PulseNews
தொழில்நுட்பம்

7 Seater Turbo CNG: பட்டாசான தீபாவளி தான்..! 7 சீட்டரில் டர்போ சிஎன்ஜி - மைலேஜும், ஸ்பீடும் அள்ளப்போகுது - முழு விவரம்

Renault Triber Turbo CNG: ரெனால்ட்7 சீட்டரான ட்ரைபரின், டர்போ சிஎன்ஜி எடிஷன் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சிஎன்ஜி-யை விரும்பும் கார் பிரியர்கள்..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பு நிதியாண்டில் பயணிகள் வாகன பிரிவில், பெட்ரோலுக்கு அடுத்தபடியாக சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன் 22 சதவிகிதம் பேரால் விரும்பி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் சுமார் 10 லட்சத்து 34 ஆயிரம் சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போதைய சூழலில் இந்த எரிபொருள் ஆப்ஷன் பிரிவில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்களிப்புடன் மாருதி சுசூகி நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து டாடா நிறுவனம் 17.07 சதவிகிதமும், ஹுண்டாய் நிறுவனம் 8.91 சதவிகிதமும் இன்ன பிற நிறுவனங்கள் சுமார் 4.6 சதவிகித பங்களிப்பையும் கொண்டுள்ளன. இந்நிலையில் வளர்ந்து வரும் CNG பிரிவில் தனது இருப்பை வலுப்படுத்தும் நோக்கில், ரெனால்ட் இந்தியா நிறுவனம் ரெனால்ட் ட்ரைபர் டர்போ CNG என்ற புதிய டர்போசார்ஜ் செய்யப்பட்ட CNG மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ரெனால்ட் ட்ரைபர் டர்போ CNG

ரெனால்ட் ட்ரைபரின் MPV வரிசையானது தற்போது 71bhp ஆற்றலையும் 96Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர், மூன்று-சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே கிடைக்கிறது. அதன் பவர்ட்ரெயின் ஆப்ஷனை விரிவுபடுத்தும் விதமாக 1.0-லிட்டர், மூன்று-சிலிண்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜினை அறிமுகப்படுத்த ஃப்ரான்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. இது அதிகபட்சமாக 100PS பவரையும் 160Nm டார்க்கையும் வழங்கும். இதே இன்ஜின் ஏற்கனவே ரெனால்ட் கைகர் காரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளில் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆகியவை இடம்பெற வாய்ப்புள்ளது.

ரெனால்ட் ட்ரைபர் சிஎன்ஜி டிசைன் விவரங்கள்

சுவாரஸ்யமாக, புதிய ட்ரைபர் டர்போ மாடல் CNG ஆப்ஷனுடனும் வழங்கப்படும். அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், இந்த டர்போ-CNG மாடலில், டீலரால் பொருத்தப்படும் ரெட்ரோஃபிட் கிட்டுக்கு பதிலாக, தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட CNG சிஸ்டம் இடம்பெறும்.

ட்ரைபர் CNG எம்பிவியின் தரைக்குக் கீழே இரட்டை சிலிண்டர் அமைப்பு இடம்பெறும் என்பதை ரெனால்ட் உறுதி செய்துள்ளது. இந்தத் தரைக்குக் கீழான பொருத்தம், 7 சீட்டரின் பூட் ஸ்பேஸ் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும், ரெனால்ட் நிறுவனம் ட்ரைபரின் CMF-A ப்ளாட்ஃபார்மை மறுவடிவமைப்பு செய்துள்ளது. அந்த வகையில் தற்போது இது ரெனால்ட் க்ரூப் எண்ட்ரி ப்ளாட்ஃபார்ம் (RGEP) என்று குறிப்பிடப்படுகிறது. 1.0-லிட்டர் டர்போ CNG பவர்டிரெய்னின் பவர் மற்றும் டார்க் வெளியீடுகள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ட்ரைபர் டர்போ சிஎன்ஜி - வெளியீடு, விலை

ட்ரைபரின் டர்போ மற்றும் சிஎன்ஜி எடிஷன்கள் விழாக்காலத்தை முன்னிட்டு 2026 செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் ஷோரூம்களுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையைப் பொறுத்தவரை, ரெனால்ட் ட்ரைபர் சிஎன்ஜி எடிஷனானது, டீலர்களால் பொருத்தப்படும் சிஎன்ஜி கிட்களை விட அதிக விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டீலர்களால் பொருத்தப்படும் சிஎன்ஜி கிட்களின் விலை, மாடல் மற்றும் வேரியண்டைப் பொறுத்து ரூ. 69,000 முதல் ரூ. 1.08 லட்சம் வரை உள்ளது.

இதையும் படியுங்கள்: Diesel Automatic Cars: மைலேஜோடு ஓட்டவும் ஈசியா இருக்கனுமா? ரூ.15 லட்சத்தில் டீசல் ஆட்டோமேடிக் கார்கள் - 4 சாய்ஸ்

ட்ரைபரில் வரப்போகும் வித்தியாசம் என்ன?

வழக்கமான ட்ரைபரானது 71 bhp சக்தியையும் 96 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் 1.0-லிட்டர், 3-சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்துகிறது. இது முழுமையான பயணிகள் சுமையுடன் செல்லும்போது பெரும்பாலும் சக்தி குறைவாக இருப்பது போன்ற உணர்வை தருகிறது. அதேநேரம் டர்போ சிஎன்ஜி எடிஷனின் சக்திவாய்ந்த 1.0-லிட்டர் டர்போசார்ஜ்டட் பெட்ரோல் இன்ஜினானது (HR10), தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியீட்டுத் திறனானது கணிசமாக அதிகரிக்கிறது. இதனை வழக்கமான ட்ரைபர் மாடலுடன் ஒப்பிடும்போது, ​​முழுமையான சுமையின் கீழும் இழுக்கும் சக்தி, ஓட்டும் திறன் மற்றும் நெடுஞ்சாலை செயல்திறன் ஆச்சரியமளிக்கும் வகையில் மேம்படும்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
7 Seater Turbo CNG: பட்டாசான தீபாவளி தான்..! 7 சீட்டரில் டர்போ சிஎன்ஜி - மைலேஜும், ஸ்பீடும் அள்ளப்போகுது - முழு விவரம்
PulseNews சுருக்கம்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பயணிகள் வாகனப் பிரிவில், பெட்ரோலுக்கு அடுத்தபடியாக சிஎன்ஜி எரிபொருள் தேர்வை 22 சதவீதத்தினர் விரும்பி தேர்வு செய்துள்ளனர். நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 10 லட்சத்து 34 ஆயிரம் சிஎன்ஜி வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், ரெனால்ட் நிறுவனத்தின் 7 சீட்டர் காரான 'ட்ரைபர்' மாடலில் புதிய டர்போ சிஎன்ஜி எடிஷன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சிஎன்ஜி பிரியர்களைக் கவரும் வகையில் இந்த கார் அதிக மைலேஜ் மற்றும் வேகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology