PulseNews
தொழில்நுட்பம்

பிளிப்கார்ட் ப்ரீடம் சேல்: 5,000 எம்.ஏ.எச் பேட்டரி, 50 எம்.பி கேமரா, 6 ஆண்டு ஓ.எஸ் அப்டேட் வசதியுடன் சாம்சங் 5ஜி போன்!

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது 'பிளிப்கார்ட் ப்ரீடம் சேல் 2026' சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி நிறுவனங்களின் 5ஜி போன்கள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று அட்டகாசமான தள்ளுபடி பெற்றுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி போன், இந்தச் சிறப்பு விற்பனையில் ரூ.17,999 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது. மேலும், வங்கி கார்டு பயன்படுத்தி வாங்குபவர்களுக்குக் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுவதால் குறைந்த பட்ஜெட்டில் இந்த போனைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும். சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி சிறப்பம்சங்கள் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) சூப்பர் அமோலெட் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 2340 x 1080 பிக்சல்கள் தெளிவுத்திறன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. எக்ஸிநோஸ் 1330 பிராசஸர் மூலம் இயங்குகிறது. இது மேம்பட்ட செயல்திறனை வழங்கி, அனைத்து செயலிகளையும் தடையின்றிப் பயன்படுத்த உதவுகிறது. One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்துடன் வெளிவந்துள்ளது. இந்த போனுக்கு 6 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களும், 6 ஆண்டுகள் பாதுகாப்பு அப்டேட்களும் கிடைக்கும். பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் எல்இடி பிளாஷ் வசதி உள்ளது. முன்புறம் செல்பிகளுக்கும் வீடியோ கால்களுக்கும் என 13எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 5000mAh பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இது நாள் முழுவதும் நீடிக்கும் பேட்டரி பேக்கப்பை வழங்கும். 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 2டிபி வரை சேமிப்புத் திறனை விரிவுபடுத்திக் கொள்ளலாம். IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பு, பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் மற்றும் யு.எஸ்.பி டைப்-சி ஆடியோ ஆதரவு ஆகியவை உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.3, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி மற்றும் என்எப்சி (NFC) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பிளிப்கார்ட் ப்ரீடம் சேல்: 5,000 எம்.ஏ.எச் பேட்டரி, 50 எம்.பி கேமரா, 6 ஆண்டு ஓ.எஸ் அப்டேட் வசதியுடன் சாம்சங் 5ஜி போன்!
PulseNews சுருக்கம்

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது நடைபெற்று வரும் 'பிளிப்கார்ட் ப்ரீடம் சேல் 2026' சிறப்பு விற்பனையில், சாம்சங் கேலக்ஸி எப்17 5ஜி ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இந்த 5ஜி போன், ரூ.17,999 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 5,000 எம்.ஏ.எச் பேட்டரி, 50 எம்.பி கேமரா மற்றும் 6 ஆண்டு ஓ.எஸ் அப்டேட் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology