PulseNews
தொழில்நுட்பம்

மக்கள் வரிப்பணத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு காரா? - சீமான் கேள்வி

எம்.எல்.ஏ.க்கள் 190 பேரிடம் ஏற்கனவே கார் உள்ள நிலையில் அனைவருக்கும் மக்கள் வரிப்பணத்தில் வழங்க வேண்டிய அவசியம் என்ன? முதலமைச்சர் விஜய்க்கு நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, மரியவில்சன் உள்ளிட்ட பெரும் செல்வந்தர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் மகிழுந்து வழங்க வேண்டிய அவசியம் என்ன? த.வெ.க எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்க வேண்டும் என்றால் மக்கள் வரிப்பணத்தை ஏன் எடுக்கிறீர்கள் என சீமான் கேள்வி. தீயசக்தி, தீர்ந்தசக்தி என்று முதலமைச்சர் விஜய் கூறும் கட்சி எம்எல்ஏக்களுக்கும் கோடிகளை கொடுத்து சொகுசு வாகனங்கள் வழங்குவது தேவைதானா? விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைய வைத்த நெல்லைப் பாதுகாக்க கிடங்குகள் இல்லாத நிலையில் வரிப்பணத்தை வீணடிப்பதா எனவும் சீமான் காட்டம்.

Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மக்கள் வரிப்பணத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு காரா? - சீமான் கேள்வி
PulseNews சுருக்கம்

மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்தி 190 எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்குவது ஏன் என்று முதலமைச்சர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே கார் வசதி கொண்டவர்களுக்கு மீண்டும் அரசு நிதியில் கார் வழங்குவது தேவையற்றது என்று அவர் விமர்சித்துள்ளார்.

குறிப்பாக, ஆதவ் அர்ஜூனா மற்றும் மரியவில்சன் போன்ற பெரும் செல்வந்தர்களாக உள்ள அமைச்சர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் கார் வழங்குவது எந்த வகையில் நியாயம் என சீமான் வினவியுள்ளார். த.வெ.க எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்க விரும்பினால், அதற்கு மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்று அவர் சாடியுள்ளார்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology