விண்வெளியில் நடனமாடும் பச்சை நிற ஒளிகள்: விண்வெளி வீரர் வெளியிட்ட மிரள வைக்கும் வீடியோ
விண்வெளியில் இருந்து பூமியின் வளிமண்டலத்தை அழகுபடுத்தும் ‘பச்சை நிற வடதுருவ ஒளிகளை’ படம் பிடித்து, விண்வெளி வீரர் டான் பெட்டிட் பகிர்ந்த வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பூமியின் வளிமண்டலத்தில் பச்சை நிற மின்ஒளி அலை அலையாகப் பரவி, விண்வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு அசாத்தியமான இயற்கை நடனம் போலக் காட்சியளிக்கிறது. இந்த அரிய காட்சியைத் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்த விண்வெளி வீரர் டான் பெட்டிட், "விண்வெளிப் பயணத்தில் அனுபவிக்கக்கூடிய மிகச் சிறந்த மற்றும் பிரமிப்பூட்டும் தருணங்களில் இதுவும் ஒன்று" எனக் குறிப்பிட்டுள்ளார். Orbiting over wavy green auroras! Moments like these are some of the most surreal in spaceflight. What a view! pic.twitter.com/3HXJGt51DE — Don Pettit (@astro_Pettit) August 22, 2026 விண்வெளியில் இருந்து பார்க்கும் மாறுபட்ட காட்சி பொதுவாக, பூமியின் துருவப் பகுதிகளில் இருந்து வானத்தைப் பார்க்கும்போது இந்த வண்ணமயமான ஒளிகள் தெரியும். ஆனால், பூமிக்கு வெளியே சில நூறு கிலோமீட்டர் உயரத்தில் இருந்து, ஒளிரும் இந்த பச்சை அலைகள் பூமி முழுவதும் பரவுவதைப் பார்ப்பது முற்றிலும் தனித்துவமான அனுபவமாகும். சூரியனில் இருந்து வெளிப்படும் மின்சுமை கொண்ட துகள்கள், பூமியின் காந்தப்புலத்தோடும் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களோடும் மோதும்போது இந்த ‘அரோரா’ என அழைக்கப்படும் துருவ ஒளிகள் உருவாகின்றன. விண்வெளியின் பேரமைதியிலும் இருளிலும் பூமி இவ்வாறு பச்சை நிறத்தில் மிளிர்வது, விண்வெளிப் பயணத்தின் மறக்க முடியாத அழகியலை உலகிற்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

விண்வெளியில் இருந்து பூமியின் வளிமண்டலத்தைப் படம்பிடித்த விண்வெளி வீரர் டான் பெட்டிட், அங்கு தோன்றும் பச்சை நிற வடதுருவ ஒளிகளின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அலை அலையாகப் பரவும் இந்த ஒளிகள், விண்வெளியில் ஒரு நடனம் போலக் காட்சியளிப்பது இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த அபூர்வக் காட்சியைத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவேற்றியுள்ள டான் பெட்டிட், விண்வெளிப் பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் மிகவும் பிரமிப்பூட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இயற்கை நிகழ்த்தும் இந்த அசாத்தியமான காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.