PulseNews
தொழில்நுட்பம்

சீனாவில் தொடங்கிய உலக ரோபோ மாநாட்டை பார்வையிட குவிந்த மக்கள்..!

2026ஆம் ஆண்டுக்கான உலக ரோபோ மாநாடு சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள சர்வதேசக் கண்காட்சி மையத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. மனித-ரோபோ கூட்டுவாழ்வை மையமாகக் கொண்டு நடக்கும் இம்மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளளன. இந்த மாநாட்டில், ஷாங்காய் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட 'நியூ லாய்' ((Niu Lai)) எனும் பிரபல ரோபோ பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. 'நியூ லாய்' என்ற சீன அனிமேஷன் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரத்தின் அடிப்படையில் இந்த ரோபோவடிவமைக்கப்பட்டுள்ளது. பியானோ மற்றும் கிட்டார் வாசிப்பது, மனிதர்களுடன் டேபிள் டென்னிஸ் மற்றும் ஹாக்கி விளையாடுவது போன்ற திறன்களை ரோபோக்கள் வெளிப்படுத்தியுள்ளன.

Polimer News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
சீனாவில் தொடங்கிய உலக ரோபோ மாநாட்டை பார்வையிட குவிந்த மக்கள்..!
PulseNews சுருக்கம்

சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள சர்வதேச கண்காட்சி மையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான உலக ரோபோ மாநாடு கோலாகலமாகத் தொடங்கியது. மனிதர்களும் ரோபோக்களும் இணைந்து செயல்படுவதை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த நிகழ்வில், உலகம் முழுவதிலுமிருந்து 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இந்த மாநாட்டில் ஷாங்காய் நிறுவனம் அறிமுகப்படுத்திய 'நியூ லாய்' எனும் ரோபோ பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. புகழ்பெற்ற சீன அனிமேஷன் திரைப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்தின் வடிவமைப்பைக் கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology