PulseNews
தொழில்நுட்பம்

வயதாவதை தடுத்து நிறுத்த முடியுமா? மருத்துவ உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ஜெர்மனி ஆய்வு

நமது உடலின் ஆற்றல் மையங்கள் என அழைக்கப்படும் மைட்டோகாண்ட்ரியாக்கள் வயதாக வயதாக தங்களின் திறனை இழக்கின்றன என்பது பல தசாப்தங்களாக அறிவியலாளர்களுக்கு தெரியும். ஆனால், அது ஏன் நடக்கிறது? என்பதற்கான துல்லியமான விடை இதுவரை மர்மமாகவே இருந்தது. தற்போது, ஜெர்மனியில் உள்ள லைப்னிஸ் முதியோர் நல நிறுவனத்தின் டாக்டர் மரியா எர்மோலேவா தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில், இதற்குப் பின்னால் இருக்கும் ஒரு முக்கிய காரணி கண்டறியப்பட்டுள்ளது. நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, செல் வயதாவதைக் கட்டுப்படுத்த முடியும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நமது செல்லுக்குள் இருக்கும் மைட்டோகாண்ட்ரியாக்கள் வெறும் ஆற்றலை மட்டும் உற்பத்தி செய்வதில்லை. அவை ஒன்றோடொன்று இணைந்து பிரமாண்டமான 'பவர் கிரிட்' போன்ற வலையமைப்பை உருவாக்குகின்றன. இந்த நெகிழ்வுத்தன்மைக்கு 'மைட்டோகாண்ட்ரியல் ஃபியூஷன்' என்று பெயர். இந்த வலையமைப்பு சீராக இயங்க பாஸ்பேடிடைல்கோலின் எனும் சவ்வு கொழுப்பு மிக அவசியம். வயதாகும்போது இந்த பாஸ்பேடிடைல்கோலின் அளவு இயற்கையாகவே குறைகிறது. இதனால் செல்கள் தங்கள் இணைப்பை இழந்து சிறு துண்டுகளாக மாறுகின்றன. இது நாட்டின் மின்கட்டமைப்பு செயலிழப்பதற்கு சமம். மின் உற்பத்தி நடந்தாலும், அதைத் தேவையான இடங்களுக்கு நெகிழ்வாக பகிர்ந்தளிக்க முடியாது. இந்நிலைதான் நீரிழிவு போன்ற முதியோர் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் இளம் புழுக்களில் பாஸ்பேடிடைல்கோலின் உற்பத்தியை முடக்கியபோது, அவற்றின் செல்கள் உடனடியாக வயதான புழுக்களின் செல்களைப் போல மாறின. உணவின் மூலம் இந்த கொழுப்பை மீண்டும் வழங்கியபோது, வெறும் 2 நாட்களில் அந்த செல்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுப் பழைய நிலைக்குத் திரும்பின. இந்த வேகமான மாற்றம் ஆராய்ச்சியாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆராய்ச்சியாளர்கள் தங்களது சோதனையை மனித தரவுகளுடனும் ஒப்பீடு செய்தனர். ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது ரத்தத்தில் பாஸ்பேடிடைல்கோலின் அளவு படிப்படியாக குறைகிறது. பெண்களுக்கு 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும் காலத்தில் இந்த லெவல் மிகக் கடுமையாகச் சரிவது கண்டறியப்பட்டது. பெண்களுக்கு அந்தச் சமயத்தில் ஏற்படும் அதிக சோர்வுக்கும் மைட்டோகாண்ட்ரியா திறன் குறைவதற்கும் இதுவே முக்கியக் காரணம். மனித ரத்தத்தில் பாஸ்பேடிடைல்கோலின் அதிகமாக இருப்பவர்களுக்கு மைட்டோகாண்ட்ரியல் ஸ்ட்ரெஸ் குறைவாக இருப்பதோடு, அவர்களது நடக்கும் வேகம் மற்றும் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நடுவயதிலோ, முதிய வயதிலோ உணவில் கோலின் - பாஸ்பேடிடைல்கோலின் உருவாக உதவும் ஊட்டச்சத்து சேர்க்கப்படும்போது, அது செல்களை மீண்டும் புத்துணர்ச்சியடைய வைக்கிறது. வயது முதிர்ந்த புழுக்களுக்கு கோலின் ஊட்டச்சத்து வழங்கப்பட்டபோது, அவற்றின் மைட்டோகாண்ட்ரியா வடிவமும் சுவாசமும் மேம்பட்டன. மனித செல்களில் உள்ள டைப்-2 நீரிழிவு நோய்க்காக பயன்படுத்தப்படும் 'மெட்ஃபார்மின்' மருந்தால் ஏற்படும் மைட்டோகாண்ட்ரியல் அழுத்தத்திலிருந்து மனித செல்களைக் 'கோலின்' பாதுகாத்தது. நமது குடல் நுண்ணுயிரிகள் மனித உடலில் இந்தச் சத்துக்களை எவ்வாறு கிரகிக்கின்றன என்பது குறித்து மேலும் பல ஆய்வுகள் தேவைப்பட்டாலும், வயதாவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்ற கருத்தை இந்த ஆய்வு மாற்றியமைத்துள்ளது. சரியான ஊட்டச்சத்து, இலக்கு வைக்கப்பட்ட சிகிச்சைகள் மூலம் நமது செல்லின் ஆற்றல் இயந்திரங்களை வயதான காலத்திலும் இளமையோடு இயங்க வைக்க முடியும் என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology