PulseNews
தொழில்நுட்பம்

வெறும் 6.29 மி.மீ ஆனா 10,100 எம்.ஏ.எச் பேட்டரி: களமிறங்கிய ஹானர் பேட் 20 ப்ரோ பேப்பர்லைக் எடிஷன்

ஹானர் (HONOR) நிறுவனம் தனது புதிய டேப்லெட் மாடலான 'ஹானர் பேட் 20 ப்ரோ பேப்பர்லைக் எடிஷன்' (HONOR Pad 20 Pro Paperlike Edition) மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 6.29 மி.மீ மெல்லிய உடலமைப்பில் பிரம்மாண்டமான 10100mAh பேட்டரி, 6 ஸ்பீக்கர்கள் மற்றும் ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு டிஸ்பிளே போன்ற பல்வேறு பிரீமியம் அம்சங்களுடன் இந்த டேப்லெட் வெளியாகியுள்ளது. அல்ட்ரா பிரீமியம் அனுபவத்திற்காக 12.1 இன்ச் 3K (3000 x 1872 பிக்சல்கள்) ரெசல்யூஷன் கொண்ட TFT LCD (IPS) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 165Hz புதுப்பிப்பு வீதம் (Refresh Rate), 700 HBM பிரைட்னஸ், DCI-P3 வைடு கலர் காமட் மற்றும் சிறந்த திரையனுபவத்திற்காக ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு (IMAX Enhanced) சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் அதிவேக ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் மூலம் இயங்குகிறது. கிராபிக்ஸ் தேவைகளுக்காக இதில் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 16 (Android 16) அடிப்படையிலான மேஜிக்ஓஎஸ் 10.0 (MagicOS 10.0) இயங்குதளத்தில் செயல்படுகிறது. 8 ஜிபி ரேம் (RAM) மற்றும் 256 ஜிபி உள்ளடக்க மெமரி (Internal Storage) ஆதரவுடன் இந்த மாடல் வெளிவருகிறது. புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை ஸ்கேன் செய்ய பின்புறத்தில் 13 எம்பி (13MP) மெயின் கேமரா மற்றும் வீடியோ கால்கள், செல்ஃபிகளுக்காக முன்புறத்தில் 8 எம்பி (8MP) கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சிறந்த மல்டிமீடியா அனுபவத்திற்காக 6 ஸ்பீக்கர்கள் மற்றும் நாய்ஸ் குறைப்பு வசதிக்காக டூயல் மைக்ரோபோன்கள் உள்ளன. இதில் டிடிஎஸ்: எக்ஸ் அல்ட்ரா சவுண்ட் (DTS: X Ultra Sound) மற்றும் ஹானர் ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) தொழில்நுட்ப ஆதரவும் இடம்பெற்றுள்ளது. நீண்ட நேரப் பயன்பாட்டிற்காக 10100mAh பிரம்மாண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதை விரைவாக சார்ஜ் செய்ய 66W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. பெரிய பேட்டரி இருந்தபோதிலும், இதன் தடிமன் வெறும் 6.29 மி.மீ மட்டுமே உள்ளது. பிரீமியம் மெட்டாலிக் ஃபினிஷிங் கொண்ட உடலமைப்புடன் வருவதால் இதன் எடை 537 கிராம் ஆக இருக்கிறது. வை-பை 7 (Wi-Fi 7), ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0), டைப்-சி போர்ட் (Type-C) மற்றும் ஓடிஜி (OTG) சப்போர்ட் உள்ளன. மேலும், எழுத்து மற்றும் வரைதல் பணிகளுக்காக 'ஹானர் மேஜிக் பென்சில் 4எஸ்' (HONOR Magic Pencil 4s) ஆதரவையும் இது கொண்டுள்ளது. இந்த மாடலின் அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது உலகளாவிய சந்தையில் அறிமுகமாகி இருப்பதால், அந்தந்த நாடுகளின் சந்தைக்கு ஏற்ப விலை மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The Indian Express13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வெறும் 6.29 மி.மீ ஆனா 10,100 எம்.ஏ.எச் பேட்டரி: களமிறங்கிய ஹானர் பேட் 20 ப்ரோ பேப்பர்லைக் எடிஷன்
PulseNews சுருக்கம்

ஹானர் நிறுவனம் தனது புதிய டேப்லெட் மாடலான 'ஹானர் பேட் 20 ப்ரோ பேப்பர்லைக் எடிஷன்' சாதனத்தை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 6.29 மி.மீ மெல்லிய உடல் அமைப்பைக் கொண்ட இந்த டேப்லெட்டில், 10,100 mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த டேப்லெட் 12.1 இன்ச் அளவுள்ள 3K (3000 x 1872 பிக்சல்கள்) ரெசல்யூஷன் கொண்ட TFT LCD (IPS) திரையைக் கொண்டுள்ளது. மேலும், ஐமேக்ஸ் என்ஹான்ஸ்டு டிஸ்பிளே மற்றும் 6 ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் அம்சங்களுடன் இது வெளியாகியுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology