PulseNews
தொழில்நுட்பம்

மயக்கும் மஹிந்திரா XUV700; EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!

இந்தியாவில் எஸ்.யு.வி கார்களுக்கான மோகம் அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக மஹிந்திரா XUV700 உள்ளது. இதன் சிறப்பான செயல்திறன், சொகுசான உட்புறம் மற்றும் 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் ஆகியவை இதற்கு முக்கியக் காரணம்.

5 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ₹13.99 லட்சத்தில் தொடங்கி டாப் மாடலுக்கு ₹23.99 லட்சம் வரை உள்ளது. RTO, இன்சூரன்ஸ் மற்றும் வரிகள் சேர்க்கப்படும்போது ஆன் ரோடு விலை மாறுபடுகிறது.

பேஸ் வேரியண்ட் EMI விவரங்கள்

இதன் பேஸ் பெட்ரோல் வேரியண்டான (MX 5-Str) எக்ஸ்-ஷோரூம் விலை ₹13.99 லட்சம். இதன் ஆன் ரோடு விலை சுமார் ₹16.36 லட்சம் ஆகும். இதற்கு 20% முன்பணமாக ₹3.27 லட்சம் செலுத்தினால், மீதமுள்ள 80% தொகையான ₹13.09 லட்சத்தை கடனாகப் பெறலாம்.

9% வட்டி விகிதத்தில், 5 ஆண்டு கடனுக்கு மாத EMI சுமார் ₹27,170 ஆகவும், 7 ஆண்டு கடனுக்கு சுமார் ₹21,050 ஆகவும் இருக்கும்.

டாப் வேரியண்ட் EMI விவரங்கள்

மேம்பட்ட ADAS, வென்டிலேட்டட் சீட்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் AWD வசதி கொண்ட டாப் மாடலான AX7 Luxury Pack ஆட்டோமேட்டிக் டீசல் வேரியண்டின் எக்ஸ் ஷோரூம் விலை ₹23.99 லட்சம். இதன் தோராயமான ஆன்ரோடு விலை ₹29.00 லட்சம் வரை இருக்கும்.

இதற்கு 20% முன்பணமாக ₹5.80 லட்சம் செலுத்தினால், மீதமுள்ள ₹23.20 லட்சத்தை கடனாகப் பெறலாம். 9% வட்டியில் 5 ஆண்டுகளுக்கு மாத EMI தோராயமாக ₹48,150 ஆகவும், 7 ஆண்டுகளுக்கு ₹37,300 ஆகவும் இருக்கும்.

எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள்

EMI-ஐத் தாண்டி எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகளையும் கவனிக்க வேண்டும். இதில் உள்ள சக்திவாய்ந்த 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்கள் நகரங்களில் 9 முதல் 12 கி.மீ. மைலேஜ் தரும். தினமும் 30- 40 கி.மீ பயணம் செய்தால், மாதத்திற்கு எரிபொருளுக்கு மட்டும் ₹7,000 முதல் ₹10,000 வரை செலவாகும். ஆண்டு இன்சூரன்ஸ் மற்றும் வழக்கமான சர்வீஸ் செலவுகள் தனி.

கவனிக்க வேண்டிய முக்கியக் குறிப்புகள்

பேஸ் மாடல் வாங்க குறைந்தது ₹3.5 முதல் ₹4 லட்சம் வரையும், டாப் மாடலுக்கு ₹6 முதல் ₹7 லட்சம் வரையும் ரொக்க இருப்பு தேவைப்படும்.

வங்கிகளில் 8.5% - 9% என்ற குறைந்த வட்டியில் கார் கடன் பெற, உங்களது கிரெடிட் ஸ்கோரை 750-க்கு மேல் பராமரிக்கவும்.

நிதி நெருக்கடியைத் தவிர்க்க, கார் EMI உங்கள் மாதச் சம்பளத்தில் 20% முதல் 25%-க்கு மிகாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளவும்.

ஆல் தி பெஸ்ட்!

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
மயக்கும் மஹிந்திரா XUV700; EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
PulseNews சுருக்கம்

இந்தியாவில் எஸ்.யு.வி ரக கார்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ள சூழலில், மஹிந்திரா XUV700 கார் வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வாக உள்ளது. சிறப்பான செயல்திறன், சொகுசான உட்புற அமைப்பு மற்றும் 5-ஸ்டார் பாதுகாப்பு தரம் ஆகியவை இந்த காரின் முக்கிய சிறப்பம்சங்களாக விளங்குகின்றன.

இந்த கார் 5 மற்றும் 7 இருக்கை வசதிகளுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ₹13.99 லட்சம் முதல் தொடங்கி, அதன் உயர் ரக மாடலுக்கு ₹23.99 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology