அனைத்து எம்.எல்.ஏ-களுக்கும் அரசு வாகனம், உதவியாளர்: விஜய் அறிவிப்புக்கு குவியும் பாராட்டு
சட்டப்பேரவையில் 110 வித்தின் கீழ் முதல்வர் விஜய் இன்று பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தொகுதி சார்ந்த ஆய்வு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும். இதற்காக மாதம் தோறும் 75 ஆயிரம் ரூபாய் வாகன படியாக வழங்கப்படும். மேலும் பேசிய முதல்வர் விஜய், எம்.எல்.ஏ-க்கள் உதவியாளர் ஒருவரை நியமித்து கொள்ளலாம்; இதற்கு அரசு சார்பில் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதி சார்ந்த பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக, அரசு சார்பில் அவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். இதற்காக மாதம் தோறும் 75 ஆயிரம் ரூபாய் வாகனப் படியாக வழங்கப்படும்.
மேலும், எம்.எல்.ஏ-க்கள் தங்களுக்கு உதவியாளர் ஒருவரை நியமித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உதவியாளரின் ஊதியத்திற்காக அரசு சார்பில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புகளுக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.