PulseNews
தொழில்நுட்பம்

கொசுவை கொல்லும் நவீன எந்திரம்... வடிவேலு பாணியை பின்பற்றும் சீனா; என்னென்ன பண்ணுறாங்க பாருங்க

தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக நாடுகளை வியக்க வைக்கும் சீனா, தற்போது கொசுக்களை அழிப்பதற்கு வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை (Air Defence System) போன்ற நவீன கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது. சீனாவின் சாங்சோ நகரைச் சேர்ந்த ஆய்வகம் ஒன்று, 'ஃபோட்டான் மேட்ரிக்ஸ்' (Photon Matrix) என்ற அதிநவீன கொசு அழிப்பு எந்திரத்தைக் கண்டறிந்துள்ளது. இது நிஜமாவே நடக்குதா? கைநிறையப் பணம் கொடுத்து இந்தியர்களை கூப்பிடும் ஐரோப்பிய நாடுகள்; எதற்கு தெரியுமா? வான் பாதுகாப்பு அமைப்பு போல எப்படிச் செயல்படுகிறது? எதிரி நாடுகளின் டிரோன்கள் அல்லது போர் விமானங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறும்போது வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை ராடார் மூலம் கண்டறிந்து சுட்டு வீழ்த்துவது போல் இந்தக் கருவி இயங்குகிறது. லேசர் மூலம் தாக்குதல்: இந்தச் சிறிய எந்திரத்தை அறைக்குள் வைத்து ஆன் செய்துவிட்டால், அது ஒளிக்கற்றைகளை வீசி அறையின் அளவைக் துல்லியமாகக் கணிக்கும். அடுத்த நொடியில் காலி: அறையின் எல்லைக்குள் கொசுக்களோ அல்லது சிறிய பூச்சிகளோ நுழைந்தால், அடுத்த நொடியே லேசர் கதிர்களைப் பாய்ச்சி அவற்றை அழித்துவிடும். அதிவேகத் திறன்: ஒரு நொடிக்குச் சுமார் 30 கொசுக்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது. கண்காணிப்பு எல்லை: 6 மீட்டர் தொலைவு வரை, 90 டிகிரி கோணத்தில் ஸ்கேன் செய்து கொசுக்கள் உள்ளே வராதவாறு தடுக்கும். உட்புறம் மற்றும் வெளிப்புற பயன்பாடு படுக்கை அறை: கண்களுக்குத் தெரியாத லேசர் கதிர்கள் மூலம் கொசுக்களைத் துல்லியமாக அழிக்கும். வெளிப்புறம்: திறந்தவெளிகளில் பயன்படுத்த 'புளூ லேசர்' (Blue Laser) வடிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விலை: இதன் தோராயமான விலை இந்திய மதிப்பில் ரூ. 61,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தில் வைரலாகும் நெட்டிசன்களின் ட்ரோல்கள் இந்த எந்திரம் இன்னும் வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் இதன் செய்திகள் வைரலாகி வருகின்றன. இதை பார்த்த நெட்டிசன்கள், "சீனா இந்த எந்திரத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பே, நம்ம ஊரில் 'மூட்டைப்பூச்சி கொல்லும் எந்திரத்தை' வடிவேலு கண்டுபிடித்துவிட்டார். சீனா ரொம்ப லேட்" என்று மீம்ஸ்களைப் பறக்கவிட்டு கிண்டல் செய்து வருகின்றனர். அதேவேளையில், சீனாவின் இந்த விசித்திரமான கண்டுபிடிப்பை சிலர் ஆச்சரியத்துடனும் பார்த்து வருகின்றனர்.

The Indian Express15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
கொசுவை கொல்லும் நவீன எந்திரம்... வடிவேலு பாணியை பின்பற்றும் சீனா; என்னென்ன பண்ணுறாங்க பாருங்க
PulseNews சுருக்கம்

தொழில்நுட்ப வளர்ச்சியில் வியக்க வைக்கும் சீனா, கொசுக்களைக் கட்டுப்படுத்த நவீன வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பைப் போன்ற ஒரு கருவியை உருவாக்கியுள்ளது. சீனாவின் சாங்சோ நகரைச் சேர்ந்த ஆய்வகம் ஒன்று 'ஃபோட்டான் மேட்ரிக்ஸ்' எனும் இந்த அதிநவீன கொசு அழிப்பு எந்திரத்தைக் கண்டறிந்துள்ளது.

வான் பாதுகாப்பு அமைப்பு போல செயல்படும் இந்த கருவி, கொசுக்களைக் கண்டறிந்து அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொசுக்களை ஒழிக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology