Toyota 7 Seater: நாட்டின் பெஸ்ட் 7 சீட்டர் - டொயோட்டா தரும் 5 பயங்கரமான அப்டேட்கள் - மைலேஜ் ஏறுமா? விலை?

Toyota Innova Hycross: டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் மாடலின், அப்க்ரேடட் எடிஷனில் வழங்கப்பட உள்ள மேம்பாடுகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ்..!

டொயோட்டா நிறுவனம் தனது விசாலமான 7 சீட்டர் எம்பிவி ஆன இன்னோவா ஹைக்ராஸ் மாடலை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, காரின் புதிய எடிஷன் அவ்வப்போது சாலை பரிசோதனைகளின் போதும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, காரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல புதிய மாற்றங்களும் தெரிய வந்துள்ளன. அந்த வகையில் இன்னோவா ஹைக்ராஸின் புதிய எடிஷனில் எதிர்பார்க்கப்படும் அப்டேட்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அப்க்ரேடட் இன்னோவா ஹைக்ராஸ் - புதிய டிசைன்

சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, புதிய இன்னோவா தோற்றத்தில் சில மாற்றங்களைப் பெறுகிறது என்பது தெரியவந்துள்ளது. அதன்படி புதிய ஹிலக்ஸைப் போன்ற ஹனிகாம்ப் வடிவ க்ரில், மறுவடிவமைக்கப்பட்ட முகப்பு மற்றும் பின்புற விளக்குகள், இரு முனைகளிலும் திருத்தப்பட்ட பம்பர்கள் மற்றும் புதிய அலாய் வீல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. சாலை சோதனையில் சிக்கிய வாகனத்தின் வெளிப்புறம் முழுமையாக மறைக்கப்பட்டு இருந்ததால், துல்லியமான வடிவமைப்பு விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அப்க்ரேடட் இன்னோவா ஹைக்ராஸ் - புதிய வசதிகள்?

வெளிப்புறம் மட்டுமின்றி காரின் உட்புறமும் மேம்படுத்தலுக்கு உட்படுத்தப்பட உள்ளது. அதன்படி, புதிய 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், புதிய ஸ்டீயரிங் வீல் வடிவமைப்பு மற்றும் கூடுதல் ADAS அம்சங்கள் போன்றவை வழங்கப்படலாம். 360-டிகிரி கேமரா, காற்றோட்டம் மற்றும் மெமரி செயல்பாடுகளுடன் கூடிய பவர் முன் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் JBL சவுண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் தற்போதைய மாடலில் இருந்து தொடரும். இதோடு டொயோட்டா டேஷ்போர்ட் வடிவமைப்பை மாற்றியமைத்து, ஒரு புதிய உட்புற வடிவமைப்பையும் பெறக்கூடும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் எந்தவித சமரமும் இன்றி, அதே 5 ஸ்டார் ரேட்டிங்கிற்கான தரம் பின்பற்றப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்: Kia Seltos: இந்தியா Vs சீனா எடிஷன் - எந்த கியா செல்டோஸ் பெஸ்ட்? எஸ்யுவியில் உள்ள வித்தியாசங்கள் என்ன?

அப்க்ரேடட் இன்னோவா ஹைக்ராஸ் - பவர்ட்ரெயின்

இன்னோவா ஹைக்ராஸ் தற்போதைய எடிஷனை போலவே அதே 2.0-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.0-லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரான்ஸ்மிஷன் பணிகளை நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜினுக்கு CVT கியர்பாக்ஸ் ஆப்ஷனும், ஹைப்ரிட் இன்ஜினுக்கு eCVT கியர்பாக்ஸும் கையாளும். எனவே மைலேஜில் எந்தவித மாற்றமும் இன்றி, அதிகபட்சமாக 23.24 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

அப்க்ரேடட் இன்னோவா ஹைக்ராஸ் - வெளியீடு, விலை

மேம்படுத்தப்பட்ட இன்னோவா ஹைக்ராஸின் வெளியீட்டுத் தேதியை டொயோட்டா இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், சோதனை வாகனங்கள் தொடர்ந்து சாலையில் திரிவதால், மேம்படுத்தப்பட்ட இன்னோவா ஹைக்ராஸ் 2026-ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்டேட்டால், டொயோட்டா இன்னோவாவின் விலையில் உயர்வு ஏற்படக்கூடும். தற்போது, இந்த 7-சீட்டர் டொயோட்டாவின் விலை ரூ. 19.53 லட்சம் முதல் ரூ. 32.95 லட்சம் வரை (எக்ஸ் - ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டிற்குப் பிறகு, வேரியண்ட்டைப் பொறுத்து இதன் விலை ரூ. 75,000 முதல் ரூ. 1 லட்சம் வரை அதிகரிக்கக்கூடும்.

டொயோட்டா நிறுவனம் தனது இன்னோவா ஹைக்ராஸ் 7 சீட்டர் எம்பிவி காரின் புதிய மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடல் அவ்வப்போது சாலைகளில் சோதனை செய்யப்பட்டு வருவதன் மூலம், இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த அப்கிரேடட் எடிஷனில் ஐந்து முக்கிய மாற்றங்கள் இடம்பெற உள்ளன. இந்த மேம்பாடுகளால் காரின் மைலேஜ் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பது குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.