ராவணன் மவன்டா.. யமஹாவின் Yamaha FZ X பைக்கில் இவ்வளவு சிறப்புகளா?

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனமாக திகழ்வது யமஹா. இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

Yamaha FZ X:

யமஹா நிறுவனத்தின் வெற்றிகரமான Yamaha FZ X பைக்கின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இதில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது.

1. FZ X Standard - ரூபாய் 1 லட்சத்து 51 ஆயிரத்து 441

2. FZ X Dark Matte Blue Purple - ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரத்து 962

149 சிசி எஞ்ஜின்:

இதில் 149 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 கியர்கள் உள்ளது. இதன் எடை 139 கிலோ ஆகும். இதன் இருக்கை உயரம் 810 மி.மீட்டர் ஆகும். இந்த FZ X பைக் கருப்பு, நீலம் மற்றும் அடர் நீலம் ஆகிய 3 வண்ணங்களில் உள்ளது. இதில் 12.2 பிஎச்பி குதிரைத் திறன் உள்ளது. 13.3 என்எம் டார்க் இழுதிறன் உள்ளது.

470 கி.மீட்டர் மைலேஜ்:

110 கி.மீட்டர் வேகத்தில் அதிகபட்சமாக செல்லலாம். மொத்தமுள்ள 5 கியர்களில் ஒரு கியரை கீழேவும், மற்ற 4 கியரை மேலேவும் இயக்க வேண்டும். பிஎஸ்6 பாஸ் 2 எமிஷன் ஸ்டாண்டர்ட் எமிஷன் உள்ளது. 47 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 10 லிட்டர் பெட்ரோல் டேங்கர் இதில் உள்ளது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 470 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் வசதி உள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் இதில் உள்ளது. இதில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 17 இன்ச், பின்பக்கம் 17 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோகிராஸ் சஸ்பென்சன் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மி.மீட்டர் ஆகும். 1.6 லிட்டர் ரிசர்வ் டேங்கர் வசதி உள்ளது. 1330 மிமீட்டர் வீல்பேஸ் வசதி உள்ளது. 30 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருட வாகன வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. எல்சிடி டிஸ்ப்ளே வித் ப்ரைட்னஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. ப்ளூடூத் கனெக்ஷன் வசதி உள்ளது.

ஸ்பீடோமீட்ரட், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் வசதி உள்ளது. 2 ட்ரிப்மீட்டர் டிஜிட்டல் வசதி உள்ளது. டிஜிட்டல் டேகோமீட்டரில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம் வசதியும் உள்ளது. பெட்ரோல் குறைந்தால் எச்சரிக்கும் லோ ஃப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹைபீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் வந்தால் அலர்ட் செய்யும் வசதியும் உள்ளது.

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள யமஹா நிறுவனம், தனது பிரபலமான FZ X மாடல் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்த பைக்கின் தரம் மற்றும் மைலேஜ் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்வது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பைக் மொத்தம் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கின்றன. இதில் FZ X ஸ்டாண்டர்டு மாடல் 1 லட்சத்து 51 ஆயிரத்து 441 ரூபாய்க்கும், டார்க் மேட் புளூ பர்பிள் மாடல் 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.