PulseNews
தொழில்நுட்பம்

ஆதார் கார்டில் மொபைல் நம்பர் மாற்ற புதிய வசதி – Aadhaar App-ல் செய்வது எப்படி? விபரம் இதோ

அரசாங்க ஆவணங்களிலேயே ஆதார் கார்டு கிட்டத்தட்ட எல்லா சேவைகளைப் பெறுவதற்கும் பயன்படுகிறது. அதிலும் குறிப்பாக ஆதார் கார்டை உங்களுடைய மொபைல் நம்பருடன் இணைத்திருக்க வேண்டும். அப்போதுதான் OTP அடிப்படையிலான சேவையை தடையின்றி பெற முடியும். இதற்கு முன்னர் வரை ஆதார் மையங்களுக்கு சென்று தான் மொபைல் நம்பரை மாற்ற முடியும். ஆனால் இப்போது வீட்டில் இருந்தே ஒரு சில நிமிடங்களில் மாற்றிக் கொள்ளலாம்.

சிலர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு நம்பரைப் பயன்படுத்தி வருவார்கள். இது போன்ற நபர்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் இடையில் தங்களுடைய மொபைல் நம்பரை மாற்றியவர்கள் கட்டாயம் ஆதாருடன் மொபைல் நம்பரை இணைத்திருக்க வேண்டும். இதற்காக ஆதார் ஆப் (Aadhaar App) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் பழைய நம்பரை பயன்படுத்தவில்லை என்றால் உங்கள் புது நம்பரை இந்த அப்ளிகேஷன் மூலமாகவே புதுப்பித்துக் கொள்ளலாம். அப்போதுதான் OTP பெறுவதில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும்.

யார் வேண்டுமானாலும் வீட்டில் இருந்து சில நிமிடங்களில் தங்களுடைய புதிய நம்பரை ஆதாருடன் இணைக்க முடியும். ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. நீங்கள் பழைய நம்பரை மாற்றுவதற்கு முன்னரே இந்தச் செயல்முறையை செய்ய வேண்டும். நீங்கள் பயன்படுத்தி வரும் நம்பரை செயல்பாட்டில் வைத்துக் கொண்டுதான் புதிய நம்பரோடு புதுப்பிக்க முடியும்.

UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக டவுன்லோட் செய்யலாம். ஆனால் மோசடி இணையதளங்கள் அதிகரித்துவிட்ட காரணத்தினால் நீங்கள் டவுன்லோட் செய்வதற்கு முன்னர் அது உண்மையிலேயே UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் தானா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். முதலில் அதிகாரப்பூர்வ ஆதார் ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். உங்கள் ஆதார் நம்பர் மற்றும் பதிவு செய்யப்பட்ட சிம் கார்டை தேர்ந்தெடுங்கள். எல்லாம் முடித்த பின்னர் 6 இலக்க பின் நம்பரை அமைக்க வேண்டும். உங்கள் அக்கவுண்டில் லாகின் செய்து முடித்தவுடன் "மொபைல் நம்பர் அப்டேட்" என்ற சர்வீஸ் இருக்கும்.

அதில் உங்களுடைய புது மொபைல் நம்பரை என்டர் செய்யுங்கள். உங்கள் புதிய மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும். ஓடிபி செயல்முறையை முடிக்க வேண்டும். ஆனால் இந்த செயல்முறைக்கு உங்கள் பழைய நம்பர் இருப்பதும் அவசியம். புதிய நம்பரை புதுப்பிக்கும் போது பழைய நம்பருக்கும் ஒரு OTP அனுப்பப்படும். மொபைல் நம்பரை அப்டேட் செய்ததற்கு கட்டணமாக 75 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த செயல்முறையை முடித்த பின்னர் உங்களுக்கு ஒரு ரெஃபரன்ஸ் நம்பர் வழங்கப்படும். இந்த வசதியை பயன்படுத்துவதற்கு உங்களிடம் பழைய மொபைல் நம்பர் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆதார் கார்டில் மொபைல் நம்பர் மாற்ற புதிய வசதி – Aadhaar App-ல் செய்வது எப்படி? விபரம் இதோ
PulseNews சுருக்கம்

அரசு ஆவணங்களில் மிக முக்கிய அங்கமாக விளங்கும் ஆதார் கார்டில், மொபைல் எண்ணை இணைப்பது அவசியமாகும். அப்போதுதான் ஓடிபி (OTP) வாயிலாக வழங்கப்படும் சேவைகளை எந்தவித தடையுமின்றி பெற முடியும்.

முன்பெல்லாம் ஆதார் மையங்களுக்கு நேரில் சென்று மட்டுமே மொபைல் எண்ணை மாற்ற வேண்டியிருந்தது. தற்போது இந்த புதிய வசதியின் மூலம், வீட்டில் இருந்தபடியே சில நிமிடங்களில் ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ளலாம்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology