TATA Punch: கம்மி விலை, பெட்ரோல், சிஎன்ஜி, EV; டாப்பில் டாடா பஞ்ச் - 8 லட்சம் கார்கள் விற்பனை

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள டாடா பஞ்ச் (Tata Punch) கார், விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா பஞ்ச் கார், குறுகிய காலத்திலேயேமாபெரும் சாதனை படைத்துள்ளது. அதாவது 5 ஆண்டுக்குள் 8 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. குளோபல் என்கேப் விபத்து பரிசோதனையில் 5-ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்றிருப்பதும் விலையும் இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

காரின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்

சிறிய அளவிலான காராக இருந்தாலும், இது ஒரு உண்மையான எஸ்யூவி தோற்றத்தை பிரதிபலிக்கிறது. அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் (187 மிமீ), 16-இன்ச் அலாய் வீல்கள், 90 டிகிரியில் திறக்கும் கதவுகள் ஆகியவை இதன் தனித்துவமான வடிவமைப்பாகும். முன்புறத்தில் ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.

உட்புறத்தில் 7-இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன், க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற நவீன வசதிகள் உள்ளன. பயணிகளின் பாதுகாப்பிற்காக டியூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

இன்ஜின், ரேஞ்ச் விவரங்கள்

டாடா பஞ்ச் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் என மூன்று வகைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மாடலில் உள்ள 1.2 லிட்டர் இன்ஜின் 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். இதில் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன.

பெட்ரோல் மாடல் சுமார் 20 கி.மீ மைலேஜும், சிஎன்ஜி மாடல் கிலோவுக்கு 26.99 கி.மீ மைலேஜும் தருகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இதன் எலெக்ட்ரிக் மாடலான பஞ்ச் இவி, இரண்டு பேட்டரி தேர்வுகளில் கிடைக்கிறது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 315 கி.மீ முதல் அதிகபட்சமாக 421 கி.மீ வரையிலான ரேஞ்சை வழங்குகிறது.

விலை விவரம்

நடுத்தர மக்களும் வாங்கும் வகையில், இந்த காரின் ஆரம்ப விலை 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற வகையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

பாதுகாப்பு, சிறப்பான வடிவமைப்பு, கட்டுபடியாகும் விலை மற்றும் பலவிதமான தேர்வுகள் ஆகியவையே டாடா பஞ்ச் காரின் இந்த இமாலய விற்பனை சாதனைக்குக் காரணமாகும்.

Abp News-இல் முழு செய்தியைப் படிக்க →