AI வீடியோவுக்கு copyright இருக்குமா? தெரியாமல் செய்தால் சட்ட சிக்கல் வரலாம்!
தற்போது, இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடகத் தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அனிமேஷன் வீடியோக்கள் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. பல படைப்பாளர்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே மிகவும் பிரபலமான 'மோட்டு பட்லு' கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி, AI மூலம் புதிய வீடியோக்களையும் மீம்களையும் உருவாக்கி வருகின்றனர். இது சட்ட விதிமீறலா தெரிந்துகொள்ளலாம்.

இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் அனிமேஷன் வீடியோக்கள் தற்போது அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, மோட்டு பட்லு போன்ற புகழ்பெற்ற கதாபாத்திரங்களை வைத்து பல படைப்பாளர்கள் ஏஐ மூலம் புதிய வீடியோக்களையும் மீம்களையும் உருவாக்கி பகிர்கின்றனர்.
இத்தகையச் செயல்கள் காப்புரிமை சட்டத்திற்கு உட்பட்டதா அல்லது விதிமீறலாகக் கருதப்படுமா என்பது குறித்து படைப்பாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தெரியாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது எதிர்காலத்தில் சட்ட சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.