PulseNews
தொழில்நுட்பம்

உலகின் மிகப்பெரிய பேட்டரி-எலக்ட்ரிக் விமானத்தை வெற்றிகரமாக இயக்கி சோதனை..!

ஸ்வீடனைச் சேர்ந்த ஹார்ட் ஏரோஸ்பேஸ் (( Heart Aerospace )) என்ற விமான நிறுவனம், உலகின் மிகப்பெரிய பேட்டரி-எலக்ட்ரிக் விமானத்தை வெற்றிகரமாக இயக்கி சோதனை செய்தது. அமெரிக்காவின் பிளாட்ஸ்பர்க் விமான நிலையத்தில் 'X1' என்ற 11300 கிலோ எடை கொண்ட எலக்ட்ரிக் விமானம், 1,100 அடி உயரத்தில் பறக்கவிடப்பட்டது. 5 டாலருக்கும் குறைவான மதிப்புள்ள மின்சாரத்தைக் கொண்டு 27 நிமிடம் பறந்து சோதனையை நிறைவு செய்தது 30 பேர் பயணிக்கக்கூடிய பேட்டரி-எலக்ட்ரிக் விமான சேவையை 2031ஆம் ஆண்டுக்குள் வணிக ரீதியாகத் தொடங்க ஹார்ட் ஏரோஸ்பேஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. பாரம்பரிய விமானங்களுடன் ஒப்பிடும்போது இந்த விமானத்தை இயக்குவதற்கு 40 சதவீதம் வரை செலவு குறையும் என்று கூறப்படகிறது.

Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
உலகின் மிகப்பெரிய பேட்டரி-எலக்ட்ரிக் விமானத்தை வெற்றிகரமாக இயக்கி சோதனை..!
PulseNews சுருக்கம்

ஸ்வீடனைச் சேர்ந்த ஹார்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், உலகின் மிகப்பெரிய பேட்டரி-எலக்ட்ரிக் விமானத்தைச் சோதனை முறையில் வெற்றிகரமாக இயக்கியுள்ளது. அமெரிக்காவின் பிளாட்ஸ்பர்க் விமான நிலையத்தில், 11,300 கிலோ எடை கொண்ட 'X1' ரக விமானம் 1,100 அடி உயரத்தில் பறக்கவிடப்பட்டது.

சுமார் 5 டாலருக்கும் குறைவான மின்சாரச் செலவில் இந்த விமானம் 27 நிமிடங்கள் பறந்து தனது சோதனையை நிறைவு செய்தது. 30 பயணிகள் பயணிக்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் விமானச் சேவையை, 2031-ஆம் ஆண்டுக்குள் வணிக ரீதியாகத் தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology