புகைப்படம், வீடியோ, ரீல்ஸுக்கு இனி இடமில்லை! – தமிழக கோயில்களில் நாளை முதல் செல்போன் தடை
பக்தர்களிடம் இருந்து செல்போன்களைப் பெற்று பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ரசீதும் வழங்கப்படும். பக்தர்கள் கோயிலில் இருந்து திரும்பிச் செல்லும்போது, தங்களது செல்போன்களை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் தேவையான பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகக் கோயில்களில் புகைப்படம், வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாளை முதல் செல்போன்களுக்கு அனுமதி இல்லை. கோயிலுக்கு வரும் பக்தர்களின் செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு, ஒரு போனுக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
இவ்வாறு பெறப்படும் செல்போன்களுக்கு உரிய ரசீது வழங்கப்படும். பக்தர்கள் மீண்டும் திரும்பும்போது தங்களது செல்போன்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில், தேவையான பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.