PulseNews
தொழில்நுட்பம்

ஒரே ஒரு தடுப்பூசி போதும்: டெங்கு காய்ச்சலுக்கு குட்பை; இந்தியாவில் அறிமுகமாகும் 'கியூடெங்கா'

இந்தியாவில் ஆண்டுதோறும் பருவமழை காலத்தில் அச்சுறுத்தலாக உருவெடுக்கும் டெங்கு காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய தடுப்பூசி தயாராகிவிட்டது. ஜப்பானின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனம் 'டேக்கடா பயோபார்மாசிட்டிகல்ஸ்' (Takeda Biopharmaceuticals) உருவாக்கி உள்ள 'கியூடெங்கா' (QDENGA) என்ற தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (DCGI) முறைப்படி பச்சைக்கொடி காட்டியுள்ளார். இந்தியாவில் அங்கீகரிக்கப்படும் முதல் டெங்கு தடுப்பூசி இதுவேயாகும். தடுப்பூசியின் சிறப்பம்சங்கள் என்ன? டெங்குவை உண்டாக்கும் DENV-1, DENV-2, DENV-3, மற்றும் DENV-4 ஆகிய 4 வகை வைரஸ் ரகங்களுக்கும் எதிராக இது சக்திவாய்ந்த பாதுகாப்பை வழங்குகிறது. உங்களுக்கு இதற்கு முன் டெங்கு காய்ச்சல் வந்திருக்கிறதா? இல்லையா? என்ற எந்த முன் பரிசோதனையும் (pre-vaccination testing) செய்யத் தேவையில்லை. நேரடியாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். யாரெல்லாம் போடலாம்? 4 வயது குழந்தைகள் முதல் 60 வயது பெரியவர்கள் வரை அனைவரும் இத்தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஊசி செலுத்தும் முறை & விலை எவ்வளவு? தோலுக்கு அடியில் (Subcutaneous) ஊசியாகச் செலுத்தப்படும் இந்தத் தடுப்பூசியை, 3 மாத இடைவெளியில் தலா 0.5 மி.லி வீதம் 2 டோஸ்களாக எடுத்துக்கொள்ள வேண்டும். இத்தடுப்பூசியின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல 'பயோலாஜிகல் இ' நிறுவனத்துடன் இணைந்து, ஆண்டுக்கு 5 கோடி டோஸ்களை உற்பத்தி செய்ய டேக்கடா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இந்திய மக்களுக்கு மிகவும் மலிவான விலையிலேயே இது கிடைக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இலவசத் தடுப்பூசி திட்டத்தில் இது சேர்க்கப்பட்டால், சாமானிய மக்களுக்கும் மிக எளிதாகச் சென்றடையும். மருத்துவப் பரிசோதனைகளில் கிடைத்த முடிவுகள் உலகளவில் சுமார் 28,000-க்கும் மேற்பட்ட நபர்களிடம் 19 கட்டப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, இதன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 20,000 பேரிடம் நடத்தப்பட்ட முக்கிய கட்டப் பரிசோதனையில் (TIDES / DEN-301) கிடைத்த முடிவுகள் மலைக்க வைக்கின்றன: 2 டோஸ் போட்டுக்கொண்ட 12 மாதங்களில், ஆய்வகத்தில் உறுதி செய்யப்பட்ட டெங்கு காய்ச்சலுக்கு எதிராக 80.2% பாதுகாப்பை அளிக்கிறது. 18 மாத கால ஆய்வில், டெங்கு பாதிப்பினால் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை 90.4% அளவுக்கு இது தடுக்கிறது. 4.5 ஆண்டுகள் வரையிலான தரவுகளின்படி, மருத்துவமனை அனுமதியைத் தடுப்பதில் 84.1% செயல்திறனும், சுமார் 7 ஆண்டுகள் வரை 4 வகை டெங்கு வைரஸ்களுக்கு எதிராகவும் உறுதியான பாதுகாப்பை வழங்குகிறது. இந்தியாவில் 4 முதல் 60 வயதுடையவர்களிடம் நடத்தப்பட்ட பிரத்யேகப் பரிசோதனையிலும் (DEN-302), குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது மிகவும் பாதுகாப்பானது என்பது நிரூபணமாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) அங்கீகாரம் உலக சுகாதார அமைப்பும் இந்த 'கியூடெங்கா' தடுப்பூசிக்குத் தன் ஒப்புதலை அளித்துள்ளது. சர்வதேச தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் விதிகளை இது பூர்த்தி செய்துள்ளதால், யுனிசெப் (UNICEF) போன்ற பன்னாட்டு அமைப்புகள் மூலம் உலக நாடுகளுக்கு விநியோகிக்கவும் வழி பிறந்துள்ளது. இனி டெங்கு காய்ச்சல் குறித்த பயமின்றி வாழ இந்த 'கியூடெங்கா' தடுப்பூசி ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது

The Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology