான ரயில் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இயங்கக்கூடிய பகுதியாகும். இங்கு அடிக்கடி ரயில்கள் வந்து செல்வதால், தண்டவாளத்தைக் கடந்து செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கடும் சிரமங்களைச் சந்தித்து வந்தனர். இதனால், பாதசாரிகள் பாதுகாப்பாகச் சென்று வர நிரந்தரச் சுரங்கப்பாதை ஒன்றைக் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திற்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

7 மணி 15 நிமிடங்களில் முடிந்த பணி

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், வஸ்திராபூரில் அதிவேகமாகச் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்தது. இதற்காகத் தொழிற்சாலையில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் (RCC) பாகங்களைக் கொண்டு சுரங்கப்பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டது. தேவையான பரிசோதனைகள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு, கடந்த 25-ஆம் தேதி இரவில் இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. எட்டு மணி நேரத்திற்குள் பணியை முடிக்க திட்டமிட்டிருந்த நிலையில், ரயில்வே அதிகாரிகளின் திறமையான செயல்பாட்டால் 70 அடி நீளமுள்ள அந்தச் சுரங்கப்பாதை பணி வெறும் 7 மணி 15 நிமிடங்களிலேயே வெற்றிகரமாக நிறைவடைந்தது.

ரயில் போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை

இந்தப் பணிகள் அனைத்தும் இரவு நேரத்திலேயே மேற்கொள்ளப்பட்டதால், வழக்கமான ரயில் போக்குவரத்தில் எந்தவிதத் தடங்கலோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை. திட்டமிட்ட நேரத்தை விட விரைவாகவே கட்டி முடிக்கப்பட்ட இந்தச் சுரங்கப்பாதையின் முழுப் பணி தொடர்பான காணொலியை ரயில்வே நிர்வாகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மிகக் குறைந்த நேரத்தில் மக்களின் பயன்பாட்டிற்காகப் பாதசாரி சுரங்கப்பாதையை உருவாக்கி ரயில்வே அதிகாரிகள் படைத்துள்ள இந்தச் சாதனை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
Source: Read Full Article

குஜராத்தின் அகமதாபாத் வஸ்திராபூர் ரயில் நிலையம் அதிக மக்கள் நடமாட்டமும் ரயில் போக்குவரத்தும் கொண்ட பகுதியாகும். இங்கு தண்டவாளத்தைக் கடப்பதில் பொதுமக்கள் நீண்டகாலமாகச் சிரமப்பட்டு வந்ததால், பாதுகாப்பான சுரங்கப்பாதை அமைக்கக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, திட்டமிடப்பட்ட 8 மணிநேரப் பணியை ரயில்வே நிர்வாகம் வெறும் 7 மணி நேரம் 15 நிமிடங்களில் முடித்து அசத்தியுள்ளது. இந்த சாதனை குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.