PulseNews
தொழில்நுட்பம்

வாயுக்கள் இல்லாத அடர்ந்த பாறை கிரகம்: பிரபஞ்சத்தின் புதிய அதிசயத்தை வெளிப்படுத்திய விண்வெளி ஆய்வாளர்கள்

விண்வெளி ஆய்வில் ஒரு புதிய திருப்புமுனையாக, சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமியை விட பல மடங்கு அடர்த்தி கொண்ட ‘GJ523b’ என்ற புதிய கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. ‘மெகா எர்த்’ (Mega Earth) என்று அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட பாறை கிரகம் தொடர்பான விரிவான தகவல்களை விஸ்கான்ஸின் மேடிஸன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அஸ்ட்ரானமிகல் ஜர்னல் இதழுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வுக்கு மாக்ஸ் க்ராஃப்ட் தலைமை தாங்கியுள்ளார். அரிஜோனாவில் அமைந்துள்ள கிட் பீக் நேஷனல் ஆப்ஸர்வேடரியின் 3.5 மீட்டர் தொலைநோக்கி மூலம் இந்த கிரகம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அளவீடுகளின்படி, இந்த கிரகம் பூமியை விட இரண்டரை மடங்கு அதிக அகலமும், 23.5 மடங்கு அதிக பொருள்திணிவும் (Mass) கொண்டது. இதன் அடர்த்தி ஒரு கன அங்குலத்திற்கு 126.82 கிராம் என்ற வியக்கத்தக்க அளவில் உள்ளது. பூமி மற்றும் புதன் போன்ற பாறை கிரகங்கள் வழக்கமாக சிறிய அளவில் இருக்கும் நிலையில், இவ்வளவு பெரிய பரப்பளவும் அதிக அடர்த்தியும் கொண்ட ஒரு பாறை கிரகம் கண்டறியப்பட்டுள்ளது விஞ்ஞான உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த கிரகம், தனது தாய் நட்சத்திரத்தை ஒருமுறை சுற்றி வர 17.75 நாட்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. பொதுவாக, இவ்வளவு பெரிய அளவு கொண்ட கிரகங்கள் அதிக அளவிலான வாயுக்களால் சூழப்பட்டு ‘வாயு பெருங்கோள்களாக’ இருக்கும். ஆனால், GJ523b கிரகத்தில் வாயுவளம் குறைவாக இருப்பது ஆய்வாளர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. இரு கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதால் இதன் வளிமண்டலம் சிதைந்திருக்கலாம் அல்லது இயல்பாகவே இதிலிருந்த கனமான வளிமண்டலம் காலப்போக்கில் மாறியிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. இது போன்ற கிரகங்களின் துல்லியமான தன்மையைப் புரிந்துகொள்ள இன்னும் பல கிரகங்களை விரிவாக ஆராய வேண்டும் என்று மாக்ஸ் க்ராஃப்ட் தெரிவித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்பு, நாம் வாழும் பூமியின் தனித்துவத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. சூரிய மண்டலத்தின் ஐந்தாவது பெரிய கிரகமான பூமி, சூரியனிலிருந்து சுமார் 14.96 கோடி கிலோமீட்டர் தொலைவில் சரியாக அமைந்துள்ளதால், உயிரினங்கள் வாழ ஏற்ற சூழலைப் பெற்றுள்ளது. 6,378 கிலோமீட்டர் ஆரமும், 51 கோடி சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்ட பூமி, 5.972 × 1024 கிலோ பொருள்திணிவைக் கொண்டுள்ளது. இதன் சராசரி அடர்த்தி ஒரு கன அங்குலத்திற்கு 5.51 கிராம் மட்டுமே. 23.44 டிகிரி சாய்வில் அமைந்துள்ள பூமி, தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 23 மணி 56 நிமிடங்கள் 4 விநாடிகளையும், சூரியனைச் சுற்றிவர 365.256 நாட்களையும் எடுத்துக்கொள்கிறது. பூமியின் வளிமண்டலத்தில் உள்ள 78% நைட்ரஜன் மற்றும் 21% ஆக்சிஜன் கலவையும், திரவ நிலையில் உள்ள நீரும் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கின்றன. பிரபஞ்சத்தில் GJ523b போன்ற விசித்திரமான மெகா எர்த் கிரகங்கள் பல இருந்தாலும், நீர் வளம் மற்றும் தகுந்த தட்பவெப்பத்துடன் உயிரினங்கள் வாழ ஏற்ற ஒரே கிரகமாக பூமி திகழ்வது இதன் ஈடு இணையற்ற சிறப்பம்சமாகும்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
வாயுக்கள் இல்லாத அடர்ந்த பாறை கிரகம்: பிரபஞ்சத்தின் புதிய அதிசயத்தை வெளிப்படுத்திய விண்வெளி ஆய்வாளர்கள்
PulseNews சுருக்கம்

சூரிய குடும்பத்திற்கு வெளியே பூமியை விட பல மடங்கு அடர்த்தி கொண்ட ‘GJ523b’ என்ற புதிய பாறை கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ‘மெகா எர்த்’ என்று அழைக்கப்படும் இந்த வாயுக்கள் இல்லாத பிரம்மாண்ட கிரகம் குறித்த தகவல்களை விஸ்கான்ஸின் மேடிஸன் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வுக்கு மாக்ஸ் க்ராஃப்ட் தலைமை தாங்கியுள்ளார், மேலும் இதன் முடிவுகள் அஸ்ட்ரானமிகல் ஜர்னல் இதழுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரிஜோனாவில் உள்ள கிட் பீக் நேஷனல் அப்சர்வேட்டரியின் 3.5 மீட்டர் தொலைநோக்கி மூலம் இந்த புதிய விண்வெளி அதிசயம் கண்டறியப்பட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology