PulseNews
தொழில்நுட்பம்

Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?

Maruti Suzuki Budget SUV: மஹிந்த்ராவின் மைக்ரோ எஸ்யுவியை சந்தைப்படுத்தும் பணியில் மஹிந்த்ரா சுசூகி தீவிரமாக பணியாற்ற வருகிறது.

மாருதி சுசூகியின் மைக்ரோ எஸ்யுவி:

மாருதி சூசுகி நிறுவனம் Y43 என்ற கோட்நேமை கொண்ட மைக்ரோ எஸ்யுவியை விரைவில் சந்தைப்படுத்த தீவிரமாக பணியாற்றி வருகிறது. உள்ளூரில் டாடா பஞ்ச் மாடலுடன் இது போட்டியிட உள்ளது. ப்ராண்ட் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாவிட்டாலும், 2027ம் ஆண்டின் நடுப்பகுதியில் அல்லது அந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் விரைவில் வரவிருக்கும் மாருதி எஸ்யுவி தொடர்பாக இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மாருதி மைக்ரோ எஸ்யுவி வெளியீடு எப்போது?

மாருதி மைக்ரோ-எஸ்யுவி இன்னும் சாலை பரிசோதனைக்கு ஏதும் உட்படுத்தப்படவில்லை. அதாவது, அதைப் பற்றி எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த மாருதி எஸ்யுவி அதன் போட்டியாளரான டாடா பஞ்ச் போல 'டால்-பாய்' வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகன்ஆரில் பயன்படுத்தப்பட்ட 'டால்-பாய்' வடிவமைப்பு ஏற்கனவே மாருதிக்கு வெற்றியைத் தந்துள்ளது. அதே ஃபார்முலாவை இந்த புதிய மைக்ரோ எஸ்யுவியில் பயன்படுத்துவது ஒரு தெளிவான திருப்புமுனையாக அமையக்கூடும்.

மைக்ரோ எஸ்யுவி - அம்சங்கள், வசதிகள்

காரின் உட்புற வசதியை பற்றி பேசுகையில், இந்த மாருதி எஸ்யுவி பல நல்ல அம்சங்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில், “ப்ரேஸ்ஸாவில் உள்ள 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்க்ரீன், அனலாக் ட்ரைவர் டிஸ்ப்ளே, சிங்கிள்-பேனல் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் பேட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, 360-டிகிரி கேமரா, 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்ட்) மற்றும் பல அம்சங்கள் இடம்பெறக்கூடும். இந்த மாடல் சோதனை ஓட்டத்தின் போது காணப்பட்டவுடன், உட்புறங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வெலியாகலாம்.

மைக்ரோ எஸ்யுவி - பவர்ட்ரெயின்

மைக்ரோ எஸ்யுவியின் இன்ஜின், ஃப்ராங்க்ஸில் உள்ள 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் டிசையர், ஸ்விஃப்ட் கார்களில் உள்ள 1.2-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கிறோம். இது ஒரு மாருதி தயாரிப்பு என்பதால், 1.2-லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜினுடன் சிஎன்ஜி கிட்டும் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. இதனிடையே, 1.2-லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜினுடன் இணைக்கப்படும் சீரிஸ் ஹைப்ரிட் வாகனங்களை அறிமுகப்படுத்தும் பணியில் மாருதி மும்முரமாக உள்ளது. எனவே, வரவிருக்கும் இந்த மாருதி எஸ்யுவியும் அதன் மூலம் நல்ல பலனைப் பெறக்கூடும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு கியர்பாக்ஸ் வசதிகள் இடம்பெறக்கூடும்.

இதையும் படியுங்கள்: Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்

மைக்ரோ எஸ்யுவி - விலை, வெளியீடு

மாருதியின் புதிய வெளியீட்டு கால அட்டவணை ஏதும் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனாலும் 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அப்போது உள்ளூர் சந்தையில் டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் மற்றும் பிற மைக்ரோ எஸ்யுவிக்கலிடமிருந்து போட்டியை எதிர்கொள்ளக்கூடும். போட்டியில் ஒரு சாதகத்தைப் பெறுவதற்காக, இந்த மாருதி எஸ்யுவி அதன் போட்டியாளர்களின் விலையை விடக் குறைவாக நிர்ணயிக்கப்படலாம். அதன்படி, இதன் தொடக்க விலை வரம்பானது ரூ. 6 லட்சம் முதல் ரூ. 11 லட்சம் வரை நீளக்கூடும்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
PulseNews சுருக்கம்

மாருதி சுஸுகி நிறுவனம் 'Y43' என்ற குறியீட்டுப் பெயரில் புதிய மைக்ரோ எஸ்யுவி ரக காரைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சுமார் 6 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் வரவுள்ள இந்த வாகனம், சந்தையில் டாடா பஞ்ச் காருக்குப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய காரில் டர்போ மற்றும் சிஎன்ஜி (CNG) தேர்வுகள் இடம்பெற வாய்ப்புள்ளது. இதன் வெளியீடு குறித்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், 2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த கார் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology