PulseNews
தொழில்நுட்பம்

Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!

இன்றைய டிஜிட்டல் உலகில் செய்தித்தாள்களை படிக்கும் பழக்கும் குறைந்து வருகிறது. செய்திகளை தொலைக்காட்சிகளில் பார்க்கும் வழக்கமும் அருகி வருகிறது. அவசர, அவசரமான வாழ்வில் தங்களுக்கு தேவையான செய்திகளை மக்கள் விரைவாக, பார்த்த நொடிகளிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதற்காக ஏபிபி நாடு முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து தலைப்புச் செய்திகளாக ஒரு சில வரிகளில் தருகிறது. இன்றைக்கு இதை மட்டும் நீங்கள் படித்தால் மட்டும் நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் உங்கள் கவனத்தில் இருந்து விலகாது.

Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்

ஈரான் அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை எட்ட விரும்புகிறது, ஆனால் அமெரிக்கா அவசியமென கருதும் வகையான உடன்பாட்டிற்கு அது தயாராக இல்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் மீண்டும் நேற்று கூறினார். ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறது, ஆனால் அவர் அவசியமெனக் கருதும் வகையான ஒப்பந்தத்திற்கு அது தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கான 60 நாள் காலக்கெடு நேற்று முடிவடைந்தது. இதற்கிடையே, அணுசக்தித் திட்டம் மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்பான அமெரிக்கா மற்றும் ஈரானின் நிலைப்பாடுகளில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

கோ-ஆப்டெக்ஸ் மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும்; அன்புமணி

சென்னை: தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 10 விற்பனையகங்களை மூடுவதற்கு அரசு ஆணையிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பேரதிர்ச்சி அளிப்பதாக பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். நெசவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசு ஏமாற்றக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை

தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 18-08-2026 மற்றும் 19-08-2026: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

அன்புமணியின் அதிரடி முடிவு... மத்திய அமைச்சர் பதவி வேண்டாம் ; தமிழ்நாடு தான் இலக்கு

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், மத்திய அமைச்சர் பதவியை விட தமிழ்நாட்டின் அரசியலில் மாற்றத்தைக் கொண்டுவருவதே தங்கள் முதன்மை இலக்கு என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி

நிதி நெருக்கடியில் முதலமைச்சரின் அறை மாற்றப்படுவது அவசியம்தானா? என்ற கேள்வி எழுப்பியுள்ள டிடிவி தினகரன், அப்பணிகளுக்கான அறிவிக்கப்பட்ட டெண்டரில் வெளிப்படைத்தன்மையின்றி பல்வேறு விதிமீறல்கள் மீறப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!

புதுச்சேரி : ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மாதாந்திர மானிய உதவி நிறுத்தப்படும் என்று புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ரேஷன் அட்டைகளுடன் ஆதார் மற்றும் கைப்பேசி எண்களை உடனடியாக இணைக்க வேண்டும் என்றும், தவறினால் மாதாந்திர உணவு தானிய மானிய உதவித் தொகை நிறுத்தி வைக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை எச்சரித்துள்ளது.

Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது இந்தாண்டு தொடக்கத்தில் புதிய உச்சத்தை தொட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் சற்று குறைந்தது. தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்றும் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. Read More

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Tamil Nadu Top News : 'இன்றைய முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
PulseNews சுருக்கம்

தற்போதைய வேகமான உலகில் மக்கள் செய்தித்தாள்களை படிப்பதும், தொலைக்காட்சியில் செய்திகளை பார்ப்பதும் குறைந்து வருகிறது. தாங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்களை மிக விரைவாகப் புரிந்துகொள்ளவே அனைவரும் விரும்புகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, ஏபிபி நாடு இணையதளம் அன்றாட நிகழ்வுகளின் மிக முக்கியமான செய்திகளை மட்டும் தொகுத்து வழங்குகிறது. இந்தச் சுருக்கமான செய்திகளைப் படிப்பதன் மூலம் அன்றைய முக்கிய நிகழ்வுகளை உங்களால் எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology