10,000 எம்.ஏ.எச் பேட்டரி, 100 வாட் பாஸ்ட் சார்ஜிங்: மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரெட்மி நோட் 17 ப்ரோ சீரிஸ் மாடல்களின் இந்திய வெளியீட்டுத் தேதி கசிந்துள்ளது. குளோபல் மார்க்கெட் வெளியீட்டுக்கு முன்னதாகவே விவரங்கள் கசிந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலகளாவிய சந்தையில் ஆக.27-ஆம் தேதியன்று ரெட்மி நோட் 17 ப்ரோ சீரிஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் ரெட்மி நோட் 17 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல் வெளியாகின்றன. பிரபல டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் (Yogesh Brar) தனது 'எக்ஸ்' பக்கத்தில் பகிர்ந்த தகவலின்படி, இந்தியாவில் இவ்விரு ஸ்மார்ட்போன்களும் செப்டம்பர் 15 ஆம் தேதியன்று வெளியாக உள்ளன. முந்தைய ரெட்மி நோட் 16 ப்ரோ சீரிஸ் மாடல்களை விட ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை கூடுதல் விலையுடன், மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டில் (Mid-range segment) இவை வெளியாக வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வ விலை மற்றும் பட்ஜெட் விவரங்கள் இந்திய வெளியீட்டுக்கு முன்பாகத் தெரியவரும். ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 5 (Snapdragon 6 Gen 5) சிப்செட் மற்றும் 12 ஜிபி ரேம், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய பிரம்மாண்டமான 10000mAh பேட்டரி, 6.83 இன்ச் 1.5K ரெசொலூஷன் கொண்ட OLED டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 50 எம்பி மெயின் கேமரா, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் சார்ந்த ஹைப்பர்ஓஎஸ் 3 உள்ளது. IP69, IP68, IP69K மற்றும் IP66 ஆகிய டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பு ரேட்டிங்குகள், பெரிய பேட்டரி, அதிவேக சார்ஜிங் மற்றும் ஹீட் கண்ட்ரோல் வசதிகள் இருப்பதால் இது சிறந்த கேமிங் மாடலாகவும் இருக்கும். ரெட்மி நோட் 17 ப்ரோ அம்சங்கள் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 4 சிப்செட், 64W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 9000mAh பேட்டரி, 6.83 இன்ச் OLED டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட். 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் சார்ந்த ஹைப்பர்ஓஎஸ் 3 (HyperOS 3).

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரெட்மி நோட் 17 ப்ரோ சீரிஸ் மாடல்களின் வெளியீட்டுத் தகவல்கள் கசிந்துள்ளன. ரெட்மி நோட் 17 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஆகிய இந்த ஸ்மார்ட்போன்கள், வரும் ஆகஸ்ட் 27 அன்று உலகளாவிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
குறிப்பாக, ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் மாடலானது 10,000 எம்.ஏ.எச் பேட்டரி மற்றும் 100 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதிகளுடன் வெளியாக உள்ளது. உலக சந்தைக்கு முன்னதாகவே இந்த விவரங்கள் கசிந்திருப்பதால், தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.