E20 பெட்ரோல் பிரச்சனைக்கு மத்திய அரசின் புதிய தீர்வு: வாகன உரிமையாளர்களுக்கு குட் நியூஸ்!

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு வாகன உரிமையாளர்களுக்கும் தற்போது இருக்கும் முக்கியமான பிரச்சனை E20 பெட்ரோல் தான், மத்திய அரசுக்கு செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக இதன் பயன்பாட்டை கட்டாயப்படுத்துகிறது.

ஆனால் வாகன உரிமையாளர்களும், ஆட்டோமொபைல் நிறுவனங்களும் E20 பெட்ரோல் பயன்படுத்துவதன் மூலம் வாகனத்தின் மைலேஜ் குறைவது, இன்ஜின் பாகங்கள் பாதிக்கப்படுவது போன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு இதற்கான முக்கிய தீர்வை கொண்டு வர முடிவு செய்து அதற்கான பணிகளை துவங்கியுள்ளது, இந்த ஒரு நடவடிக்கை கார், பைக் தயாரிப்பு நிறுவனங்கள், உதிரி பாகங்கள் நிறுவனங்கள் முதல் வாகன உரிமையாளர்கள் வரையில் மகிழ்ச்சியில் உள்ளனர்.

E20 பெட்ரோல் மூலம் வாகனங்கள் சேதமடைய முக்கிய காரணம் இதில் இருக்கும் குளோரைடு தான், அதை கட்டுப்படுத்தினால் அதன் பாதிப்புகளை கட்டாயம் குறைக்க முடியும். ஏற்கனவே E20 பெட்ரோலில் குளோரைடு மாசு அளவு 3 ppm-க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற முக்கிய வரம்பு உள்ளது. ஆனால் இதை ஒவ்வொரு எண்ணெய் சுத்திரிப்பு நிறுவனங்களும் தானாக முன்வந்து செய்யப்படும் தர நிர்ணயமாக உள்ளது. இதை கட்டாயமாக்கும் விதிமுறையை உருவாக்கும் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வரும் இதேவேளையில், இதற்கான பணியை இந்திய தர நிர்ணய அமைப்பு (BIS) ஈடுபட்டுள்ளது.

E20 பெட்ரோலில் குளோரைடு அளவு 3 ppmக்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை கட்டாயமாக்கப்பட்டால் இந்தியாவில் பெட்ரோல் விற்பனை செய்யும் அனைத்து நிறுவனங்களும் தங்களுடைய சுத்திகரிப்பு முறையை மாற்றி E20 பெட்ரோலின் தரத்தை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும்.

இந்தியாவில் பல பெட்ரோல் பங்குகளில் E20 பெட்ரோலில் அதிகளவிலான குளோரைடு இருப்பதாகவும், சில பெட்ரோல் முனையங்களில் அதிகப்படியான ஈரப்பதம் (moisture) இருப்பதாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளது. இதன் வாயிலாக வாகனங்களின் இன்ஜின் பாதிக்கப்படும் என்பதையும் விளக்கியுள்ளது. இதற்காக மத்திய அரசு நாட்டின் பல்வேறு பெட்ரோல் முனையங்களில் இருக்கும் டேங்கர்களில் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ததில் குளோரைடு அளவு அதிமாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் வாயிலாகவே தற்போது மத்திய அரசு 3 ppm அளவீட்டை கட்டாயமாக்கப்பட திட்டமிட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் தற்போது E20 பெட்ரோல் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இதுக்குறித்த புகார்கள் அதிகம் வந்த நிலையில் E25 பெட்ரோல் சோதனை மற்றும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வேகம் மத்திய அரசிடம் குறைந்துள்ளது.பெட்ரோலில் எத்தனால் கலப்பது மூலம் மத்திய அரடுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு குறைந்துள்ளது. இதேபோல் எத்தனால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் காரணத்தால் விவசாயிங்களுக்கும் அதிகப்படியான வருமானமும் கிடைக்கிறது.

இந்தியாவில் வாகன உரிமையாளர்கள் மத்தியில் E20 பெட்ரோல் பயன்பாடு தொடர்பான கவலைகள் நிலவி வரும் நிலையில், மத்திய அரசு புதிய தீர்வை அறிவித்துள்ளது. செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அரசு இத்தகைய பெட்ரோல் பயன்பாட்டை கட்டாயமாக்கி வருகிறது.
இருப்பினும், இந்த நடவடிக்கை வாகன உரிமையாளர்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் புதிய தீர்வை மத்திய அரசு முன்வைத்துள்ளது. இது வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.