ரஷ்யாவுக்கே இந்த நிலைமையா..? எரிபொருள் தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் கடும் அவதி; பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு தடை..!
இந்தியாவுக்கு பெட்ரோல், டீசல் வழங்கும் ரஷ்யாவில் தற்போது எரிபொருள் தேவை அதிகரித்துள்ளதால், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசை காணப்படுகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாகவும், பருவநிலை காரணமாக, தேவை அதிகரித்துள்ளதாலும் ரஷ்யா முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருளை நிரப்புவதற்காக வாகன ஓட்டிகள் 45 நிமிடங்கள் வரை காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்க, அந்நாட்டு அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. அத்துடன், எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான ரஷ்யா, தற்போது இறக்குமதியையும் தொடங்கியுள்ளது.

இந்தியாவுக்கு எரிபொருள் வழங்கும் நாடான ரஷ்யாவிலேயே தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உக்ரைன் போர் சூழல் மற்றும் பருவநிலை மாற்றங்கள் காரணமாகத் தேவை அதிகரித்துள்ளதால், மாஸ்கோ உள்ளிட்ட ரஷ்யாவின் பல நகரங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களில் வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
எரிபொருளை நிரப்ப வாகன ஓட்டிகள் சுமார் 45 நிமிடங்கள் வரை காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், ரஷ்ய அரசு எரிபொருள் ஏற்றுமதிக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.