ரெடியா மாமே..இந்தியாவிற்குள் அறிமுகமாகிறது Kia Carnival Hybrid - எப்போ தெரியுமா?

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று கியா. இவர்களின் கார்களுக்கு என்று இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கியாவின் கார்களில் மிகவும் பிரபலமான காராக இருப்பது Kia Carnival.

4ம் தேதி அறிமுகம்:

மிகவும் விலை உயர்ந்த இந்த காரின் ஹைப்ரிட் மாடல் தயாரிக்கும் பணி ஏற்கனவே நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அந்த கார் அறிமுகமாகும் தேதி அறவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் வரும் செப்டம்பர் 4ம் தேதி அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் சொகுசு காரான இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

1.6 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் எஞ்ஜின்:

இந்த காரில் 1.6 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஹைப்ரிட் மோட் என்பதால் 54 கிலோவாட் எலக்ட்ரிக் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 6 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 242 எச்பி குதிரை ஆற்றல் கொண்ட இந்த Kia Carnival Hybrid காரின் இழுதிறன் 367 என்எம் ஆகும்.

இந்த காரின் மிகப்பெரிய சிறப்பம்சமே இதன் உட்கட்டமைப்பும், வசதியுமே ஆகும். இதன் உள்ளே கேபின் வசதிகள் மிகவும் செளகரியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கால்களை நன்கு நீட்டி மிகவும் செளகரியமாக அமரும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் இரண்டு டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

12.3 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 11 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. போஸ் ஆடியோ வசதி கொண்டது. டிஜிட்டல் ரியர் வியூ மிர்ரர் வசதி உள்ளது. கியா கனெக்ட், வயர்லஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதி உள்ளது. டூயல் சன்ரூஃப் மேற்கூரை வசதி உள்ளது.

வசதிகள்:

பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இந்த Kia Carnival Hybrid காரில் கொலிசன் அவாய்டன்ஸ் அசிஸ்ட், லேன் கீப்பிங் அசிஸ்ட், லேன் ஃபாலோயிங் அசிஸ்ட், ப்ளைண்ட் ஸ்பாட் கொலிசன் வார்னிங், ரியர் கிராஸ் ஃட்ராபிக் கொலிசன் அவாய்டன்ஸ் அசிஸ்ட் மற்றும் ஹைவே ட்ரைவிங் அசிஸ்ட் மற்றும் ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் வசதிகள் உள்ளது.

5156 மி.மீட்டர் நீளம், 1994 மி.மீட்டர் அகலமும், 1740 மி.மீட்டர் உயரமும் கொண்டது இந்த Kia Carnival Hybrid கார் ஆகும். 19 இன்ச் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி டெய்ல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

விலை எப்படி?

இன்னும் 3 நாட்களில் அறிமுகமாக உள்ள இந்த Kia Carnival Hybrid கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 56 லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கியா நிறுவனத்தின் கார்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அந்த நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான கியா கார்னிவல் (Kia Carnival)-ன் ஹைப்ரிட் பதிப்பை அறிமுகம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த சொகுசு காரின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இது வரும் செப்டம்பர் 4-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.