PulseNews
தொழில்நுட்பம்

பேங்க் அக்கவுண்ட் டூ சோஷியல் மீடியா வரை... ஓ.டி.பி எதுக்கு வருது? உண்மையான வேலை என்ன தெரியுமா?

ஒ.டி.பி என்பதன் முழுபெயர் ஒன்டைம் பாஸ்வேடு. இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய, குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் ஒரு ரகசியக் குறியீடு. பொதுவாக 4, 6 அல்லது 8 இலக்கங்களில் வரும் இந்த குறியீடு, இ-மெயில் அல்லது ஆப் மூலம் நமக்கு அனுப்பப்படுகிறது. உங்க அடையாளத்தை உறுதிசெய்யவும், உங்க அக்கவுண்டை பாதுகாப்பாக வைத்திருக்கவுமே ஒ.டி.பி அனுப்பப்படுகிறது. ஒருவேளை உங்களின் பாஸ்வேர்டு யாருக்காவது தெரிந்துவிட்டாலும் கூட, இந்த ஒ.டி.பி இல்லாமல் அவர்களால் உங்க கணக்கிற்குள் நுழையவே முடியாது. இதனால்தான் வங்கிகள், யூ.பி.ஐ ஆப்கள், இ-காமர்ஸ், சமூக ஊடகங்கள் ஒ.டி.பி-ஐ பிரதான பாதுகாப்பாக பயன்படுத்துகின்றன. நீங்க வங்கிக்கணக்கில் லாகின் செய்வது, ஆன்லைனில் பணம் அனுப்புவது அல்லது புதிய பாஸ்வேர்டு உருவாக்குவது போன்ற முக்கியமான வேலைகளை செய்யும்போது, சிஸ்டம் தானாகவே பிரத்யேக ஒ.டி.பி-ஐ உருவாக்கும். அந்த குறியீடு உடனடியாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது இ-மெயிலுக்கு அனுப்பப்படும். நீங்க அந்த சரியான ஒ.டி.பி-ஐ உள்ளீடு செய்தால் மட்டுமே, அந்தச் செயல்முறை வெற்றிகரமாக நிறைவடையும். பாதுகாப்பு காரணங்களுக்காகவே ஒ.டி.பி சில நிமிடங்களில் காலாவதியாகிவிடும். ஒருவேளை ஒ.டி.பி நீண்ட நேரம் செல்லுபடியானால், அதை வேறு யாராவது திருடி தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால்தான் பெரும்பாலான ஒ.டி.பி-கள் 30 விநாடிகள் முதல் 10 நிமிடங்களுக்குள் காலாவதியாகிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வங்கி மற்றும் சைபர் பாதுகாப்பு அமைப்புகள் எப்போதும் ஒ.டி.பி-ஐ யாருடனும் பகிர வேண்டாம் என்று எச்சரித்து கொண்டே இருக்கின்றன. உங்கள் ஒ.டி.பி ஒருவருக்கு தெரிந்துவிட்டால், அவர் உங்க வங்கி கணக்கு, யூ.பி.யை, இ-மெயில் அல்லது சோஷியல் மீடியா கணக்குகளை நொடியில் ஹேக் செய்ய முடியும். சைபர் திருடர்கள் தங்களை வங்கி அதிகாரி, சி.பி.ஐ அதிகாரி அல்லது அரசு ஊழியர் போலப் பேசி உங்களை ஏமாற்றி ஒ.டி,பி-ஐக் கேட்க கூடும். எனவே, எக்காரணத்தைக் கொண்டும் அதை யாரிடமும் சொல்லாதீர்கள். ஒ.டி.பி வலுவான பாதுகாப்பு அம்சம்தான், ஆனால் அது மட்டுமே அனைத்து சைபர் தாக்குதல்களையும் தடுத்துவிட முடியாது. எனவே, அதனுடன் சேர்த்து பலமான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது, 2 அடுக்கு பாதுகாப்பு, அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பயன்படுத்துவது மற்றும் தனிநபர் விழிப்புணர்வு ஆகியவையும் மிகவும் அவசியம். இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 550 கோடி ஒ.டி.பி எஸ்.எம்.எஸ்-கள் அனுப்பப்படுகின்றன. இது இந்தியாவை உலகின் மிகப்பெரிய ஒ.டி.பி சந்தையாக மாற்றியுள்ளது. இந்தியாவில் உள்ள சுமார் 90% வங்கிகள் மற்றும் ஃபின்டெக் நிறுவனங்கள், எஸ்.எம்.எஸ் ஒ.டி.பி-ஐ தான் தங்களின் முதன்மை பாதுகாப்பு அம்சமாக பயன்படுத்துகின்றன. இந்தியாவின் நியோபேங்ஸ் மற்றும் டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள் மட்டும் மாதத்திற்கு 200 கோடிக்கும் அதிகமான ஒ.டி.பி-களை அனுப்புகின்றன. இந்தியாவில் நடக்கும் மொத்த சைபர் குற்றங்களில், 25%-க்கும் அதிகமானவை ஒ.டி.பி தொடர்பான மோசடிகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. உங்க பாஸ்வேர்டு கதவு என்றால், ஒ.டி.பி என்பது அதன் டிஜிட்டல் சாவியை எப்போதும் பிறரிடம் கொடுக்காதீர்கள்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology