Cheapset 6 Seater: நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்

Cheapest 6 Seater Maruti Suzuki Eeco: மாருதி சுசூகி ஈகோ கார் மாடலின் பல்வேறு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நாட்டின் மலிவான 6 சீட்டர் எஸ்யுவி:

கார்கள் தனி மனித பயன்பாடு என்பதை தாண்டி வணிக நோக்கிலான பயன்பாட்டிலும் பெரும் பங்கு வகிக்க தொடங்கியுள்ளன. வாடகைக்கு விடுவது, பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லபும், என பல வகையில் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் குடும்பமாக & நண்பர்கள் கூட்டத்துடன் பயணிக்கவும், வணிக நோக்கிலும், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி போன்ற வடிவிலும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக கிடைக்கும் நாட்டின் மலிவு விலை 6 சீட்டரான மாருதி சுசூகி நிறுவனத்தின் ஈகோ கார் மாடல் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம். இதனை எளிய திட்டம் மூலம் நிதி அழுத்தம் இன்றி சொந்தமாக்குவது எப்படி என்பதும் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி ஈகோ 6 சீட்டர் - விலை விவரம்:

மாருதியின் ஈகோ காரானது 5 மற்றும் 6 சீட்டர் கான்ஃபிகரேஷனில், 4 பிரதான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலையானது ரூ.5.23 லட்சத்தில் தொடங்கி ரூ.6.41 லட்சம் வரை நீள்கிறது. குறிப்பாக என்ட்ரி லெவல் 6 சீட்டர் வேரியண்டின் ஆன் - ரோட் விலையானது சென்னையில் சுமார் 6 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதில் எக்ஸ் - ஷோரூம் விலை சுமார் 5 லட்சத்து 49 ஆயிர ரூபாயும், பதிவுக்கட்டணம் சுமார் 71 ஆயிரம் ரூபாயும் மற்றும் காப்பீட்டுக் கட்டணம் சுமார் 32 ஆயிரம் ரூபாய் ஆகியவை அடங்கும்.

மாருதி சுசூகி ஈகோ 6 சீட்டர் - EMI விவரங்கள்

பொதுவாகவே வங்கிக் கடன் உதவியுடன் காரை வாங்க விரும்புபவர்கள், பெருந்தொகையை முன்பணமாக செலுத்துவிட்டு, கணிசமான தொகையை கடனமாக பெறுவதே லாபகரமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் நீண்ட கால கடன்சுமை மற்றும் வட்டி செலவை பெரிய அளவில் குறைக்க முடியும். அதோடு, நல்ல சிபில் ஸ்கோரை வைத்திருப்பதன் மூலம், வங்கிகள் 7.45 வட்டி சதவிகிதத்தில் இருந்து கூட வாகன கடன் வழங்க முன்வருகின்றன. அந்த வகையில் சுமார் ரூ.3.54 லட்சத்தை முன்பணமாக செலுத்தி ஈகோ காரின் 6 சீட்டர் எண்ட்ரி லெவல் வேரியண்டை தேர்வு செய்தால், மீதமுள்ள சுமார் ரூ.3 லட்சத்திற்கு மட்டுமே நீங்கள் கடனுதவியை அணுக வேண்டி இருக்கும்.

இதையும் படியுங்கள்: Tata 7 Seater: ஹிட்டடித்த எஸ்யுவியை 7 சீட்டராக அப்க்ரேட் செய்யும் டாடா..! விலை, அம்சங்கள், வசதிகள், ரேட்டிங்

அந்த வகையில் 8 சதவிகித வட்டியுடன் 5 ஆண்டுகளுக்கு கடனை திருப்பி செலுத்த முடிவு செய்தால், மாதம் நீங்கள் சுமார் 6 ஆயிரம் ரூபாயை தவணையாக செலுத்த வேண்டி இருக்கும். அசலுடன் கூடுதலாக வட்டியாக சுமார் 64 ஆயிரத்தை செலுத்தி இருப்பீர்கள். ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.7.20 லட்சத்தை செலுத்தி இந்த 6 சீட்டர் காரை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஒருவேளை முன்தொகையை அதிகமாக செலுத்தினால் உங்களது வட்டி சுமை மற்றும் மாதாந்திர தவணை வெகுவாக குறையக்கூடும். குறைந்தபட்சமாக ரூ.1.54 லட்சத்தை முன்பணமாக செலுத்தினால் ஆண்டுக்கு 10 சதவிகித வட்டியில் 5 ஆண்டுகளுக்கு மாதம் சுமார் 10 ஆயிரத்து 624 ரூபாயை தவணையாக செலுத்த வேண்டி இருக்கும்.

மாருதி சுசூகி ஈகோ 6 சீட்டர் - மைலேஜ்

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு எரிபொருள் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த காரில் 1.2 லிட்டர் கே -சீரிஸ் டூயல் ஜெட் இன்ஜின் என ஒற்றை ஆப்ஷனில் , 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் அம்சத்தில் மட்டுமே தேர்வு செய்ய முடியும். பெட்ரொல் எடிஷன் லிட்டருக்கு 19.71 கிலோ மீட்டர், சிஎன்ஜி எடிஷன் கிலோவிற்கு 26.78 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிஜ உலக பயன்பாட்டில் இவை முறையே 19 முதல் 20 கிலோ மீட்டரும் மற்றும் 21 முதல் 23 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குவதாக பயனர்கள் தெரிவிக்கின்றன. பெட்ரொல் டேங்கை முழுமையாக நிரப்பினால் சுமார் 230 கிலோ மீட்டரும், சிஎன்ஜி எடிஷன் சுமார் 850+ கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது. ஆனால், நிஜ உலக பயன்பாட்டில் அதிகபட்சமாக 750 கிலோ மீட்டர் தூரம் வரை இடைநிற்றலின்றி பயணிக்க முடியுமாம்.

மாருதி சுசூகி ஈகோ 6 சீட்டர் - அம்சங்கள், வசதிகள்

மாருதியின் ஈகோ ப்ரீமியம் அனுபவத்தை வழங்காவிட்டாலும், விலைக்கு நிகரான அம்சங்களை கொண்டுள்ளது. அதன்படி செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், காண்டெம்ப்ரரி ஸ்டியரிங் வீல் லே-அவுட், ஒளிரூட்டும் ஹசார்ட் ஸ்விட்ச் உள்ளன. பெரிய அளவில் அம்சங்கள் இல்லாததால் லக்கேஜ்களை வைப்பதற்கு அதிகப்படியான இடவசதி கிடைக்கிறது. கால்களை நீட்டி தாராளமாக அமரலாம். அதிக சக்தி வாய்ந்த கேபின் ஹீட்டர் மற்றும் மேனுவல் ஏசி வசதியும் உள்ளது. இரண்டு பக்கமும் ஸ்லைடிங் டோர்கள், 275 முதல் 540 லிட்டர் வரையிலான இடவசதி ஆகியவை உள்ளன.

இதுபோக பயணிகளின் பாதுகாப்பிற்காக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ப்ரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ர்ப்யூஷனுடன் கூடிய ஆண்டி லாக் ப்ரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம் மற்றும் ரியர் பார்கிங் சென்சார் ஆகியவையும் உள்ளன. கூடுதலாக இன்ஜின் இம்மொபிலைசர், ஸ்லைடிங் டோர்களுக்கு சைல்ட் லாக் மற்றும் ஸ்பீட் அலெர்ட் மெக்கானிசம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

Abp News-இல் முழு செய்தியைப் படிக்க →